இடுகைகள்

பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுனிதா மாறினாள்!(28.2.'21)

வார இறுதி எழுத்து திருவிழா சுனிதா மாறினாள்! வீட்டுக்குள் நுழைந்தபோது வீடு மிகவும் சுத்தமாக இருந்ததை பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டுப் போனார் லட்சுமியம்மாள். "என்ன வீடு இவ்வளவு சுத்தமா இருக்கே. வேற ஆள் வச்சுக்கிட்டயா பாப்பா" என்றபடியே வந்தவள் சுனிதா சொன்னதைக் கேட்டு "என் கண்ணு. நல்லாருக்கயா" என்றபடி குழந்தையை முத்தமிட்டாள். வாசுவுக்கு எப்போதும் டூர். மாதம் நான்கு நாள்தான் வீட்டு வாசம். சுனிதா வீட்டில் செல்லமாக வளர்ந்தவள். அவள் பெற்றோருக்கு செல்லப்பெண்.  வாசுவின் பெற்றோர் உடனிருந்தபோது அவன் அம்மா வீட்டை சுத்தமாக வைத்திருப்பார். சுனிதாவுக்கு எப்பொழுதும் சுத்தம் கிடையாது.அவள் வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருந்ததால் ஒரு சின்ன வேலைக்கு கூட அடுத்தவரை ஏவி வேலை பார்க்க சொல்பவள்.  எப்பொழுதும் மொபைலில் தோழிகளுடன் பேச்சு, டி.வி, தூக்கம் என்று எதிலும் ஆர்வமின்றி இருந்தாள். வாசு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் மாறுவதாக இல்லை.  இரண்டு வருடத்தில் குழந்தை பிறந்தபோது வாசு குடும்பத்தினர் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இனியாவது அவள் மாறிவிடுவாள் என்று எதிர்பார்த்த வாசுவுக்கு கிடைத்தது ஏமாற்றம்

உண்மைக் காதல் மாறாது(1)(27.2.'21)

எனக்கு ஒரு பெண்..மூன்று பிள்ளைகள். பெண் டாக்டர். அவள் பத்தாம் வகுப்பு முடித்ததும்  என் கணவருக்கு கோலாப்பூர் மாற்றலாகிவிட அங்கு +2 முடித்து  மும்பையில் Grant Medical Collegeல் MBBS படித்தாள். நாங்களும் மும்பை சென்று விட்டோம். அவளுக்கு திருமணத்திற்கு பார்க்கலாம் என நாங்கள் யோசித்தபோது தனக்கு டாக்டர் பையன்தான் சரிவரும் என்றாள். நாங்கள் பார்த்தவரை இன்ஜினியர் வரன்களே அதிகம் வந்தது. Matrimonialலும்  டாக்டர்கள் அதிகம் இல்லை. இரண்டாம் வருடம் படித்தபோது, தான் ஒரு சீனியர் பையனை விரும்புவதாக சொன்னாள். நாங்கள் இப்படித்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தவில்லை. என் கணவர்...குழந்தைகளுக்கு படிப்பைக் கொடுத்திருக்கிறோம். அவர்கள் சரியான முடிவுதான் எடுப்பார்கள்...என்பார்.  பையனைப் பார்க்க வேண்டும் என்றபோது அவளே அழைத்து வந்து அறிமுகப் படுத்தினாள். மராட்டிய பையன். பார்க்க நன்றாக இருந்ததோடு மிக அமைதியாக மரியாதையாகப் பேசினான். அவர்கள் குடும்பம் பற்றி சொன்னதுடன் என் பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவர்கள் வீட்டார் ஒப்புக் கொள்வார்கள் என்றான். எங்களுக்கெல்லாம் ஹிந்தி தெரிந்ததால் அவனுடன்

என் எண்ணம்..என் எழுத்து! பல மொழிகளும் என் அனுபவமும்!(2)

ஆயி! மாஜி ஆயி(2) இனி தமிழ்நாட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து மகிழ்ந்தபோது என் கணவருக்கு பதவி உயர்வோடு மீண்டும் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூருக்கு மாற்றல்! நமக்குதான் இந்தி தெரியுமே என்று 'கெத்'தாக இருந்தேன்! அங்கு சென்றதும்தான் புரிந்தது மகாராஷ்டிரமொழி மகா கஷ்டமான மொழி என்று! அங்கு அருகில் இருந்தவர் வீட்டுக்கு கூப்பிட என் பெண்ணையும் உடன் அழைத்து சென்றேன். அவர்கள் வீட்டில் மாமியாரும் மருமகள்களுமாக நாலைந்து பேர். எங்களை அதிசயமாகப் பார்த்தார்கள்! இந்தியில் பேசுவார்கள் என நினைத்தால் அவர்களோ மராத்தியில் பேச ஆரம்பித்து விட்டார்கள். எங்களை பஸா என்று சொல்ல...(பஸ்ஸில் வந்தீர்களா? ) என்று கேட்கிறாளோ? இருவரும் இந்தியில் 'டீக்ஹை' என்று சொல்ல சோபாவைக் காட்டி மீண்டும் பஸா என்றதும்தான் புரிந்தது உட்காரச் சொல்கிறார்கள் என்று! அசட்டு சிரிப்புடன் அமர்ந்தோம்! அவர்கள் எங்களுக்கு புரியுமா என்று கூட யோசிக்காமல் சரவெடிபோல் விடாது பேச 'அச்சாஅச்சா' என்று சொல்லி சமாளித்தோம்! அவர்களுக்கு இந்தி புரியவில்லை. அவர்கள் பேசியதில் சாய் என்பது மட்டும் புரிய அதைக் குடித்துவிட்டு விட்டா

என் எண்ணம்..என் எழுத்து! பல மொழிகளும் என் அனுபவமும்!(1)

ஆயி மாஜி ஆயி(1) நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவள். என் கணவரும் தஞ்சை. என் அப்பாவின் வேலை நிமித்தம் நாங்கள் இருந்ததும், நான் படித்ததும் சிங்காரச் சென்னை!எனக்கு தஞ்சைத் தமிழும் சென்னைத் தமிழும் மட்டுமே தெரியும்! மணமான ஆறு மாதத்திலேயே வங்கி அதிகாரியான என் கணவருக்கு வடக்கே உத்திரப் பிரதேசத்தில் மதுரா (மாயக் கண்ணனின் பிறப்பிடமான வடமதுரை)வுக்கு மாற்றல்!‘இந்தி’ என்று தமிழில் மட்டுமே எழுதத் தெரிந்த நான், சற்று பயத்தோடும், ஏகப்பட்ட பிரமிப்போடும், சில இந்திப் புத்தகங்களோடும் பயணமானேன். படித்தபோது இந்தி தேவையில்லை என்று போராட்டம் நடந்ததால் இந்தியில் 'ஆனா..ஆவன்னா' கூடத் தெரியாது! என் கணவர் அத்தனை இந்திக் கலவரத்திலும், ஒளிந்து ஒளிந்து ‘ராஷ்ட்ரபாஷா’ வரை படித்தவர்! எனவே அவருக்குக் கவலையில்லை! நாங்கள் குடியிருந்த வீட்டு வாசல் கதவை யாராவது தட்டினால் எங்கள் வீட்டு சொந்தக்காரி 'ஆரய்யூ' என்பாள். அதைக் கேட்டு நானும் என் கணவர் அழைத்தபோது அப்படி சொல்ல 'இது என்ன பாஷை? என்ன அர்த்தம்?' என்றார். நானும் வீட்டுக்கார பெண் சொன்னதை சொல்ல அவரோ 'அது ஆரய்யூ இல்ல. ஆ ரஹி ஹும் என்று சொல்ல வேண்டும்'

இழந்ததும் கற்றதும்..(22.2.'21)

இழந்த தருணங்களைத் யோசித்துப் பார்த்தும்.. ம்ஹும்..எதுவும் கிட்டவில்லை..எழுதவும் எட்டவில்லை! கற்றவை நிறைய்...ய! என் சிறு வயது முதலே நான் எதற்கும் ஆசைப்பட்ட தில்லை.என் பெற்றோர் வளர்த்த விதத்தில் எல்லாமே அவ்வப்பொழுது கிடைத்தது! நல்ல மதிப்பெண்கள் பெற்றும் பள்ளியிறுதி முடித்து கல்லூரி சென்று பட்டதாரியாகி வேலைக்கு செல்லும் ஆசை மனதின் ஓரமாக..! அது ஒன்றே நான் இழந்தது. அம்மா அப்பாவுக்கோ அது தேவையில்லை என்று பட்டதால் நானும் ஏற்றுக் கொண்டேன்! 18 வயதில் திருமணம் செய்து கடமையை முடிக்கும் ஆசை அப்பாவுக்கு! அது தவறென்று எனக்கு தோன்றாததால் அவர்கள் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை என் கணவரானார்! அன்பான ஆசையான கணவரின் விருப்பங்களை என் விருப்பங்களாக மாற்றிக் கொள்ள இன்று அவர் என் வசம்! அம்மாவாக இருப்பார் என்று நான் கற்பனை செய்திருந்த என் மாமியார் ஒரிஜினல் மாமியாராக  இருந்தபோது (நான்தான் தப்புக் கணக்கு போட்டு விட்டேனோ!) அதை ஏற்றுக் கொண்டு அவர் கோபித்தாலும், என்ன குறை சொன்னாலும் நான் வாய்மூடி இருக்கப் பழகினேன்..! அதன் பலனாக பல நல்ல விஷயங்கள் நான் கற்றுக் கொண்டேன். சமையல் வீட்டு நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்றேன்! யார்

ஆகாசவாணியின் குரலரசி சரோஜ் நாராயணசுவாமி!(14.2.'21)

'ஆகாசவாணி..செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி'...அறுபதுகளில் ரேடியோவில் நியூஸ் கேட்டவர்கள் பலர் இந்த கம்பீரக் குரலுக்கு மயங்கியவர்களாக இருக்கும். ஆம்..அந்த கணீரென்ற வெண்கலக் குரலுக்கு சொந்தமான திருமதி சரோஜ் நாராயணசுவாமி என் அம்மாவின் சொந்த அத்தை மகள். எனக்கு சித்தி முறை. அவரைப் பார்க்க சென்றி ருந்தோம். 84 வயதிலும் அந்த கணீர் குரலில் கம்பீரமும் பேசும் பாணியும். மாறவில்லை. மலபார் ஹில்ஸில் குடியிருக்கும் அவர் வீடு  மிக அழகாக சுத்தமாக இருந்தது. அவரது அந்தநாள் புகைப்படங்கள் சுவரில் அவர் சிறப்பை எடுத்துக் காட்டின. அவர் சிறுவயதில் படித்தது, கல்லூரிப்படிப்பு அனைத்தும் மும்பையில். மும்பை SIEA வில் பள்ளிப் படிப்பு படித்ததால் தமிழ்ப் புலமை பெற்றார்.  Ramnarayan Ruia கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தார். தஞ்சை மாவட்டம் தியாகராஜ புரத்தைச் சேர்ந்த BHELல் பணி புரிந்த திரு நாராயண சுவாமியை மணந்த பின்பு சரோஜ் நாராயணசுவாமியாகி டில்லிவாசம். முதலில் யூகோ வங்கிப் பணியாளராக இருந்தவர் பின்பே ஆல் இண்டியா ரேடியோவில் செய்தி வாசிக்க பரீட்சை எழுதினாராம். அதில் தேர்வு பெற்று தமிழ்ச் செய்தி வாசிக்க நியமி

திருமணத்திற்கு பின் காதல்!(12.2.'21)

காதலர் தினம் ஒருநாள் மட்டுமா! ஒவ்வொரு நாளும் காதலர் தினமானால் தாம்பத்தியம் மணக்கும்..இனிக்கும்..! திருமண வாழ்வில் அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் எனக்கும், என் கணவருக்கும் அவ்வப்போது கருத்து வேற்றுமைகள், பிணக்குகள் வருவதுண்டு. ஆனால், சில மணி நேரங்கள் கூட தாக்குப் பிடிக்க விட்டதில்லை. எங்களுக்குள் இருக்கும் காதல் பார்வைகள், ஆதரவான அணைப்பு, ஒரு நாளும் விட்டுப் பிரிந்திருக்க முடியாத மனப்பான்மை, சிறு தலைவலி என்றால்கூட பதறிவிடும் தன்மை, விட்டுக் கொடுத்து வாழ்வது இவையே எங்களின் மாறாத காதல் வாழ்க்கையை நடத்திச் செல்லும் மகத்தான காரணங்கள்! எத்தனை ஆண்டு ஆனாலும் 'இன்று புதிதாய் திருமணம் செய்து கொண்டோம்' என்கிற மாதிரி வாழ நான் கடைப்பிடிக்கும் சில எளிய வழிகள்.. அடிக்கடி அணைப்பதும், முத்தமிடுவதும் காதலை அதிகரிக்கச் செய்யும்! தொடுதல் உணர்வு இருவருக்கிடையேயுள்ள நெருக்கத்தை அதிகரிக்கும். அடிக்கடி தொட்டுப் பேசுவது, தடவுவது, வெளியில் செல்லும்போது கைப்பிடித்துச் செல்வது வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும்! ‘உம்’மென்றில்லாமல் உற்சாகமாய்ப் பேசுங்கள்! உங்கள் துணையின் குறைகளை பூதக் கண்ணாடி வைத்துப் பார்க

என் குழந்தை..என் ஆசான்(7.2.'21)

 என் ஆசான்..என் குழந்தை.. ஏழாவது படிக்கும் என் பேத்தி மிகவும் சமர்த்து..புத்திசாலி. அவள் பள்ளி பற்றியும், படிப்பு , டீச்சர்கள் பற்றியெல்லாம் பேசுவாள். ...நீ படித்துவிட்டு என்னவாகப் போற?...என்றேன். ...நான் veterinary doctor ஆகப் போகிறேன்.... ...நாய், பூனைக்கல்லாம் மருந்து கொடுத்து ஊசியல்லாம் போடணுமே... ...நான் forest animalsக்கல்லாம் கூட  மருந்து கொடுப்பேன்... ...அதல்லாம் வேண்டாம்.Wild animalsலாம் பயம்... ...ஐயோ..உனக்கு ஒண்ணுமே தெரியலயே.பயப்படாத பாட்டி. மயக்கம் கொடுத்துதான் பண்ணுவேன்... அனிமல் பிளானட், ஒயில்டு லைப் டாகுமெண்டரி, நேஷனல் ஜாக்ராபிக் அனிமல் லைஃப் போன்ற அலைவரிசைகளை விரும்பிப் பார்ப்பாள். பல விலங்குகளை பற்றிய விஷயங்களையும் மிக அழகாக எடுத்துச் சொல்லுவாள். சிங்கம் இப்படி சாப்பிடும், கரடி இப்படி சண்டை போடும் என்றெல்லாம் அவள் விழிமலர சொல்லும்போது, இப்பொழுதே அவள் veterinary டாக்டர் ஆகிவிட்ட மாதிரி தோன்றும்! நான் சில விஷயங்களைப் பற்றி யோசித்து 'இது நம்மால் முடியாது..என்று கைவிட்டு விடுவேன். ஆனால் என் பேத்தி தன் குறிக்கோளில் இந்த வயதிலேயே உறுதியாக இருப்பது எனக்கு வியப்பளித்ததுடன்