பௌர்ணமி
இரவு என்றொரு அந்தப்புரம்..
அதில் வட்ட வடிவ வெளிச்சப் பூவே!
மறையும் நேரம் ஆதவன் ஏற்றிய தீபமோ!
ஓவியன் வரைந்த வட்டமுக தேவதையோ!
பௌர்ணமியில் பளிச்சாக இருக்கும் நீ அமாவாசையன்று எங்கு மறைந்து ஒளிந்தாய்!
நீலவான மேடையில் நட்சத்திரங்கள் சூழ இரவெனும் இனிய கவிதையை எழுத வந்த முழுநிலவே!
வாராய்..வந்தெமை மகிழ்விப்பாய் அழகிய திங்களே!
கருத்துகள்
கருத்துரையிடுக