இடுகைகள்

மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாற்றம்

படம்
மாற்றம் நிறைந்ததுதான் வாழ்க்கை.. மாற்றங்கள் வரும்போது தடுமாற்றம் வருவது இயற்கை.. சிலரால் ஏமாற்றங்கள் வரும்போது நாம் மாற்றிக்கொள்ள வேண்டியது நம்மனதை.. பருவமாற்றங்கள் மட்டுமே நிரந்தரமானது..

நீண்ட வரிசையில்..

படம்
ரேஷன் கடையில் நீண்ட வரிசை. சாமான்களை கடைக்குப் போய் நின்று வாங்கிவர வேண்டியது ராமாயியின் வேலை. உடல் தள்ளாடும் எழுபது வயதில் நல்ல வெயிலில் நிற்பது எப்படி முடியும்? சாமான்களை வாங்கிப் போனால்தான் அவளுக்கு சாப்பாடு. முடியவில்லை என்றாலோ தண்டச்சோறு என்று மருமகள் வார்த்தைகளாலேயே கொன்று விடுவாள்.  ஒரே மகன். அவனோ கண்டுகொள்ளாமல் போய்விடுவான். பெற்றதாய் என்ற பரிவு கூட கிடையாது. காலையில் குடித்த கஞ்சி எப்பவோ ஜீரணமாகி வயிறு கபகபவென்று பசித்தது.  போகும் வழியிலிருந்த ஆலயத்தில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் வரிசை. ஓய்ந்துபோய் நின்றவளின் அருகில் வந்த ஒரு மனிதர் அவளிடம் ஒரு சாப்பாடு பொட்டலம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். 'நீங்க மகராசனா இருக்கணும் சாமி' என்ற ராமாயி அவர் உருவத்தில் தன் மகனையே கண்டாள்!!

தயக்கம்

படம்
நமக்குள் இருக்கும் திறமை வெளிப்பட தயக்கம் கூடாது! நம்மால் முடியும் என்ற உறுதியே தயக்கத்தின் எதிரி ! ஒவ்வொருமுறை எழுந்து நிற்கும்போதும் குழந்தை தயங்காமல் எழுந்து நிற்பதுபோல்  மயக்கம் நீக்கி துணிந்தால் சாதிக்கலாம்!

உங்கள் சிந்தனை உங்கள் எழுத்து..

படம்
  குழந்தை வளர்ப்பு..  எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.  அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே.  இதிலிருந்து அன்னைதான் குழந்தைகளை சரியாக வளர்ப்பவள்  என்பதை சொல்லியிருக்கிறார் கவிஞர்!  குழந்தைகள் பெரும்பாலான நேரம் அன்னையருடன் இருப்பதால் அவ்விதம் சொல்லியிருப்பார் போலும்! ஒரு பெண்ணுக்குத்தான் பொறுமை, அன்பு, தவறுகள் செய்யக் கூடாது என்று சொல்லி திருத்தும் திறன்கள் அதிகம் என்பது  தெரிகிறது. அந்த நாளில் என்  பெற்றோர் எங்களை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார்கள்.12 வயது ஆகிவிட்டால் எந்தப் பையனிடமும் பேசக்  கூடாது, பழகக் கூடாது என்பது அந்நாளைய கட்டுப்பாடு. காதல் வந்துவிடும், மனம் கெட்டுப் போய்விடும் என்ற பயத்தில் காலேஜுக்கு கூட பெண்களை அனுப்பாத காலம் அது! குமுதம் விகடன் போன்ற புத்தகங்களைக் கூட என் அம்மா படித்துவிட்டு ஒளித்து வைத்து விடுவார்! MGR படங்களுக்கு தடா! குடும்பப் படங்களுக்கு மட்டுமே அழைத்து செல்வார்கள். இக்காலத்திலோ எதிலும் ஒளிவு மறைவு இல்லை. உள்ளங்கையில் சகலமும் தெரிந்து கொள்கிறார்கள். இதையெல்லாம் செய்தால் என்ன தவறு  என்ற எண்ணம் மனதில் தோன்ற, அதுவே அவர்க

எங்கள் கருத்து உங்கள் எழுத்து.

படம்
பிரசவத்தின்போது உடன் இருந்தவர்களுக்கு நன்றி கூறல். இன்னொரு தாய்..! நாங்கள் கரூரில் இருந்தபோது எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு சமைக்க உதவியாக அறிமுகமானார் சீதாலக்ஷ்மி மாமி. வந்த நாள் முதலே எங்களுடன்  ஏதோ போன ஜென்ம பந்தம் போல் மிகவும் ஒன்றிவிட்டார். என் அம்மாவை சொந்தப் பெண்ணாக எண்ணி நடந்து கொள்வார்.என் அம்மாவும் சிறு வயதில் தாயை இழந்ததால் அவரை அம்மா போன்றே பாசத்துடன் இருப்பார். கரூரிலிருந்து என் அப்பாவுக்கு முசிறி மாற்றலாகியது. அங்குதான் என் திருமணம் நடைபெற்றது. மாமி ஒருவாரம் முன்பே வந்து கல்யாண சீர்முறுக்கு பட்சணமெல்லாம் தானே செய்தார். சமையல் மற்றும் வீட்டு வேலைகளைத் தானே பார்த்துக் கொண்டதால் அம்மாவுக்கு வெளிவேலைகள் செய்வது சுலபமாயிற்று. திருமணம் முடிந்தும் சில நாட்கள் இருந்துவிட்டே சென்றார். திருமணமாகி இரண்டு வருடம் கழிந்ததும் நான் பிரசவத்திற்காக என் பெற்றோர் இருந்த நாகர்கோவிலுக்கு வந்தேன். 'என் பேத்தி பிரசவத்திற்கு நான்தான் வந்து செய்வேன்' என்று நான் சென்ற அடுத்தவாரமே வந்துவிட்டார்.சிரிக்க சிரிக்கப்பேசிக் கொண்டு,  மாமாவுடன் அந்யோன்யமாக இருக்கும் விஷயங்களை வெளிப்படையாக சொல்லி&

உங்கள் சிந்தனை உங்கள் எழுத்து

படம்
  மகத்தான ஒரு உறவு! அன்புள்ள மாமா... உறவுகளில் யாரை ரொம்பப் பிடிக்கும் என்றால் யோசிக்காமல் மாமா என்போம். அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான்.  பள்ளிகளில் விடுமுறை  விட்டால் உடன் கிளம்புவது மாமா வீட்டுக்குதான்!  தன் சகோதரி குழந்தைகளுக்கு  அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்கள் முகத்தில் அதிக மகிழ்ச்சியை பார்ப்பது தாய்மாமன்தான். இன்றும் மாமா வருகிறார்  என்றால் குழந்தைகளின் சந்தோஷம் சொல்லிமாளாது! தம் சகோதரிகள் குழந்தைகளின் ஒவ்வொரு நிகழ்விலும், சித்தப்பா பெரியப்பாக்களை விட மாமாவின் பங்கு முக்யமானது. காது குத்துவதிலிருந்து,  திருமணத்திற்கு மாலை எடுத்துக் கொடுப்பது வரையிலும் அனைத்திலும்  மாமாவுக்கே முதல் மரியாதை. இப்பொழுது ஒரு குழந்தை போதும் என்று நினைப்பவர்களுக்கு சகோதரபாசம் பற்றி தெரியாத தோடு, இந்த மாமா சித்தி பெரிமா உறவெல்லாம் தெரியவே வழியில்லாதது துரதிர்ஷ்டமே. எல்லா விஷயங்களுக்கும் பாதுகாப்பாக "பேக்அப்" (Backup) வைத்துக்கொள்ளும்  மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு மாமா அத்தை போன்ற ஒரு பாசமான backup இல்லாத பாதுகாப்பற்ற நிலையை  தம் குழந்தைளுக்கு உருவாக்குக

நொடி

படம்
என் குட்டி செல்லப் பெண்ணே!  உன் பட்டுக் கைகளைத் தொட்ட நொடியில் என் உடல் பரவசமாகிறதே! உன்னை முத்தமிட்ட நொடியில் கண்கள் மயங்குதே! என்ன தவம் செய்தேன் இந்த நொடி என்று உடல் புல்லரிக்கிறதே! இந்த நொடி போல் ஒவ்வொரு நொடியும் இருக்காதா என ஏங்குகிறேன்!

வெள்ளை

படம்
  அமைதியின் அடையாளம் வெள்ளைபுறா..! சமாதானத்தின் சின்னம் வெள்ளைக்கொடி..! மனமும் உடலும் குளிர்வது வெண்ணிலவால்..! நல்ல உள்ளத்தின் மற்றுமொரு பெயர் வெள்ளைமனம்..! எழுதினால் பளிச்சென காட்டும் வெள்ளைக் காகிதம்..! வயது முதிர்ந்தவர்க்கு அழகு தருமே வெள்ளை முடி..! அரசியல்வாதியை அடையாளம் காட்டும்  வெள்ளை வேட்டி..! உணவு ருசிக்க சேர்க்க வேண்டும் வெள்ளை உப்பு..! மங்கையர் மனம் மயக்குமே  மல்லியும் முல்லையும்..! வெள்ளை நிறத்துக்கு வேறெதுவும் நிகரில்லை..!

பயத்தில் அலறிய கனவு

படம்
 #எங்கள் கருத்து உங்கள் எழுத்து.. #நான் எழுதுகிறேன் பயத்தில் அலறிய  கனவு கனவு..இது எல்லா மனிதர்க்கும் வரக் கூடியது. மனித மனத்தின் ஏக்கங் களும், தாக்கங்களுமே கனவாக வெளிப்படுகிறது என்கிறது ஆய்வு. கனவுகளைப் பற்றி முதன்முதலாக ஆராய்ச்சி செய்து கூறியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட்(Sigmund Freud).நாம் ஆசைப்படும் விஷயங்கள் நினைவில் நடக்காதபோது அவை கனவுகளாக வெளிப்படுமாம். அவையே அவற்றை நிறை வேற்றிக் கொள்ள நமக்கு ஊக்கமும் தரும். கனவு காணாதவர் யாருண்டு? ஒவ்வொரு வருக்கும் ஒரு கனவு! எனக்கு வரும் கனவுகள் தூக்கம் கலைந்ததுமே மறந்துவிடும். இதுவும் நலலதற்கே என்று நினைப்பேன்! அதை நினைத்து கவலைப்பட வேண்டாமே! ஆனால் மிகச்சில கனவுகளே நினைவில் இருக்கிறது. எனக்கு தண்ணீரைக் கண்டால் பயம். ஆறு, குளங்களில் குளிக்க தெரியாது...குளிக்கவும்  பயம்! திருமணத்திற்குப் பின்  வைத்தீஸ்வரன் கோவில் , திருப்பதி என்று எந்தக் கோவிலுக்கு போனாலும் குளத்தில் கால் அலம்பும் போது வழுக்கி விழுந்து எழுவேன்! என் கணவர் பயத்தில் என் அருகிலேயே நிற்பார்! காசிக்கு சென்றபோது கட்டாயம் குளிக்க வேண்டிய நிர்ப்பந்தம்! படியில் அமர்ந்து சொம்பில் மொண்டு குளித்த

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.

 #வண்ணங்களே எண்ணங்களாய்.. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.. "வனிதா! சாயந்திரம் ஐந்து மணிக்குள் வந்துடும்மா! மறந்துடாதே!" "ப்ச்! மறுபடியும் பெண் பார்க்கும் படலமா? இந்த ஜன்மத்தில் கல்யாணம் நடக்கப் போறதில்ல. நீ வீணா ஸொஜ்ஜி, பஜ்ஜின்னு வேஸ்ட் பண்ற! இந்தக் காலப் பையன்களெல்லாம் பொண்ணு லைலா மாதிரி இருக்காளா, ஐஸ்வர்யா மாதிரி இருக்காளான்னு தேடறாங்க. என்னைப் போய் எவனம்மா கல்யாணம் செய்துப்பான்!" வனிதா  கையில் ஒட்டுவது போல் நல்ல கருப்பு.  சப்பையான மூக்கு. அகல நெற்றி. அழகு குறைவு. அவளுக்கு அடுத்து பிறந்த சுனிதாவும், கடைக்குட்டி ஸவிதாவும் நல்ல சிவப்பு. ஒரு முறை இவள் இருப்பதை அறியாமலே இவளை கருப்பி என்று பேசியதை கேட்டிக்கிறாள். எங்கு சென்றாலும் அவர்கள் இருவரும் செல்வார்களேயன்றி வனிதாவைக் கூப்பிட மாட்டார்கள். சிறு வயதிலேயே வீட்டிலும், பள்ளியிலும் ஒதுக்கப்பட்ட வனிதா படிப்பில் முழுக்கவனமும் செலுத்தி முதல் மாணவியாகத் தேறினாள். பி.காம் இறுதியாண்டு படிக்கும்போது வங்கித் தேர்வு எழுதினாள். இண்டர்வியூவில் அவள் படிப்பிற்கே முதலிடம் கிடைத்தது. வங்கியில் சேர்ந்தாள். வங்கியில் அருணாவைத் த

அன்புப் பாலம்

படம்
  #இந்தவார நான் எழுதுகிறேன் சவால்!! "வ்ருஷாலி! அவளை வெளியே போகச் சொல்லு. நான் ராக்கியெல்லாம் கட்டிக்கொள்ள தயாராக இல்லை. எனக்கும், அவளுக்கும் எந்த உறவும் இல்லை" ராகேஷ் கோபத்துடன் வெளியே சென்று விட்டான். ஷீலாவுக்கு அழுகை வந்து விட்டது. வ்ருஷாலியின் தோள் மேல் சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டாள். "அண்ணி! நான் என்ன பெரிய தப்பு செய்து விட்டேன்? என் மனதுக்குப் பிடித்தவரைக் கல்யாணம் செய்து கொண்டது தப்பா? "அழாதே ஷீலா! நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். உன் அண்ணன் மனதை மாற்றவே முடியவில்லை. நான் என்னம்மா செய்வது?" வ்ருஷாலியின் இயலாமை அவள் பேச்சில் தெரிந்தது. "நான் இதுவரை ஒரு வருஷம் கூட ரக்ஷா பந்தனுக்கு அண்ணனுக்கு ராக்கி கட்டி, திலகம் வைக்காமல் இருந்ததில்லை. அண்ணன் இந்த ஒன்பது மாதத்தில் கொஞ்சமாவது மனம் மாறியிருப்பார் என்று நினைத்து தான் வந்தேன்" மனசு தாங்காமல் விசும்பினாள் ஷீலா. "நல்ல நாளும் அதுவுமா அழாதே ஷீலா. உள்ளே வா சாப்பிடு.... பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டு வெறும் கையோடு போகக் கூடாது." "வேண்டாம்..நான் வரேன் பாபி" ஏமாற்றத்துடன் திரும்ப

வெயில்

படம்
துணிகளை நாம் துவைத்து காயப் போடுவோம்!நம்மைத் துவைத்துக் காயப் போடும் கோடை வெயில்!குளங்களை வறட்சியாக்கும் படபடக்கும் வெயில்!மரங்களை மொட்டையாக்கும் மஞ்சள்நிற வெயில்! நிலங்களை வெடிக்க வைக்கும் இரக்கமற்ற வெயில்! குடைக்கும் காலணிக்கும் மட்டுமே இரங்கும் வெயில்! விழிகள் சோர்ந்து வீடு வரும் நேரத்தை விரைவாக்கும் இந்தக் கோடை நேர வெயில்!

பயத்தில் வந்த கனவு

படம்
  #எங்கள் கருத்து உங்கள் எழுத்து..#நான் எழுதுகிறேன் பயத்தில் வந்த  கனவு கனவு..இது எல்லா மனிதர்க்கும் வரக் கூடியது. மனித மனத்தின் ஏக்கங்களும், தாக்கங்களுமே கனவாக வெளிப்படுகிறது என்கிறது ஆய்வு. கனவுகளைப் பற்றி முதன்முதலாக ஆராய்ச்சி செய்து கூறியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட்(Sigmund Freud).நாம் ஆசைப்படும் விஷயங்கள் நினைவில் நடக்காதபோது அவை கனவுகளாக வெளிப்படுமாம். அவையே அவற்றை நிறைவேற்றிக் கொள்ள நமக்கு ஊக்கமும் தரும்.கனவு காணாதவர் யாருண்டு? ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு! எனக்கு வரும் கனவுகள் தூக்கம் கலைந்ததுமே மறந்துவிடும். இதுவும் நலலதற்கே என்று நினைப்பேன்! அதை நினைத்து கவலைப்பட வேண்டாமே! ஆனால் மிகச்சில கனவுகளே நினைவில் இருக்கிறது. எனக்கு தண்ணீரைக் கண்டால் பயம். ஆறு, குளங்களில் குளிக்க தெரியாது...குளிக்கவும் பயம்! திருமணத்திற்குப் பின்  வைத்தீஸ்வரன் கோவில் , திருப்பதி என்று எந்தக் கோவிலுக்கு போனாலும் குளத்தில் கால் அலம்பும்போது வழுக்கி விழுந்து எழுவேன்! என் கணவர் பயத்தில் என் அருகிலேயே நிற்பார்! காசிக்கு சென்றபோது கட்டாயம் குளிக்க வேண்டிய நிர்ப்பந்தம்! படியில் அமர்ந்து சொம்பில் மொண்டு குளித்தேன்! யா

என் மகிழ்ச்சி பேரக் குழந்தைகளுடன்..

படம்
நான் ஒரு பெண்ணாகப் பிறந்ததில் அளவற்ற மகிழ்ச்சி அடைவதுடன் , அவ்வப்போது அதை ஆனந்தமாக அனுபவிக்கவும் தவறியதில்லை. நம் குழந்தைகளிடம் காட்டும் கண்டிப்பை நம் பேரக்குழந்தைகளிடம் நம்மால் காட்ட முடிவதில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும் என் பிள்ளை வயிற்று பேத்தி ப்ரீத்தி மிகவும் புத்திசாலி. நானும் ப்ரீத்தியும்  நிறைய பேசுவோம். என்னிடம் நிறைய கேள்விகள் கேட்பாள். கதைகள் சொல்வேன். ஒருமுறை அவளுக்கு பாரி கதையை சொன்னேன். 'அந்த காலத்தில் பாரி என்ற அரசன் ஒருவர் பரம்பு என்ற நாட்டை ஆண்டு வந்தார். அவருக்கு இயற்கையை ரசிக்கப் பிடிக்கும்' 'இரு பாட்டி.. இயற்கைன்னா?' ஆங்கில மீடிய குழந்தைகளுக்கு தமிழ் புரிவதில்லையே! 'இயற்கைன்னா nature.புரிஞ்சுதா?' 'ஓ..புரிஞ்சுது. அதாவது beautiful flowers, cute animals, big trees அதல்லாம்தானே?' 'ஆமாம். அவர் அடிக்கடி காட்டுக்கு போய் மரம் செடி கொடியல்லாம் ரசிச்சுட்டு வருவார்' 'அப்டீன்னா?' 'Enjoy பண்றதுனு அர்த்தம். அப்படி ஒரு முறை தன் தேர்ல ஏறி காட்டில் பாரி போய்க் கொண்டிருந்தபோது ஒரு முல்லைப்பூ கொடி ஒண்ணு கீழ விழுந்து கிடந்தது.' &

அப்பா...

படம்
  அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாசமான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும்போதே மனம் சிலிர்க்கிறது. என் அப்பாவுக்கு என்னிடம் ரொம்ப ஆசை என்பார் என் அம்மா. முதல் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்ற என் அப்பாவின் ஆசைப்படி நான் பிறந்ததால், எனக்குப் பின் மூன்று சகோதரர்கள் பிறந்தாலும், என் அப்பாவுக்கு என்னிடம் தனிப் பாசம் உண்டு என்பதை நான் பலமுறை உணர்ந்து அனுபவித்தி ருக்கிறேன். சிறு வயதில் அவர் என் கைப்பிடித்து பள்ளி அழைத்துச் சென்றது, எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தது, நான் படிப்பில் சிறப்புப் பெற்றபோது பெருமிதப் பட்டது, என்னைப் பாடச் சொல்லி ரசித்தது, எனக்கு குழந்தைகள் பிறந்தபோது ஒரு தாத்தாவாக சந்தோஷப் பட்டது, அவர்களின் படிப்பு,திருமணம் இவற்றை பாசத்தோடு ரசித்து அனுபவித்து பாராட்டி வாழ்த்தியது, கொள்ளுப் பேரன் பேத்திகளுடனும் விளையாடி மகிழ்ந்தது... என்று அவரின் பாசத்துக்கு சான்றாக எத்தனை விஷயங்கள்! எனக்குத் திருமணம் நடந்த அன்று, அவர் மடியில் அமர்ந்து எனக்கு திருமாங்கல்ய தாரணம் செய்தபோது என் அப்பா கண்  கலங்கி அழுதது இன்னும் என் கண்களிலேயே நிற்கிறது. அதை நினைக்கும்போது இன்றும்

பேராசை

படம்
இருப்பது போதுமென்ற  மனம் வேண்டும்.. மனதில் எதிலும் நிம்மதி வேண்டும்.. நிம்மதியாய் வாழ சிக்கனம் வேண்டும்.. சிக்கனமாய் வாழ வரவுக்கேற்ற செலவு வேண்டும்.. வாழ்க்கை நிறைவு பெற பேராசையின்றி வாழ்தல் வேண்டும்..!

தேடல்

படம்
தேடி வந்து பிறப்பதில்லை நாம் எவரும்! பிறந்த பின்பே நம் தேடல் ஆரம்பமாகிறது! பசித்தால் அம்மாவைத் தேடல்! பணத்துக்கு அப்பாவைத் தேடல்! வாலிபத்தில் காதல் தேடல்! தனிமைக்கு துணைவி தேடல்! நற்சிந்தனைக்கு ஆன்மிகத் தேடல்! சிறப்பான வாழ்வுக்கு செல்வத் தேடல்! தோன்றவைப்பதும் தேடலே! பலப்படுத்துவதும் தேடலே! ஊக்குவிப்பதும் தேடலே!நமை ஆட்டுவிப்பதும் தேடலே!

பிடிவாதம்

படம்
பிடிவாதம் என்றாலே நினைவுக்கு வருவது புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் செய்யும் குழந்தைகள்தான்!தூங்க, குளிக்க, சாப்பிட என எல்லாவற்றுக்கும் அடம்பிடிப்பது குழந்தையின் இயல்பு.  எத்தனை சமத்து குழந்தையும் ஏதோ ஒரு நேரத்தில் பிடிவாதம் பிடிக்கும்.சாப்பிட அடம் செய்தால்'நீ சமத்தா சாப்பிட்டால் இன்னொரு கதை சொல்வேன்' என்று சொல்ல வேண்டும்! இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு! 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை திட்டுவதோ அடிப்பதோ கூடாது.' நீ ரொம்ப சமத்தாச்சே. இப்படியெல்லாம் செய்யலாமா?' என்று கேட்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சொல்லி மாற்ற முயலலாம். கேட்டதும் ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தால் அதன் மதிப்பும், தேவையும் தெரியாது. அது அவசியம் என்று தோன்றினால் 'நீ இந்தமுறை நல்ல மார்க் வாங்கினால் கிடைக்கும் என்று சொல்ல வேண்டும். 'நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்று பிடிவாதம் பிடிக்கும் பெரியவர்கள் அவர்களாக மாறினால்தான் உண்டு!!

திரும்பிப் பார்க்கிறேன்..

படம்
உங்கள் சிந்தனை உங்கள் எழுத்து கடவுளால் அளிக்கப்பட்ட இவ்வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மிகச்  சிறப்பானவையே என்பது என் எண்ணம். அன்பான பெற்றோர், அருமையான கணவர், அழகான குழந்தைகளை அடைந்த நேரம் பெற்றது பெருமகிழ்ச்சி! தமிழகத்தைத் தாண்டாத எனக்கு திருமணமாதும் வடக்கே வாழும் வாய்ப்பு. கணவருடன் கைகோர்த்து கண்மலர்ந்து தாஜ்மகாலை ரசித்து அதன் அழகில் சொக்கிய நேரம் மறக்க முடியாத சொக்கத் தங்கத் தருணம்! பின் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட அவர்களின் படிப்பு  மற்றும் இதர திறமைகளில் ஊக்குவித்து அவர்களைப் பத்தரை மாற்றுத் தங்கங்களாக  உயர்த்த நேரம் போனதே தெரியாமல் உழைத்த நாட்கள் மறக்கமுடியாதவை! மூத்த மகன் +2வில் தமிழகத்தில் மாநில மூன்றாமிடமும், அடுத்த பிள்ளை +2வில் மாநில முதலிடமும் பெற்று என்னை ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைத்த பொன்னான நேரங்கள் நினைக்கும்போதே மனம் நிறைப்பவை! இரண்டாம் மகன் +2வில் Commerce பிரிவு எடுத்து மாநில முதலாக வந்து திரு சேஷன், அன்றைய முதல்வர் திரு கருணாநிதி ஆகியோரிடம் பரிசுகள் பெற்றதோடு KKR பாமாயில் கம்பெனியாரின் மாருதி கார் பரிசு பெற்றதும் என் வாழ்வின் ஜொலிக்கும் வைர வேளைகள்! என் மகள் மருத

ஜன்னல்

படம்
சிறு குடிசையோ மாடமாளிகையோ ஜன்னல் இல்லாமல் சிறப்பில்லை..! எத்தனை வாசல் இருந்தாலும் ஜன்னல் அழகு தனி..! காற்றும் வரும்..வெளிச்சமும் வரும்..சமயத்தில் காதலும் வரும்..!! கையில் தேநீருடன் வெளியில் பார்க்கலாம் வேடிக்கை..!வானத்தை ரசிக்கலாம்.. மேகத்தோடு பேசலாம்..! வாகனங்களில் ஜன்னல் வழியே நிலவும் நட்சத்திரங் களும் நம்முடன் பயணிக்கும்..! ரவிக்கையிலும் ஜன்னல் உண்டு..பெண்ணின் அழகுக்கு மேலும் மெருகூட்ட..!!

அனுபவம்

படம்
 என் சிந்தனை..என் எழுத்து.. டைகர்டெம்பிள்...பாங்காக் பயணங்கள்  நமக்கு  மன  உற்சாகத்தை  அளிக்கிறது.   நம் பொது  அறிவை  விரிவடையச்  செய்கிறது. பல  ஊர்கள்,  பல   நாடுகள்,  அந்நாட்டு  மக்கள்,  அவர்களின்  பழக்க  வழக்கங்கள்  ஆகியவற்றைப்   பற்றிய  விபரங்களையும்  நாம்  அறிய  முடிகிறது. நான்  எப்பொழுதும்  எந்த  நாட்டிற்கு  சென்றாலும்,  அந்நாட்டின்  வித்யாசமான  சுற்றுலா  இடங்களை  சென்று  பார்த்து  வருவேன்.  அது  போன்று  சிங்கப்பூரிலுள்ள  என்  மகன்  வீட்டிற்குச்   சென்றபோது பாங்காக்   சென்றிருந்தோம். அப்போது    அருகிலுள்ள  காஞ்சனபுரியில்  உள்ள    'டைகர் டெம்பிள்'  என்ற  இடத்திற்கு  சென்று  வந்தோம். அது  ஒரு  புலிகளின்  சரணாலயம்  எனலாம்.  ஆனால்  அங்குள்ள  புலிகள்  கொடூரமில்லாத, மென்மையான  குணமுள்ளவை.  எப்படி  என்று  ஆச்சரியமாக  இருக்கிறதா?   அதுதான்  அந்த  இடத்தின்  சிறப்பு.  அதனால்தான்  அவ்விடம்  ஆலயம்  எனப்படுகிறது. பழமையும்,  புதுமையும்  இணைந்த  தாய்லாந்தின்  தலைநகரமான  மன்னராட்சி  நடைபெறும்  பாங்காக்  ஒரு  அழகான  நகரம்.  மன்னரின்  அலங்கார  மாளிகை,  புத்த  மடாலயங்கள்,  தாய்லாந்தின்  சிற

உங்க ஊர் ஸ்பெஷல்

எங்கள் கருத்து..உங்கள் எழுத்து.. அசோகா ஹல்வா ஹல்வா ஒரு ருசியான நாவூற வைக்கும் இனிப்பு. சாப்பிட சாப்பிட இன்னும் வேண்டும் என எண்ண வைக்கும் அற்புத சுவை கொண்ட இனிப்பு! தஞ்சை மாவட்டத்தின் ஸ்பெஷல் அசோகா ஹல்வா! இது தஞ்சையிலுள்ள திருவையாறில் செய்யப்படும் பிரபலமான இனிப்பு. இதற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது தெரியுமா? அதுவும் ஒரு  ஒரு ருசியான கதை. ஹல்வா என்றாலே கோதுமையில் செய்வது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அசோகா ஹல்வா பயத்தம் பருப்பில் செய்யப் படுகிறது. இரண்டாம் உலகப் போரின் சமயம் நம் நாட்டில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் சுவையான ஹல்வா செய்ய முடியவில்லை. ஆனால் மக்களுக்கோ ஹல்வா மோகம் குறையவில்லை! ஹல்வாவை எப்படியாவது செய்து ருசிக்க வேண்டும் என்ற ஆவலில் ராமு ஐயர் என்பவர் கோதுமைக்கு பதிலாக பயத்தம் பருப்பை சேர்த்து அல்வா செய்தார். அதன் ருசியில் மயங்கிய மக்கள் அதற்கு பெரும் ஆதரவு தர ஹல்வா வியாபாரம்  தொடங்கப்பட்டு அமோகமாக விற்பனை ஆயிற்று. திருநெல்வேலியின் இருட்டுக்கடை ஹல்வா போல் திருவையாறு ஆண்டவர் கடை ஹல்வா மிக பிரசித்தம்! அசோகா ஹல்வா தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் மிக பிரபலமான, ருசியான  இனிப்பாகப்

சிறகு

படம்
வாழ்வில் தோல்வி ஏற்பட்டாலோ நினைத்தது நடக்காவிட்டாலோ மனமொடிந்து விடுவது சரியல்ல.. நம்பிக்கை எனும் சிறகுகளைத் துணையாகக் கொண்டு முயற்சித்தால் வெற்றி நம் பக்கமே!

அதிசயம்

படம்
பூமியில்தான் எத்தனை எண்ணிலடங்கா அதிசயம்.. இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் அதிசயம்.. வானத்து நிலவும் விண்மீன்களும் கண்ணுக்கு அதிசயம்.. ஜோவெனப் பெய்யும் மழை உயிர்ப்பது எங்கென அதிசயம்.. வானவில்லின் சப்தவர்ணம் விழிவிரியும் அதிசயம்.. புவியின் புரியாத புதிர் அத்தனையும் அதிசயம்.. ஆணும் அதிசயம்.. பெண்ணும் அதிசயம்.. மழலையும் அதிசயம்.. நித்தம் நித்தம் அதிசயித்து மனமயங்குகிறேன் இந்த  அற்புதங்கள் கண்டு!

காரடை

காரடைநோன்பு ஒவ்வொரு வருடமும் மாசியும்,பங்குனியும் கூடும் நாளில் வரும்.இது கணவனின் நலன் வேண்டி அவரது நீண்ட ஆயுளுக்காக ஸ்ரீகாமாக்ஷி தேவியை வேண்டி மனைவியர் செய்யும் நோன்பு. திருமணமாகாத பெண்களும், குழந்தைகளும் கலந்து கொள்ளலாம். விரதம் இருக்க வேண்டிய தேவையில்லை. 'மாசிக் கயிறு பாசி படரும்' என்பது சொல்வழக்கு. அதனால் இதை பங்குனியில் செய்வதை விட மாசி மாதம் இருக்கும்போதே செய்ய வேண்டும். சாவித்திரி தன கணவன் சத்யவானின் உயிரை யமனிடமிருந்து மீட்க வேண்டி,காட்டில் கிடைத்த பொருட்களைக் கொண்டு இந்த நோன்பு செய்ததாக ஐதீகம். நோன்பு செய்யும் நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, கிழக்கு பார்த்து சிறு கோலம் போட்டு, வீட்டிலுள்ள பெண்களின் எண்ணிக்கைப்படி சிறு வாழைஇலை போட்டுவெற்றிலை,பாக்கு,வாழைப்பழம், வெல்ல அடை,உப்பு அடை, வெண்ணை இவற்றுடன் கழுத்தில் கட்டிக் கொள்ளும் மெல்லிய மஞ்சள் கயிறும் சுவாமி முன் வைத்து நிவேதனம் செய்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு சுவாமிக்கும், கணவருக்கும் நமஸ்காரம் செய்தபின்பு காரடையை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். நோன்பு செய்யும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் &

சரித்திரம்

படம்
எண்ணத்தில் தெளிவும்.. நெஞ்சத்தில் உறுதியும்.. செயலில் சுறுசுறுப்பும்.. கொள்கையில் பிடிப்பும்.. வாழ்வில் தூய்மையும்.. மனதில் நேர்மையும்.. என்றும் இருந்திட்டால்.. சரித்திரம் படைப்பதில்.. எள்ளளவும் தடையில்லை..!

அழகு

படம்
 ஆணுக்கு அழகு வீரம்.. பெண்ணுக்கு அழகு இரக்கம்! மழலையின் அழகு சிரிப்பு.. இளமையின் அழகு வெட்கம்! கடலுக்கு அழகு அலை.. மலருக்கு அழகு வாசம்! பெண்மைக்கு அழகு தாய்மை.. தாய்மைக்கு அழகு பாசம்! வானுக்கு அழகு சந்திரன்.. வாக்குக்கு அழகு வாய்மை! பேச்சுக்கு அழகு செந்தமிழ்.. இதழுக்கு அழகு புன்னகை! நம் பார்வையில் அழகிருந்தால் உலகில் நாம் காணும்  அத்தனையும் அதி அற்புத அழகே!

உரிமை

படம்
உரிமையோடு நாம் பேசுவது நம் பெற்றோரிடமும் பிள்ளைகளிடமும் நட்புக்களிடமும் மட்டுமே. உரிமையில்லாதவரிடம் நம் கருத்தை சொல்வது மன வேற்றுமைக்கு வழிவகுக்கும்.

சாதனை

படம்
 சாதனை என்பது எதையும் சாதிப்பதல்ல.. அவரவர் கடமையை செய்து முடிப்பதே சிறந்த சாதனை..  எந்த வயதிலும் புரியலாம் சாதனை.. தோல்வியில் துவளாமல் தொடர்ந்து  முயற்சித்தால் சாதனை.. மனதில் சரியான திட்டமிருந்தால்  செய்யலாம் சாதனை.. முயற்சியுடன் உழைத்தால் மூலதனம் தரும் சாதனை..!

மகளிர்(8.3.'21)

படம்
கருவில் அருமை மகளாய்ப் பிறந்து.. மனதினில் கணவனை நினைந்து.. வயிற்றில் பிள்ளைகளை சுமந்து.. முதுகில் குடும்பசுமைகளைத் தாங்கி.. இரக்கம் காதல் அன்பு பாசம் இவற்றால்.. இடையறாது  இயங்குபவளே பெண்..!