இதுவும் பெண்ணா..(100வரி)

கனகாவுக்கு இது மூன்றாவது பிரசவம். முதல் மூன்று பெண்களோடு இதுவும் பெண்ணாக இருக்கக் கூடாதே என்ற பயம். வலியில் கதறினாள். ..சும்மா கத்தாத. நல்லா முக்கிவிடு..

என்று நர்ஸ் சத்தம் போட, ஒரு நிமிடம் மூச்சை இழுத்து முக்கிவிட குழந்தை வெளியில் வந்து அழுத சத்தம் கேட்டது. ..என்ன குழந்தை?..என்று ஆவலாகக் கேட்டவள்,பெண் என்றதும் கலங்கினாள்.


வீட்டிற்குப் போனதும் கணவனும் மாமியாரும் மாறிமாறி வசை பாடினார்கள். பெண்ணுக்கு வேம்பு எனப் பெயர் வைத்தாள். அவ்வூரிலிருந்த ஒரு அநாதை ஆசிரமத்தில் யாராவது கேட்டால் தன் குழந்தையை தத்து கொடுப்பதாகக் கூறினாள்.


ஆசிரமத்தினர் ஒரு பிரான்ஸ் நாட்டு தம்பதியருக்கு குழந்தை வேண்டும் என்றபோது தயங்காமல் குழந்தையை  முத்தமிட்டு..அங்கு சென்றாவது சுகமாக இரு..என்று சொல்லிக் கொடுத்தாள். அவர்கள் கொடுத்த பணத்தை மாமியார் வாங்கிக்கொண்டாள்.


வேம்பு  ஜுலியட்டானாள். நல்ல கறுப்பானாலும் அற்புத அழகு. உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டவள் முதலிடம் பெற்று கிரீடம் சூடிக் கொண்டாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

உண்மை..துணிச்சல்(100வரி)

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1