கடமைநம் மனதில் கனவுகள் ஆயிரம்!

அவை தானே நனவுகள் ஆகாது!

அதற்குத் தேவை கடும் உழைப்பும் கடமை உணர்வும்!

******

அன்பு செய்வதில்

காற்றாய் இருப்போம்!

பாசம் காட்டுவதில் 

மாரியாய் இருப்போம்!

கருணை பொழிவதில்

கடலாய் இருப்போம்!!

உதவி செய்வதில் உயர்ந்த

மலையாய் இருப்போம்!

அடுத்தவர் வாழ்வில்

ஒளியாய் இருப்போம்!

அயராத உழைப்பில் 

விழிப்பாக இருப்போம்!

எவர் நம்மைத் தடுப்பினும் 

கடமை தவறாதிருப்போம்!

கருத்துகள்