இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

படம்
அன்புக் கவிஞரே! தங்கள் உருவம் எளிது! பாடும் குரலோ இனிது! என்றும் எமது கண்களில் தெரியும் உங்கள் புன்னகையும் காதுகளிலும் ஒலிக்கும்  தேன் அமுதக் குரலும் தங்கள் இனிய குணங்களால் எம் உள்ளத்தில் வாழ்கிறீர்! வாழ்க நீ பல்லாண்டு! உலகம் உள்ளவரை உன் பாடல்கள் வாழும்!

3.பிள்ளை வரம் வேண்டி..(100வரிகதை)

படம்
இன்று வெள்ளிக்கிழமை. காலை கோவிலில் யாரோ செய்த அன்னதான சாப்பாடு கண்களைக் கிறங்க வைக்க அசந்து போய்த் தூங்கி விட்டார் இசக்கிமுத்து.  மாலை நேரம் பக்தர் கூட்டம் அதிகம் வந்தால் சில்லறைகள் கூட சேரும் என்ற அவசரத்தில் தான் வழக்கமாக அமரும் இடம் நோக்கி வேகமாகச் சென்றார். அங்கு புதிதாக ஒரு கிழவி அழுக்கில்லாத புடவையுடன் அவர் இடத்தில்! ...ஏம்மா நீ பிச்சைக்கு புதுசா? நல்ல டிரஸ் போட்டிருக்க. எங்களுக்கு போட்டியா இங்கயும் வந்துட்டயா?... ...அட போப்பா. முப்பத்தஞ்சு வருஷம் முன்னாடி பிள்ளை வரம் வேண்டி இதே கோவில்ல 48 நாள் பிச்சை எடுத்த அனுபவம் இருக்குப்பா... அதிர்ச்சியில் ஆடிப் போய்விட்டார் இசக்கிமுத்து!

உணவு

படம்
பசிக்கு உணவு சாப்பிடும்போது அதன் ருசியை நாம் உணர்வதில்லை.. பசியில்லாமல் சாப்பிடும்போது அது ருசியாக இருந்தாலும் சாப்பிட முடிவதில்லை. ****** உணவு உடை இருப்பிடம் தந்து நம்மைக் காப்பாற்றும் இயற்கையை நாம் மாசுபடுத்துவது நம்மையே சிறிதுசிறிதாக அழித்துக் கொள்வது போல் என்பதை அறியவில்லையே நாம்..

அப்பா உங்களுக்காக...

படம்
  அப்பா உங்களுக்காக... அப்பா..அவர் ஒரு சரித்திரம் அப்பா என்றதும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாசமான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும் போதே மனம் சிலிர்க்கிறது..கண்கள் குளமாகிறது..! முதல் குழந்தை பெண்தான் வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டு பிறந்தவளாம் நான் என்று என் அம்மா சொல்வார். எனக்கு கீழே மூன்று தம்பிகள் இருந்தாலும் என் மீது ஒரு தனி பாசம் என் அப்பாவுக்கு என்பதை நான் பலமுறை உணர்ந்ததுண்டு. என் இரண்டு வயதிலிருந்தே மாலையில்  அலுவலகத்திலிருந்து அப்பா எப்பொழுது வருவார் என்று வாசலிலேயே காத்திருப்பேனாம். அப்பாவும் பிஸ்கட் சாக்லேட் என்று ஏதாவது வாங்கி வருவாராம். அப்பா வந்ததும் அன்று நடந்ததெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டே அவரை உடை மாற்ற விடுவேனாம்! நான்கு வயது வரை வெளியில் சென்றால் அப்பாவை என்னைத் தூக்கி வரச் சொல்லி அடம் செய்வேனாம்! நான் படிக்கும் நாட்களில் எனக்கு கணக்கில் சந்தேகம் வந்தால்(எனக்கு கணக்கு வராத பாடம்!) பொறுமையாக சொல்லித் தருவார். எனக்கு கல்லூரி சென்று படிக்க ஆசை இருந்தும் அப்பாவிற்கு இஷ்டமில்லாததால் அனுப்ப வில்லை. நானும் அத

1.கைக்கடிகாரம்

படம்
அப்பாவின் முத்தான பத்து.. அப்பா அந்த நாளைய சாவி கொடுக்கும் கைக்கடிகாரம்தான் கட்டுவார். நான் வெளிநாடு சென்று வந்தபோது ஒரு கைக்கடிகாரம் வாங்கி வந்து கொடுத்தேன். ஆசையாகக் கட்டிக் கொண்டார். அதில் ஸெல் ( cell) தீர்ந்ததும்...எனக்கு இதெல்லாம் சரிவராது. தினமும் கடிகாரத்துக்கு கீ கொடுப்பதுதான் எனக்கு பிடிக்கிறது என்றாரே பார்க்கணும்! நேரம் தவறாத என் அப்பா எங்கு சென்றாலும் சரியான நேரத்துக்கு செல்வார்.

2.மூக்கு கண்ணாடி

படம்
  2.மூக்கு கண்ணாடி படிக்கும்போது மட்டுமே கண்ணாடி போடும் என் அப்பா படித்து முடித்ததும் அந்தக் கண்ணாடியை துடைத்து  அதன் கூட்டில் வைத்து அதை அதற்கான இடத்தில் வைப்பதை தவற மாட்டார். கண்ணைப் பாதுகாப்பது போல் கண் பார்வைக்கு அவசியமான கண்ணாடியையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பார் என் அப்பா.  அவ்வப்போது நான் கண்ணாடியை எங்காவது வைத்து விட்டுத் தேடும்போது அப்பா நினைவு வரும்! 

3.பேன்ட்

படம்
என் அப்பா எப்பொழுதும் வேட்டிதான் கட்டுவார். ஒரு வங்கி அதிகாரியாக இருந்தும் அப்பா பேண்ட் போட்டதில்லை. கல்யாணத்தில் மாப்பிள்ளை அழைப்பிற்குக் கூட வேட்டி கட்டியவர் எங்கப்பாவாகத்தான் இருக்கும்! தனக்கு வேட்டிதான் வசதி என்பார்.  வெள்ளை வெளேர் பாலிஸ்டர்வேஷ்டியில் மிடுக்காகத் தெரிவார் என் அப்பா.அலுவலக மீட்டிங்குகளுக்கும் வேட்டிதான் அணிந்து செல்வார்! ...அப்பா பேண்ட்டில் உன்னைப் பார்க்க ஆசையா இருக்கு...என்றால், ...எனக்கு ஆசை இல்லையே பேண்ட் போட...என்று சிரிப்பார்!  'வேட்டிதான் பாரம்பரிய உடை. அதுதான் ஆண்களின் அழகான உடை' என்பது என் அப்பாவின் மாற்ற முடியாத கருத்து!