3.திரும்பிப் பார்க்கிறேன்..


நான் ஒரு எழுத்தாளர். பயணக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள் என்று நிறைய தமிழ் வாரமாத  இதழ்களில் எழுதியுள்ளேன். முகநூல் தளங்களிலும் எழுதுவதுண்டு. என்தோழி ராதாநரசிம்மன் மாம்ஸ்ப்ரஸ்ஸோவில் எழுதுவதை அவரது முகநூல் பக்கத்தில் பகிர அதைப் பார்த்துதான் நான் மாம்ஸ்பிரஸ்ஸோவில் இணைந்தேன். இது பெண்களுக்கு மட்டுமான தளம் என்பதால் எந்தவிஷயத்

தையும் இலகுவாக மனம்விட்டு எழுதமுடிகிறது. மற்ற தளங்களில் இப்படி முடியாது. இதில் தரும் தலைப்புகள் நம் இளமைக்கால நிகழ்வுகளைப் பற்றி இருப்பதால் மறந்த நாட்களை நினைவுபடுத்தி புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. தினம்ஒரு சிந்தனை, 100 வார்த்தைகதை, எங்கள்கருத்து, உங்கள்எழுத்து உங்கள்கருத்து உங்கள்எழுத்து இவற்றோடு நம்மனதில் தோன்றுவதையும் வலைப்பதிவுகளாக எழுதுவது மனதுக்கு உற்சாகமளிக்கிறது. எதுவுமே எழுதத் தெரியாதவர்கூட இதில் இணைந்தால் அருமையாக எழுதும் திறமை ஏற்படும். இந்த கரோனா நேரத்தில் பெண்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

உண்மை..துணிச்சல்(100வரி)

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1