அழகிய பெண்ணொருத்தி(100வரிக்கதை)!


குமரன், சுதாகர், மணி மூவரும் கல்லூரியில்  படிக்கும் நண்பர்கள். 


உயரமான அழகிய உடற்கட்டுடன் Bob cut ஹெர்ஸ்டைலும், அதில் ஒரு சிவப்பு ரோஜா, தோளில்  கைப்பையுடன் அழகிய பெண்ணொருத்தி சென்றாள்!


"அங்க போறது நம்ம காலேஜுக்கு புதுசா வந்திருக்கற லெக்சரரோ?" மணிகூவினான். குமரன் பெண்களைக் கண்டால் ஜொள்ளுவிடும் ரகம்!  அதே நேரம் அந்தப் பெண்ணின் கர்சீஃப் கீழேவிழ,  "நான் அதை அவளிடம் கொடுத்து விட்டு யாரென்று விசாரிக்கிறேன்" என்று வேகமாகச்சென்று கர்சீஃப்பை எடுத்து  அதற்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அவளைத் தொடர்ந்தான். 


சுதாகரும் மணியும் கட்டைவிரலை உயர்த்தினர்!


அவளுக்கருகில் சென்ற குமரன்,"Excuseme. இந்தாங்க  உங்க கர்சீஃப்" என்றபடி நீட்ட, திரும்பியவளைப் பார்த்தவன் அதிர்ந்தான்.


"டேய்..நீ ரகுதான.ஏண்டா இப்படி?" என்றதும், மூவருமாகச் சேர்ந்து ஏப்ரல்ஃபூல் என்று கத்தினர்! 


"யார் புடவை கட்டிக்கிட்டு போனாலும் ஜொள் விட்றியே? அதான் உன்னை ஏப்ரல்ஃபூலாக்க நாங்க இப்படி ஒரு ஐடியா செய்தோம்!  இனியாவது பெண்களிடம் மரியாதையா நடந்துகொள்."

கருத்துகள்