அழைப்பிதழ்..(100 வரிக்கதை)

 மரகதம் காலை சாப்பாடு முடித்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள். ரமணியும், சுஜாவும் அவர்கள் பெண்ணின் திருமண அழைப்பிதழுடன் வந்தார்கள். அடுத்த வாரம் திருமணம் என்றும், அவசியம் குடும்பத்துடன் வரும்படியும் சொல்லிச் சென்றனர். குளிர்பானம் குடித்துவிட்டுக் கிளம்பினர்.


பத்திரிகையில் முதற்பக்கம் பெண் பிள்ளையின் புகைப்படம் இருந்தது. அந்தப்பையனின் பெயர் ரமேஷ் என்றிருக்க அவனை எங்கோ பார்த்த நினைவு வந்தது. தான் சிங்கப்பூருக்கு மகள்வீடு சென்றபோது  ஒரு விழாவில் அவனை அவன்மனைவி குழந்தையுடன் பார்த்த நினைவு வர, உடன் சுஜாவுக்கு  ஃபோன் செய்தாள். பிள்ளையைப் பற்றிய விபரங்கள் கேட்டாள். 


தமக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்றும்  வெளிநாட்டில் பணி புரிவதாகவும் சொன்னாள்...ஏன் கேட்கிறீர்கள்?..என்றபோது மரகதம் அவனைப்பற்றிய விபரம் சொல்ல, அதிர்ச்சியானாள் சுஜா. கணவரிடம் சொல்லி அவர்களிடம் விசாரிக்க, அங்கு அவன்ஒரு சீனப்பெண்ணைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்தால் மாறிவிடுவான் என்றும் அவர்கள்கூற, அன்றே திருமணத்தை நிறுத்தி விட்டனர். பத்திரிகைகளில் புகைப்படம் போடுவதால் இதுபோன்ற நன்மைகளும் உண்டு போலும்!

கருத்துகள்