பூவுக்குள் பூகம்பம்..(100 வார்த்தை கதை)
சாது மிரண்டால்...
ரத்னா மிகவும் அமைதியான பெண். எவரையும் கடுமையாகப் பேசமாட்டாள். பள்ளி, கல்லூரியிலும் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருப்பவள். படிப்பு முடித்து வேலைக்குச் சென்றவள் அங்கும் பெண்களிடம் மட்டுமே பேசிப்பழகுவாள். ஆண்களிடம் அநாவசியமாகப் பேசமாட்டாள். அங்கு வேலை செய்யும் ரஞ்சன் மும்பையைச் சேர்ந்தவன். அவன் குடும்பம் இரண்டு தலைமுறையாக இங்கு வசிப்பதால் தமிழ் நன்றாகப் பேசுவான். பெண்களிடம் அநாவசியமாக பேசுபவன், அவர்களைக் கண்டபடி தொட்டுப் பேசுவான். ரத்னா அதுபற்றி அவர்களிடம் கேட்க,'அவன் மிக நல்லவன். ஃப்ரீயாகப் பழகுவான்' என்றார்கள்.ஒருநாள் மற்ற பெண்களைத் தொடுவதுபோல் ரத்னாவையும் தொட்டுப்பேச,
வந்தது கோபம் ரத்னாவுக்கு.
"என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பெண்களை என்னசெய்தாலும் பயந்து வாய்மூடி இருப்பார்கள் என்று நினைத்தீர்களா? ஈவ்டீஸிங் என்று போலீஸில் புகார் செய்வேன்" என்றபடி சத்தம்போட அனைவரும் அங்கு குழுமி விட்டனர்.ரஞ்சன் அவமானத்தில் தலை குனிந்தான்.சாதுவாக இருக்கும் அவள் பூவுக்குள் பூகம்பமாகக் கோபம் கொண்டதைப் பார்த்து அனைவ
ருக்கும் அவள்மேல் மரியாதை ஏற்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக