2. இளமை திரும்புதே..!

...என்னாச்சு உனக்கு? ஏதோ யோசிக்கற. எழுதற. ஏதாவது புதுதளத்தில் சேர்ந்திருக்கயோ?...
...அட  கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டேள்!...
...அதில் என்ன ஸ்பெஷலா எழுதின?...
...எழுத விஷயமா இல்ல. முதல்ல உங்களைப் பத்திதான் எழுதினேன்...
...என்னைத்தவிர வேற நினைவே வராதா உனக்கு?...
...முதல்ல உங்களைப் பற்றி. அப்புறம் நம்ம குழந்தைகள் பேரன் பேத்தி பற்றி...
...ஆடல்பாடல் சமையல் எல்லாம் உண்டா?...
...ஆமாம். நம்ம பேத்திகள் டான்ஸ் மாட்டுப்பெண் பாட்டு சமையல் எல்லாம் போட்றேன். அதிலயும் நிறையபேர் திறமைகள் வாழ்க்கைஅனுபவங்கள் படிக்கும்போது சுவாரசியமா  இருக்கற்தோட, பல விஷயம் தெரிஞ்சுக்க முடியற்து. இதுவரை இதில பணம்கூட சம்பாதிச்சிருக்கேன் தெரியுமா?...
...ஹ்ம்ம். வரவர என்னோட பேசக்கூட உனக்கு நேரமில்ல...
...அச்சோ. கோபமா? எழுதற நேரம் தவிர உங்களோடதான பேசறேன்..
...இளமை திரும்பின மாதிரி ஜாலியா இருக்க! உனக்கொரு பொழுதுபோக்கு. என்ஜாய்!..
..நான் இளமையானா உங்களுக்கு சந்தோஷம்தான!என்ஜாய் பண்ண என்ஜா(சா)மி பர்மிஷன் கொடுத்துட்டேள். தேங்க்ஸ்!..

கருத்துகள்