பயணம் பலவிதம்..! அழகழகான வித்யாசமான நகரங்களை சுற்றிப் பார்க்கும் பயணங்களுக்கு முடிவு ஏது?அவற்றில் கிடைக்கும் அனுபவங்கள் பலப்பல! தமிழ்நாட்டில் வங்கி அதிகாரியான என் அப்பாவுடன் சென்னை, ஈரோடு, வேலூர், கரூர், முசிறி, நாகர் கோவில் என்று சுற்றிப் பார்த்ததோடு ஒவ்வொரு ஆண்டு விடுமுறையிலும் குடந்தை, தஞ்சை, ஊட்டி, திருப்பதி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, மேட்டூர், சாத்தனூர் என்று தமிழகத்தின் பல ஊர்களுக்கும் அப்பாஅம்மா தம்பிகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த நாட்கள் இன்று நினைவில் மட்டுமே! கண்டு ரசித்த பிரபலமான இடங்கள் பலப்பல! வணங்கி வரம் வேண்டிய திருக் கோயில்கள் நிறைய்...ய! அப்பொழுதெல்லாம் மொபைல் காமிரா இல்லாததால் இன்றுவரை கண்டு ரசித்த காட்சிகள் கண்ணிலும் மனதிலும் மட்டுமே தெரிகிறது! திருமணத்திற்கு பிறகு தமிழ்நாட்டைத் தாண்டி கணவரோடு பல ஊர் வாசம்..பல இடங்களுக்கு பயணம். உத்திரப் பிரதேசம் (மதுரா ஆக்ரா) மகாராஷ்டிரம் (மும்பை கோலாப்பூர்) பிள்ளைகளுடன் கர்நாடகா (பெங்களூர்) மத்திய பிரதேசம் (போபால்)பஞ்சாப்(சண்டிகர்)பெண்ணோடு பீகார் (சமஸ்திபூர்), ஆந்திரா (ஹைதராபாத்) என்று பல மாநில வாசம்..! பிள்ளைகள் வ...