பால் பொங்கி வழிந்தது(100 வரி)
குழந்தை..
நேற்று அடுத்த வீட்டுப் பெண் அவளிடம்..இப்பொழுதெல்லாம் திருமணமாகியவுடன் குழந்தை பிறக்காவிட்டால் பிறகு கஷ்டம்தான். நீங்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்கிறீர்களா?..என்றபோது, பதில் சொல்லாமல் உள்ளே வந்து விட்டாள் அம்பிகா!
பால் பொங்கி வழிந்தது கூட தெரியாமல் அதே யோசனையில் இருந்தாள் அம்பிகா. அந்த நேரம் உள்ளே வந்த மனோகர்..ஹேய் அம்பிகா என்ன ஆச்சு? பால் பொங்குவது கூட தெரியலயா?.. என்றபடி கேஸை அணைத்தான்.
கண்களில் தளும்பிய கண்ணீரை துடைத்துக் கொண்டவள்..ஏங்க நமக்கு குழந்தையே பிறக்காதா?..என்றாள் குரல் தழுதழுக்க.
..யார் சொன்னது இப்படியெல்லாம்? அசட்டுத் தனமாக பேசாதே. டாக்டரிடம் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்கிறோம். கண்டிப்பா பிறக்கும். அதுவரை எனக்கு நீ குழந்தை. உனக்கு நான் குழந்தை..அழாமல் ஒரு கப் காஃபி போடு.. என்றபடி அவளை ஆதரவாக அணைத்தபடி காஃபி சாப்பிடச் சென்றான் மனோகர்!
கருத்துகள்
கருத்துரையிடுக