உண்மை..துணிச்சல்(100வரி)

 

"ஏங்க குழந்தைகளோட எங்கேயாவது  போய்ட்டு வரலாமா" மாலதி கேட்டாள்.

"குழந்தைகளையே கேட்கலாம்" என்றான் IT கம்பெனியில் வேலை செய்யும் மாதவன்.

"ரமண், சுமன் இங்க வாங்க.  நாம ஜாலியா வெளிய எங்க போலாம்?"

"ஹைய்யா..பீச்சுக்கு போலாம்பா"


குழந்தைகள் சற்று நேரம் தண்ணீரில் விளையாடிவிட்டு மணலில் வீடு கட்டி அதில் அறைகளைத் தடுத்து உள்ளே நாற்காலி டி.வி. எல்லாம் செய்தார்கள். மாலதியும் 

மாதவனும் தாங்கள் வாங்கப் போகும் வீடு பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.


"யார் வீடு அழகா இருக்குனு  அப்பா அம்மாவைக் கேக்கலாமா?"என்று  பெற்றோரை அழைத்தனர்.

மாதவன் ஐந்து வயது சுமனிடம் "ரமண் வீட்டில் இரண்டு பெட்ரூம் இருக்கு. உன் வீட்டில்  ஒரு ரூம்தானே இருக்கு"

"நான் பெரியவனானதும் நீங்களும், அம்மாவும் நம்ம தாத்தா,பாட்டி இருக்கற ஹோமுக்கு போயிடுவீங்களே.

அதனாலதான்"என்றதைக் கேட்டதும் இருவரும் சம்மட்டியால் அடிபட்டதுபோல் உணர்ந்தார்கள்.


உண்மையைச் சொல்லும் துணிச்சல் குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு.

கருத்துகள்