குற்றம் (100வரி)

சீதை செய்தாலும் குற்றமே!


ராமாயணம் நமக்கு தெரியும். சீதையின் கதாபாத்திரம் மிக அருமையானது. எந்த கஷ்டத்திலும் ராமனைப் பிரிய மாட்டேன் என்று காட்டுக்குப் போனவள் ஒரு மானுக்கு ஆசைப்பட்டு கேட்க, ராமனும் அதைப் பிடிக்கச் சென்றார்.


அச்சமயம் மானாக வந்த மாரீசன் மேல் ராமரின் அம்பு பட்டு அவன் ராமரைப் போல் கத்தினான். அது கேட்ட சீதை லக்ஷ்மணரிடம் ராமனைக் காப்பாற்ற போகச் சொன்னாள். லக்ஷ்மணர் ராமருக்கு எதுவும் ஆகாது என்று எடுத்துச் சொல்லியும் கேட்காமல் ..என்னை மணந்து கொள்ள நினைக்கிறாயா?..என்று குற்றம் சொல்ல..தாயே நான் உங்கள் மகன் போன்றவன்..என சொல்லிச் செல்கிறான். 


ராம ராவண யுத்தம் முடிந்தபின் ராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னார். அவளுக்கு ஏன் இந்தக் கடுமையான தண்டனை என்றபோது ராமர்..நல்ல மனமுள்ள லக்ஷ்மணனை அவள் தவறாகப் பேசியதாலேயே, அவளுக்கு இந்த தண்டனை..என்று கூறியதாக இதிகாசம் சொல்கிறது.


நெற்றிக்  கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே!

_______

பணமிருப்பவனும் குற்றம் செய்கிறான்

பதவி இருப்பவனும் குற்றம் செய்கிறான்

தண்டனை அளிப்பதிலும் பாரபட்சம்

அதுவும் ஒருவித குற்றம்தானே.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)