இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாதுகாப்பு

படம்
அதிகக் கூட்டம் ஆபத்து! இல்லத்தில் இருந்தால் ஈவிரக்கம் இல்லா கொரோனாவிலிருந்து பாதுகாப்பு! உண்டு உறங்கி வீட்டில் இருந்தால் ஊருக்கும் உறவுக்கும் பாதுகாப்பு! எங்கும் செல்ல முடியாத  ஏக்கம் வேண்டாம்! ஐயமில்லை அதுவே நம் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு!  வெளியில் செல்லாமல் ஓரிடத்தில் இருந்தால் ஔடதம்இல்லாத கொரோனாவிலிருந்து கிடைக்குமே பாதுகாப்பு! அஃதே நமக்கு அவசியம் இன்று!!

இரவல் வாங்கிய தலைப்பு ....தியாக பூமி

படம்
நான்எழுதுகிறேன்...சவால் இரவல் வாங்கிய தலைப்பு ....தியாக பூமி எனக்கு சிறு வயது முதலே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் என் அம்மா. அதன் பின்னும் என்னை பத்திரிகைகளில் எழுதவும் ஊக்கம் தந்தவர் என் தாயே! நான் ராஜாஜியின் சக்கரவர்த்தி திருமகனையும், வியாசர் விருந்தையும் பலமுறை படித்திருக்கிறேன். நாவலாக நான் படித்த முதல் புத்தகம் கல்கி அவர்களின் தியாக பூமி. பலமுறை படித்தும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அருமையான கதை. சமூக நாவலாக அந்நாளைய பெண்களின் நிலையை மிக அழகாக எடுத்துக் காட்டிய புரட்சியான நாவல் என்பேன். பெண் விடுதலையை 1936ம் ஆண்டிலேயே மிக அழகாக நாசூக்காக எழுதியுள்ளார் கல்கி. இது திரைப்படமாக வந்து பலநாள் ஓடியது. ஒரு பெண்ணின் மனதை மிக அழகாக எழுதியிருப்பார்.பல இடங்கள் கண்ணில் நீரை வரவழைக்கும். இறுதி முடிவுதான் வித்யாசமானது. ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்பதை மிக அழகாக,அழுத்தமாக எடுத்துச் சொன்ன நாவல் இது. அதே  கருத்தை ஆதாரமாகக் கொண்டு நான் எழுதிய கதை. ராமநாதன் தன் ஒரே மகள் ரஞ்சனியை சீரோடும் சிறப்போடும் டில்லியில் பணிபுரியும் ஆனந்திற்கு  திருமணம் செய்து வைக்கிறார். ஆனந்திற்கு நி

நான் எழுதுகிறேன்..மாலை சூடிய மணநாள்..

படம்
  'சின்ன சின்ன கண்ணசைவில் உன் அடிமை ஆகவா'என்று கண்ணால் பேசிய அந்தநாள் ஞாபகம் மனதில் வந்ததே! இருமனம் கலந்து ஒரு மனதாய் இணைந்த எங்கள் 46வது  திருமணநாள் இன்று! திருமணம் என்றதுமே முதலில்நினைவுக்கு வருவது பெண் பார்த்த நாள்தானே! அந்த அனுபவம் சுவையான சுகமான அனுபவமாச்சே! என் கணவர் என்னைப் பெண் பார்க்க வந்தபோது என் வயது பதினெட்டு. நாங்கள் இருந்தது முசிறியில். 'எனக்கு அதுக்குள்ள கல்யாணம் வேண்டாம்'என்றாலும் காது கொடுத்துக் கேட்பாரில்லை! அன்று பொங்கல். நானும் என் தம்பிகளும் வாசலில் கரும்பு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். வாசலோடு போய்க் கொண்டிருந்த ஒருவர்..70 வயதிருக்கும்... நாங்கள் இருந்த வீடு தன் உறவினருடையது என்று சொல்லிக் கொண்டு உள்ளே வந்தார். என் அப்பாவிடம் எங்கள் குடும்ப விபரங்களைக் கேட்டார். தான் குடந்தையை அடுத்த உமையாள்புரம் என்றார். என் அம்மா அவரை நமஸ்காரம் செய்யச் சொல்ல (அந்நாட்களில் பெரியவர்கள் வந்தால் நமஸ்கரிக்க சொல்வது வழக்கம்) "பொண்ணுக்கு என்ன வயசு?வரன் பார்க்கறேளா" என்று கேட்க, என் அப்பாவும் "18 வயசு. பார்த்துண்டி ருக்கேன். நல்ல வரன் கிடைத்தால் முடித்து வி

அச்சம்

படம்
அச்சத்தை துச்சமென ஒதுக்கினால் வெற்றி நமதே! அமைதியான நெஞ்சதனில் அச்சத்தை நீக்கினால் இறப்பும் நமைக் கண்டு அஞ்சும்! ****** தொண்டை வரண்டாலும் அச்சம்.. இரண்டு முறை இருமினால் அச்சம்.. தும்மல் வந்தாலும் அச்சம்.. மூக்கு அடைத்தாலும் அச்சம்.. மனிதரை  நெருங்கினாலும் அச்சம்.. இந்தக் கரோனா அச்சம்  தீரும் நாள் எந்நாளோ!

புத்தகம்

படம்
வாழ்க்கை எனும் புத்தகத்தில் ஒவ்வொரு நாளும் முடிந்த பக்கங்களை நாம் மீண்டும் திரும்பப் பெற முடியாது! ****" என் அகமனதை புதிதாக்கும் என் இதயம் கவர்ந்த புத்தகமே! உன் பக்கங்கள் தரும் புதிய சிந்தனை! அதனால் கிடைக்கும் புதிய நம்பிக்கை! மனக்கவலை தீர்த்து தருமே புத்துணர்வு! உலகை அறிய வைக்கும் சன்னல்! உனை நேசித்து வாசித்தால் சுவாசிப்பும் சுகமாகும்!

முதல்

படம்
உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் சங்கமம் ஆன அம்மாவும் அப்பாவும் குழந்தைகளின் முதல் வார்த்தை! அதுவே தமிழுக்கு நாம் தரும் முதல் மரியாதை! நான் அவனை ஈன்றபோது பெற்றேன் முதல்மகிழ்ச்சி! ஈன்றதும்  தந்தேன் முதல்முத்தம்! சற்றே வளர்ந்ததும் தந்தேன் முதல் அறிவுரை! 'அம்மா நான் பள்ளியில் முதலிடம்' என்றபோது அடைந்தேன் முதல்பெருமிதம்!

தெளிவு

படம்
செயலில் தெளிவிருந்தால் எண்ணம் தெளிவாகும்.. எண்ணத்தினால் மனம் தெளிவாகும்.. மனத்தினால் எண்ணிய  முயற்சி தெளிவாகி நினைத்ததை தடையின்றி  சிறப்பாக முடித்து வெற்றி பெறுவது உறுதி!

இனிப்போ..கசப்போ..

படம்
நான் எழுதுகிறேன்.. கசப்பு.. ஈன்ற பொழுதின் பெரிதுவந்தேன்.. எங்கள் குடும்பம் நடுத்தர வசதிகளைக் கொண்ட குடும்பம். எனக்கு நான்கு குழந்தைகள். என் கணவர் வங்கி அதிகாரி என்றாலும் ஒவ்வொரு மாதமும் வரவுக்கு அதிகமாகவே செலவாகும். குழந்தைகள் மெட்ரிகுலேஷன் பள்ளியில்தான் படித்தார்கள். எங்கள் உறவினர்களின் குழந்தைகள் CBSE, ICSE syllabus பள்ளிகளில் படித்தார்கள். அதனால் அவர்கள் படிப்பே மிக உயர்வு என்பார்கள். அந்த அளவுக்கு மெட்ரிகுலேஷன் படிப்பு இருக்காது என்பார்கள். அத்துடன் IITயில் படிப்பது தம் குழந்தைகளால் மட்டுமே முடியும் என்றும், வெளிநாட்டு படிப்பு, வேலை என்பதெல்லாம் என் குழந்தைகளால் நினைத்தே பார்க்க முடியாது என்று சொல்வதைக் கேட்டு மிகவும் மனக்கஷ்டப் படுவேன். என் மகள் டாக்டருக்கு படிக்கப் போகிறேன் என்றபோது பரிகாசமாக...டாக்டர் படிப்பா! அதற்கெல்லாம் சூட்கேஸ் (லஞ்சம்) கொடுத்தால் தான்  படிக்க முடியும். அதுவும் நம்ம communityக்கு அதெல்லாம் கிடைக்காது...என்று என் குழந்தைகள் எதிரிலேயே சொல்வார்கள். இது போன்று என் உறவுகள் பேசிய கசப்பான வார்த்தைகள் என் குழந்தைகளை எப்படியாவது சாதிக்கச் செய்ய வேண்டும் என்ற உறுதியை

வருமானம்

படம்
ஐந்து வயதுக் குழந்தைக்கு அத்தை கொடுத்த ஐந்து ரூபாய் மிகப் பெரிய வருமானம்! ஐம்பது வயதானாலும் நம் திறமைக்கு கிடைத்த சன்மானம் பெருமிதம் தரும் வருமானம்! ++++++ வருமானத்துக்கு  தக்க செலவு செய்தால்  சிக்கனமாக வாழ்ந்து  சிறப்பாய் செயல் முடித்து மகிழ்ச்சியாக வாழலாம்!

வார இறுதி எழுத்துத் திருவிழா அகல்யாவின் ஆசை

படம்
  வார இறுதி எழுத்துத் திருவிழா அகல்யாவின் ஆசை "வீட்டை கவனிச்சுகிட்டு பிள்ளைகளை பார்த்துகிட்டு ராணி மாதிரி இருக்கிறதை விட்டுட்டு எதுக்குநீ சம்பாதிக்கணும்னு நினைக்கிறே?" ராஜேஷ் கேட்டபோது அகல்யா ஆச்சரியமாகப் பார்த்தாள். "ஏங்க அப்படி கேக்கறீங்க? நான் படிச்ச படிப்பு வீணாகாது. கிடைக்கும் சம்பளம் நம்ப தேவைகளுக்கு உதவுமே!" "வேண்டாம் அகல். எனக்கு இஷ்டமில்ல. குழந்தைக்கு ஒரு வயதுதான் ஆகற்து. இப்போ நீ குழந்தையோட அவசியமா இருக்க வேண்டிய நேரம். வேணுமானா கொஞ்சநாள் கழிச்சு போகலாம்." "அத்தைதான் சொன்னாங்க, நீ படிச்ச படிப்பு வீணாக வேண்டாம். நான் குழந்தையை உன்னைவிட நல்லா பார்த்துப்பேன். ஏதோ ஒரு பத்தாயிரம் சம்பளம் வந்தாலும் உன் செலவுக்காவது ஆகுமேனு". "அப்போ இது எங்கம்மா ஐடியாவா? அதான பார்த்தேன். என் தங்கச்சியும் கூட இருந்து உனக்கு ஏத்தி விட்டிருப்பாளே?" "ஆமாங்க. அதில் எதுவும் தப்பில்லையே?என் நல்லதுக்கு தான் சொல்றாங்க?" "ஆமாம்..ஆமாம். ரொம்ப நல்லது. என் அண்ணன் அண்ணி ஏன் தனியா இருக்காங்கனு யோசிச்சியா?" "உங்க அண்ணி எந்த வேலையும் செய்யாம

காயம்

படம்
நமக்கு பிடித்தவர்களும் நம்மைப் பிடித்தவர்களும்  நம்மைக் காயப்படுத்தும்போது மனதின் வலி அந்தக் காயங்களை விட அதிகமாகும்.. மற்றவர் சொல்லும் ஆறுதல் என்பது காயத்திற்கு தற்காலிக தீர்வே..நாமே நம் மனதை ஆற்றிக் கொள்வதே நிரந்தர தீர்வு!

அலை

படம்
இடைவிடாத முயற்சிக்கு சான்று கடல் அலை! கரைக்கு வந்து எத்தனை முறை அழிந்தாலும் சோர்வதில்லை! எத்தனை வெறுத்தாலும் அலை கடலை விட்டு நீங்குவதில்லை! ஓய்வின்றி உழைக்கும் உறுதிக்கு உதாரணம் உற்சாகம் தரும் கடல்அலை! உலகம் தோன்றிய நாள்முதல் சோம்பலின்றி  தன் கடமையை செவ்வனே செய்யும் அலை! புயல் மழை நேரத்திலும் தாகம் தீராமல்  கடலில் ஆடும் அலை! நீலக் கடலின் மேல் அலங்கார ஆட்டம் போடும் அழகிய அலை! குழந்தை முதல் முதியோர்வரை அனைவரும் ரசிக்கும் அழகு அலை!

கண்

படம்
கண்ணே! மணியே! கட்டிக் கரும்பே! உன் கண் அசைவில் அகிலத்தைக் கண்டேன்! கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது! கண்டவர் கண் வீச்சைத் தவிர்த்தேன்! என் கண்மணியே நீ கண் உறங்க உனைத் தாலாட்டினேன்! இவ்வுலகின்கண் நீயே என் கண்கண்ட செல்வமன்றோ! கண் ஆயிரம் பேசும் காதலோடு.. கண் பல கட்டளைகளை இடும் அதிகாரத்தோடு.. கண் ஆயிரம் விளக்கம் தரும் மகிழ்ச்சியோடு.. கண்ணுக்கு நிகர் கண்ணே!

காயம்

படம்
மற்றவர் சொல்லும் ஆறுதல் என்பது காயத்திற்கு தற்காலிக தீர்வே.. நாமே நம் மனதை ஆற்றிக் கொள்வதே நிரந்தர தீர்வு! நமக்கு பிடித்தவர்களும் நம்மைப் பிடித்தவர்களும்  நம்மைக் காயப்படுத்தும்போது மனதின் வலி அந்தக் காயங்களை விட அதிகமாகும்..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

படம்
தமிழுக்கு அமுதென்று பேர் எனப் பாடிய பாரதி வழிநின்று  இன்று பிறந்த இந்த பிலவ புத்தாண்டில்  நாம் அனைவரும் சிறந்த நல்வாழ்வும் நிறைந்த சிந்தனையும் சீரிய பெருமைகளும் ஓங்கிய ஒற்றுமையும் பெற்று கொரோனா முற்றிலும் மறைந்து காணாமல் போக.. நாமனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ.. யாதுமாகி நின்ற காளி அருள்தர வேண்டுகிறேன்🙏 இன்று பிறந்த 'பிலவ'  தமிழ் புத்தாண்டில்  நன்மைகள் பெருகட்டும்.. வன்மைகள் அழியட்டும்.. வெற்றிகள் மலரட்டும்.. தோல்விகள் விலகட்டும்.. கலலைகள் மறையட்டும்.. எண்ணங்கள் சிறக்கட்டும்.. விரும்பியவற்றைப் பெற்று மகிழ்ச்சியும்  மனநிம்மதியும் பெற என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

சுய சம்பாத்யம் சுகமே!

படம்
எனக்கு வேலைக்கு போகும் ஆசை உண்டு. பதினொன்றாம் வகுப்பில் 78% மதிப்பெண் வாங்கி மேலே பட்டப் படிப்பு படித்து பெயருக்கு பின்னால் டிகிரி போட்டுக் கொள்ள ஆசை! என் அப்பா தனியார் வங்கியில் பணி புரிந்து கொண்டிருந்தார். அந்நாளில் வங்கி ஊழியர்களின் குழந்தைகளில் ஒருவருக்கு அதே வங்கியில் வேலை தரும் முறை இருந்தது. அதனால் நான் அப்பா வங்கியில் பணி புரிந்து சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை! என் சம்பாத்தியத்தில் பெற்றோர்,  உடன் பிறந்தோருக்கு ஏதாவது வாங்கித் தர ஆசை! ஹ்ம்ம்..எத்தனை ஆசை இருந்து என்ன பயன்? என் பெற்றோர் மேலே படிக்க அனுமதிக்கவில்லை. இந்தப் படிப்பு போதும் என்று சொல்லி விட்டதுடன் இருபது வயதுக்குள் திருமணம் செய்யவும் முடிவெடுத்து விட்டார்கள். அதனால் நானே சம்பாதிக்கும் ஆசை அப்பவே புஸ்வாணமாயிற்று! எனக்கு பார்த்த முதல் பையனே எனக்கு கணவரானார். புகுந்த வீட்டினரும் வேலைக்கு போகாத பெண்ணே வேண்டுமென்று பார்த்ததால் நான் அவர்களுக்கு Okயாகி விட்டேன்! அப்பொழுது நிறைய வார மாதப் பத்திரிகைகள் வரும். எனக்கு படிப்பதில் இருந்த ஆர்வத்தால் எல்லா புத்தகங்களும் வாங்கிப் படிப்பேன். என் இருபத்து மூன்றாம் வயதில் மங்கையர் மலரில

கோப்பை வென்றவை

#இன்றைய சிந்தனை..பரிசு, உற்சாகம், வைகறைஎ #என்மருமகள் ஆர்த்திகணேஷ் பாட்டு #என் பெண் கிரிஜா குழந்தைகளுடன் நடனம் #டான்ஸ்பேபிடான்ஸ்..என் பேத்தி நடனம்

ஓசை

படம்
  குழந்தையின் சிணுங்கல் ஓசை கேட்டதுமே தாய் பதறிச் செல்கிறாள் சமாதானம் செய்ய! ######### ஆரவாரமில்லாத கடலை அசைக்கிறது காற்றின் ஓசை! அவற்றை அலைகளாக மாற்றி நம் அழகான கால்களை ஓசையின்றி தழுவிச் செல்லும்! ####### வாவா என் அன்பே அன்று உன் காலடி ஓசை கேட்டு நான் கிறங்கிக் கிடக்கிறேன்! பகலில் உன் புகைப்படம் பார்த்தும் இரவில் நட்சத்திரங்களை எண்ணியும் உன் காலடி ஓசைக்காய் காத்திருக்கிறேன்! உன் கண்ணின் இமை ஓசையில் என்ன மாயம் செய்தாயோ.. என் நெஞ்சு துடிக்கும் ஓசையை நீதான் அறிவாயோ! நீ தந்த முத்த ஓசை என்னை நானே மறக்க வைத்ததே! உன் அன்னநடை ஓசை என் மேனியில் தாளம்போடுதே! காதலியே விரைந்து வா.. உன்னைக் காலம் முழுதும் நெஞ்சில் சுமக்க நான் தயார்! #######

பரிசு

படம்
தான் எழுதிய 'அம்மா' என்ற கட்டுரைக்கு முதல் பரிசு என்றான் என் மகன்! நீயே எனக்கு இறைவன் தந்த பரிசுதானே என்று உச்சி முகர்ந்தேன் நான்! 

காதலி

படம்
வார்த்தைகளால் புரியாத  கண்ணால் சொன்னாலும் அறியாத காதலை  உந்தன் ஆருயிர்க்  காதலி  நான் உணர்த்துகிறேன் ஒரே ஒரு முத்தத்தால்!

உற்சாகம்

படம்
ஆயிரம் தடைகள்  இருந்தாலும்.. மனதில் உற்சாகம்  இருந்தால்.. அதற்கான வழிகளை கடைப்பிடித்து..  அவற்றைக் கடந்து  வெற்றிக் கனியைப் பறிக்கலாம்! ++++++++++++++++++ காலைப்  பொழுதில் கலகலப்பு.. நட்பை வளர்க்கும் நல்லநேரம்..  இளைஞர் மனதில் இன்ப எண்ணம்.. முதியோர் இதழில் முகிழ்க்கும் புன்னகை.. மனம் விட்டு பேசும் மாலை நேரங்கள்.. உற்சாகம் தருமே தேநீர் பொழுதுகள்! +++++++++++ மனம் சோர்ந்து உடல் தளர்ந்து  இருக்கும்போது  கிடைக்குமே உற்சாகம் நம் பால்மணம் மாறா பச்சைக் குழந்தையின் பொக்கைவாய்ச் சிரிப்பில்!  

சலங்கை ஒலி(100வரிக்கதை)

படம்
உங்கள் கருத்து உங்கள் எழுத்து சலங்கை ஒலி அது ஒரு சிறு கிராமம்அன்று கமலியின் கணவரின் தாத்தாவிற்கு தொண்ணூறு வயது நிறைந்ததை ஒட்டி  ஹோமம், பூஜைகள் நடந்தது. அவருக்கு மனைவி மறைந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு நான்கு மகன்களும் இரண்டு மகள்களுமாக பெரிய குடும்பம். இன்று  அவரின் ஆசிகளைப் பெற அத்தனை பேரும் குடும்பத்தோடு வந்திருந்தார்கள்.ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக வீடே அமர்க்களமாக இருந்தது. அன்று இரவு எல்லோரும் நிலா வெளிஙச்சத்தில் அமர்ந்து சாப்பிட்டபின் மாடியில் படுத்துக் கொண்டனர். கமலிக்கு திறந்த வெளியில் படுத்து பழக்கமில்லாததால் வெகு நேரம் தூக்கம் வரவில்லை. சற்று கண் அசந்த நேரம் ஜில்ஜில் என்று சலங்கை ஒலி சத்தம் கேட்டது. கொலுசு அணிந்த யாரோ கீழே செல்கிறார்கள் என நினைத்தவள் திரும்பிப் படுத்து உறங்க முயற்சித்தாள். அந்த சத்தம் நெருங்கி வருவது போல் கேட்க, எழுந்து பார்க்கலாமா என்று நினைத்தவள் பயத்தில் தலையோடு கால் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள். சற்று நேரத்தில் அந்த சலங்கை ஒலி வெகு தூரம் சென்று நின்று விட்டது. காலையில் எழுந்த கமலிக்கு இந்த விஷயம் மனதிலேயே இருந்து பயத்தை ஏற்படுத்தியது. ஏதாவத

விரல்

படம்
பத்துமாதம் சுமந்து பெற்ற என் பட்டு செல்லமே! உன்னைப் பாசத்தோடுதீண்டியது என் பத்து விரல்களாலும்!  பாலருந்தும்போது உன்விரல்கள் என் மேனியில் பட்டு பரவசமானது என் தேகம்!

கோடை விடுமுறை நினைவுகள்!

படம்
கோடை விடுமுறை நினைவுகள்! படிக்கும்போது  விடுமுறை நாட்களை நினைக்கும்போதே ...அதுவும் கோடை விடுமுறைஎன்றாலே மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது? ஒவ்வொரு வருடமும் போவது ஒரே இடம்தான் என்றாலும் அலுத்ததில்லை! கும்பகோணத்திலிருந்த என் தாய் வழி தாத்தா வீட்டிற்குத்தான் நாங்கள் செல்வோம். நான் எழுதும் அனுபவம் 1960களில்..! என் பெரிமா, சித்தி குடும்பமும் அங்கு வந்து விடுவார்கள்.என் பாட்டி சிறு வயதிலேயே இறந்து விட்டார். ஏழு குழந்தைகளையும் என் தாத்தா  தானே வளர்த்தார். பெரிய மாமா குடந்தையில் வேலையில் இருந்தார். அவர் குழந்தைகள், நாங்கள்,என் பெரிமா, சித்தி குழந்தைகள் என்று ஒரு டஜனுக்கு மேல்! நாங்கள் சென்னையிலிருந்து ரயிலில் unreserved ல்தான்  செல்வோம்.துணிமணிகளுக்கு டிரங்க் பெட்டி...கூடவே தலைகாணி,போர்வை,ஜமக்காளத்துடன் ஒரு படுக்கை கட்டி விடுவார் அப்பா! இரவு ரயிலில்தான் பிரயாணம்.. ரயிலில் ஏறியதும் என் அம்மா அப்பா கீழ் இரண்டு சீட்களில் என்  சிறிய தம்பிகளுடன்  படுத்து விட, நானும் என் பெரிய தம்பியும் கீழே சீட்களுக்கு இடையில் ஜமக்காளம் விரித்து படுப்போம்! சீட்களுக்கு கீழே எங்கள் டிரங்குப் பெட்டிகள்! அவற்றுக்கிடையே

ஆர்வம்

படம்
நமக்கு பிடித்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.. ஆர்வம் ஏற்பட்டு விட்டால் எந்த விஷயத்தைப் பற்றியும் அறியாமல் இருக்க முடியாது.. அறிந்த விபரத்தை ஆர்வத்தினால் செயல் படுத்தாமல் இருக்க முடியாது.. அதில் கிடைக்கும் வெற்றியே தளராத நம் ஆர்வத்தின் பயன்பாடு!

தனிமை

படம்
தனிமை அதை நேசித்தால் தரும் இனிமை.. நம்மை நாமறிய அவசியம் தேவை தனிமை.. மனக்கவலை மறக்க வேண்டுமே தனிமை.. குழப்பத்தில் சிந்திக்க தேவை தனிமை.. நமக்குள் மாற்றம் நிச்சயம் தருமே தனிமை.. கவிதை எழுத அமைதியுடன்  தேவை தனிமை.. காதலுடன் கடிதம் எழுத தேவை தனிமை.. ஒரு அளவுக்கு மேல் கொடுமையே இந்தத் தனிமை!

நெருப்பு

படம்
 நெருப்பிற்கு தெரியாது சாம்பலாகும் பொருள்களின் மதிப்பு! அடுப்பு நெருப்பு உணவை சமைக்கும்.. கோப நெருப்பு உறவைப் பிரிக்கும்.. நீரிலே அழியும் நெருப்பு.. வெயிலாய் தகிக்கும் நெருப்பு.. திருமணத்திற்கு சாட்சியாய் நெருப்பு.. இறைவனின் யாகத்திற்கும் நெருப்பு.. நெருப்பாய் சூரியன் சுட்டாலும் நித்தமும் தேவை அந்த செந்நிற ஆதவன் தரிசனம்!

நான் எழுதுகிறேன்.. மகன் அல்லது மகள் காதலை அறிந்த தருணம்

படம்
காதல் தவறல்ல! காதலுக்கு எங்க வீட்ல செம மரியாதை..என் வீட்டில் மூன்று குழந்தைகளுக்கு காதல் திருமணமாச்சே! என் பெண் மும்பையில் டாக்டருக்கு படித்தபோது சீனியர் மாணவனைக் காதலித்தாள். அவன் மகாராஷ்டிராவை சேர்ந்தவன். பையன் பரமசாது. (இப்பவும் இவள்தான் அவனை விரட்டிக் கொண்டிருக்கிறாள்!) ரொம்ப மரியாதை. வீட்டுக்கு அடிக்கடி வருவான். எங்களை அம்மா அப்பா என்றுதான் கூப்பிடு வான். என் பிள்ளைகளுக்கும் அவனைப் பிடித்துவிட, அவன் பெற்றோரும் சம்மதிக்க எங்கள் முறையிலும், அவர்கள் முறையிலும் ஜோராக திருமணம் நடத்தினோம். இரண்டு குழந்தைகள். இன்றுவரை மிக அருமையாக குடும்பம் நடத்தி நல்ல மருமகள் என பெயர் வாங்கி விட்டாள். அவள் மாமனார் மாமியார் அவளுடன்தான் இருக்கிறார்கள். 'உங்கள் பெண்ணை மருமகளாக அடைய நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்' என்பார் அவள் மாமியார். அவருக்கு தமிழும் எனக்கு மராட்டியும் பேசத் தெரியாது ஹிந்தியில் நேரம் போவது தெரியாமல் பேசுவோம்! என் முதல் மகன் ஜெர்மனியில் கணினித் துறையில் பணி புரிந்து வருகிறான். அவனுக்குத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும்போது, ஒரு ரஷ்ய நாட்டுப் பெண்ணை தான் காதலிப்பதாகச் சொன்னான்.