ஆட்டம் எதுவரை?!
என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பருவமும் ஒரு ஆட்டம்தான்! ஒன்றில் பந்தாக..அடுத்ததில் பேட்( bat)டாக..மற்றொன்றில் ஆடுபவராக..இன்னொன்றில் மைதானமாக! இறுதியில் ஆட்டம் முடிந்து வெற்றியா தோல்வியா என்பதை தீர்மானிப்பவன் அந்த இறைவன்தான். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா..! பிறந்து 15 வயதுவரை சீரும் சிறப்புமாக வளர்க்கப் படுகிறோம். நம் ஆசைகள் மறுக்கப் படுவதில்லை. கேட்குமுன்பு எல்லாம் கிடைக்கும்.பெற்றோர் ஆலோசனைபடி படித்து முடித்து ஓரளவு உலகம் பற்றி அறிந்து கொள்கிறோம். எனினும் சரியான புரிதல் கிடைப்பதில்லை. 30வயது வரை..அடுத்து மேலே என்னபடிப்பது..என் வேலைக்குச் செல்வது..நாம் ஒரு முடிவெடுக்க பார்த்தவர் பழகுபவர் அவரவர் அனுபவம் கூற, எதிலும் குழம்பிப் போகாமல் நம் வாழ்வை தீர்மானிக்கும் பருவம் இதுதான். இங்குதான் நம் ஆசைகள் பந்து போல் அடிபடுகிறது! நம் ஆசைப்படியா..பெற்றோர் விருப்பப்படியா என்ற மன வேற்றுமைகள். ஆசை முறையானபடி நிறைவேறுபவர்கள் வெல்கிறார்கள். அடுத்தது வாழ்வில் முக்யமான திருமணகாலம். அதிலும் காதல் மோதல் என்று பல நிலைகள். திருமணங்கள் யாரால் நிச்சயிக்கப் பட்டாலும் விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் வெற்...