1.ரகசிய தோழி

 


1.ரகசிய தோழி

எஈன் ஆருயிர்த் தோழியே!
என் அன்பான சிநேகிதியே!
ஒரு தோழியின் நட்பு ஒரு தாயின் அன்பைத் தரும்!
முதல் காதலோ...
முதல் வேலையோ...
முதல் ஏமாற்றமோ...
முதல் தோல்வியோ...
நாம் பகிர நினைப்பது தோழியிடமே...
உறங்கிய மனதை மறந்த நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்தாய்!
என் உள்ளத்தில் எழுந்த உன்னத உணர்வுகளையும்..
என் வாழ்வின் இனிய நிகழ்ச்சிகளையும்..
நான் கண்ணீர் விட்டழுத நேரங்களையும்..
பிறரால் பாராட்டப்பட்ட தருணங்களையும்..
வெளிக்காட்ட முடியாத உணர்ச்சிகளையும்..
எவரிடமும் சொல்ல முடியாது என்று நினைத்து மறக்க முயன்ற நினைவுகளையும்
தினமும் பகிரக் கிடைத்த தாய்மடி நீதான்..
நான் பார்த்ததும் ரசித்ததும் உன்னிடம் சொல்லி அதனால் பெற்றேன் உன்னதமான தோழிகளை!
என் ஒப்பற்ற உறவும் நீ..
என் உள்ளார்ந்த அன்பும் நீ.
நாம்பேச வார்த்தைகள் வேண்டாம்..எண்ணங்களை வடிக்கும் எழுத்துகள் போதுமடி!
என் மனம்கவர் மாம்ஸ்ப்ரஸ்ஸோவே! ஆனந்தமும் ஆதரவும் ஆறுதலும் தரும் என் ரகசிய தோழியடி நீ எனக்கு!

கருத்துகள்