#ஊரடங்கில்மீண்டும்நாம்..

 


#ஊரடங்கில்மீண்டும்நாம்..

அந்தநாள் ஞாபகம்..


ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே😔

சென்ற ஆண்டு மார்ச்சில் கொரோனா ஆரம்பித்தபோது..இதோ மூன்று மாதத்தில் போய்விடும்.ஆறு மாதத்தில் போய்விடும்...என்றெல்லாம் நினைக்க கொரோனா ஒரு அரக்க உருவமெடுத்து நம்மை இப்படி வருடக் கணக்கில் ஆட்டி வைக்கும் என்று யோசித்தோமா? என்று மறையும் இந்த கொரோனா?


இதில் ஒரு சந்தோஷம் என்னவெனில், நாங்கள் ஆகஸ்ட் மாதம்தான் கும்பகோணம் அருகில் வீடு கட்டி முடித்து கிரஹப்ரவேசம் செய்தோம். அப்போது சென்னையில் இருக்கும் என் இரண்டாவது மகன் குடும்பத்துடன் வந்தான். இங்கு நெட்வொர்க் மிக நன்றாக வந்ததால் திரும்ப சென்னை போவதாக இருந்தவன் இங்கேயே தங்கி விட்டான். இரண்டு பேத்திகளுக்கும் இந்த இடம், மாசில்லாத சுற்றுப்புறம், எல்லாம் மிகப் பிடித்து விட்டதால்  நன்கு என்ஜாய் செய்கிறார்கள். பிள்ளையும் onlineல் வேலை பார்ப்பதோடு தோட்டம் போட்டு நிறைய செடிகளை வளர்த்து அழகாக பராமரிக்கிறான். காய்கறிகளை நம் தோட்டத்திலிருந்தே பறித்து சமைப்பதில் ஒரு மகிழ்ச்சிதானே?


வீட்டைப் பார்க்கும் ஆசையில் கிரகப்ரவேசத்திற்கு வர முடியாத என் பெண் பேரன், பேத்தியுடன்  செப்டம்பரில் வந்து இருந்துவிட்டு சென்றாள். 

அப்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்திருந்தது. அதன்பின் நானும் என் கணவரும் பிப்ரவரியில் பெண் வீட்டிற்கு ஹைதராபாத் சென்று சில நாட்கள் இருந்துவிட்டு வந்தோம். அது ஒரு மாற்றமாகவும் மனதிற்கு மகிழ்ச்சியும் தந்தது.


இந்த வருடம் நாங்கள் ரொம்பவே மிஸ் பண்ணுவது வெளிநாட்டு பிள்ளைகள் வீட்டிற்குப் போக முடியாமல் போனதுதான். வெளிநாட்டுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறையே போக முடியும். 

என் இரண்டு பிள்ளைகள் லண்டனிலும் பெர்லினிலும் இருப்பதால் இருவர் வீட்டிலுமாக ஆறு மாதங்கள் இருந்துவிட்டு வர சென்ற ஆண்டு பிப்ரவரியிலேயே விஸா apply செய்திருந்தோம். 


அத்துடன் அங்கு ஈஸ்டர் விடுமுறையில் எல்லோருமாக போய் எங்கெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் என ஏகப்பட்ட ப்ளான்! அங்கெல்லாம் வசந்த காலம் குளிர் குறைந்து நன்றாக இருக்கும்.நம்மூர் கோடைக்காலத்திலிருந்து தப்பித்து அங்கு பறக்க எண்ணியிருந்தோம்! கொரோனாவால் விஸா கிடைக்காமல் எல்லாம் கேன்சல். இந்த வருடம் போகலாமென்றால் கொரோனா இன்னும் அதிகமாகி விட்டதே.


பிள்ளைகள், மருமகள்கள், பேரன் பேத்திகளையும் பார்க்க மிகமிக ஆவலாக இருந்த எங்களுக்கு ஏமாற்றம். குழந்தைகளோ

...கொரானோ சரியானதும் கண்டிப்பா வந்துடு பாட்டி...என்கிறார்கள்.இனி அடுத்த வருடம்தான் வர முடியும் என்றதும்  லண்டனில் இருக்கும் என் குட்டிப் பேத்தி..We miss u very much Thatha Patti. Come soon..என்று சொன்னதைப் பார்க்க பாவமாக இருக்கிறது. 


அவர்களோடு தினமும் வீடியோவில் நேரில் பார்த்து பேசினாலும், கூட  இருந்து சந்தோஷமாக இருக்கும் சுகம் தனிதான். ஆனாலும் அந்நாட்களைப் போலின்றி இப்பொழுது எவரிடமும் நேரே பார்ப்பதுபோல் பார்த்து பேசி சந்தோஷமடைகிறோமே..

அது ஒரு வரம்தான். அந்த வசதி இருப்பதை நினைத்து சந்தோஷப் படுகிறேன்.


பெண் பிள்ளைகளைப் பார்ப்பதும் அவர்களோடு இருப்பதும் சந்தோஷம் என்றாலும் அவர்கள் வாரிசுகளிடம் நமக்கு இருக்கும் பாசம் தனிதான். நம் குழந்தைகளிடம் 

காட்டும் கண்டிப்பை பேரன் பேத்திகளிடம் காட்ட முடியாது. 


ஐஸ்கிரீமோ, ஆனியன் பக்கோடாவோ, குச்சி மிட்டாயோ...தம் பெற்றோர் வாங்கித்தர மறுப்பதை நம்மிடம் கேட்கும்போது நம்மால் மறுக்க முடிவதில்லையே!  இனி அந்தக் குழந்தைகளோடு நேரம் செலவிடவும் ‌அவர்களுக்கு சரியாக விளையாடவும்  சில மாதங்கள்..அல்லது வருடங்களோ காத்திருக்க வேண்டும் என்பதுதான் வருத்தமாக உள்ளது.Really we miss them very much🙁


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)