மனம்மனம் ஒரு குரங்கு. ஒரு நொடி இங்கிருக்கும்..

மறுநொடி அடுத்த ஊருக்குச் செல்லும்! 

தெய்வபக்தியில் திளைக்கும்.. அடுத்த நொடி காமத்தை நாடும்!

மனம் ஒரு கோவில். அதில் நல்ல எண்ணங்களும் உண்டு..  தீய எண்ணங்களும் உண்டு!

*****


மனிதன் பிறந்தபோதே 

அவன் மனமும்

வளர்ந்தது..!


குழந்தையாய் இருந்தபோது

குழந்தை மனம் இருந்தது!குழந்தை வளரும்போது குழப்பமும் வளர்ந்தது!


உருவமும்  இன்றி இருக்கும் இடமும் தெரியாமல் மனிதனை ஆட்டிப் படைக்கும் மனம்!


மனம் ஒரு நிமிடம் பூஞ்சோலையாகிறது..அடுத்த கணம் போர்க்களமாகிறது!


நம்  மனம் ரகசியங்கள் நிறைந்த குகை!

அது எப்பொழுது மூடும் என்று திறக்கும் என்பதை யாருமறியார்!


கருத்துகள்