ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.(3)

 


நாற்பது வருடங்கள் சென்னைக்கு உறவினர் வீடுகளுக்கும், விசேஷங்களுக்கும் வந்து போனதோடு சரி. '76ல் எனக்கு திருமணமானதும் திருச்சியில் வாழ்க்கை. நாங்கள் சென்னையில் settle ஆக விரும்பி என் கணவரின் வங்கிக் கடனில் 1976ல் சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோ அருகில் தனிவீடு வெறும் 40000 ரூபாயில் வாங்கினோம். 


ஆறு மாதத்தில் என் கணவருக்கு உ.பி.யில் மதுராவுக்கு மாற்றல். வீட்டில் வாடகைக்கு இருந்த

வர்களால் நிறைய தொந்தரவு. என் கணவரும் அடிக்கடி வருவது கஷ்டமாக, இரண்டு வருடங்களில் விற்க வேண்டியதாயிற்று. 


அந்த வீடு இருந்திருந்தால் 

இன்று அதன் மதிப்பு கோடிகளில்! நானும் சென்னை வாசியாக இருந்திருப்பேன்!


2001லிருந்து மும்பையில் பத்து வருடங்கள். அச்சமயம் என் தம்பி வேளச்சேரியில் இருந்தபோது அம்மா அப்பாவைக் காண அடிக்கடி சென்னை பயணம். 


என் பிள்ளைக்கும் சென்னையில் வேலை கிடைக்க, நினைத்த நேரமெல்லாம் சென்னை கிளம்பி வந்து விடுவேன்! இப்படியெல்லாம் சென்னை ஆசை அவ்வப்போது நிறைவேறியது!


மாட்டுப் பெண்ணுக்கு  சென்னை. 2011ல் என் 

மகன் வேலை நிமித்தம் சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் குடியேறினோம். எதிரில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை. சென்னையில் கீழ்ப்பாக்கம் என்றாலே பைத்தியத்தை மனதில் வைத்து 'அப்படியா.. நல்லா இருக்கீங்க இல்ல' என்பார்கள்! 


கீழ்ப்பாக்கம் எல்லா

வற்றிற்கும் மையப்பகுதி. அங்கிருந்த இரண்டு வருடங்களும் மறக்க முடியாத நாட்கள். அந்தத் தெருவில் போக்குவரத்து மிக அதிகம்.. வீட்டுக்குள் இரண்டு நாளுக்கு ஒருமுறை தூசு படிந்து விடும்! 


எங்கள் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில்  ஈகா , சங்கம் தியேட்டர்கள்.கொஞ்சம் தள்ளி புரசை அபிராமி! என் கணவர், பிள்ளைக்கு சினிமாவில் ஆர்வம் இல்லாததால் நானும் என் மாட்டுப் பெண்ணும் அடிக்கடி நல்ல படங்களுக்கு சென்று விடுவோம். பேத்திக்கு தாத்தா காவல்!


நினைத்தால் தி.நகருக்கு இருவரும் கிளம்பி விடுவோம்! புடவை, சுடிதார், இமிடேஷன் நகைகள் என்று வாங்குவதோடு சரவணபவனில் சாப்பாடு என்று ஜாலியாக சுற்றிவிட்டு வருவோம்!


விஜய் டி.வியின் பக்தித் திருவிழா, மார்கழி மகா உத்சவம், டிசம்பர் கச்சேரிகளுக்கு நானும் என் கணவரும் ஸ்கூட்டரில் சென்று வருவோம். மார்கழியில் விடிகாலை கிருஷ்ணகானசபாவில் நடக்கும் ஸ்ரீவிட்டல்தாஸ் பஜனையைத் தவற

விட்டதில்லை. இலவசமாகக் கிடைக்கும் இதுபோன்ற கலா நிகழ்ச்சிகளுக்கு சென்னை போல் வேறு இடம் கிடையாது. 


சென்னை மெட்ரோ ரயில் பாதைத் திட்டம் ஆரம்

பித்ததும் மாசு அதிகமாகி விட்டது. என் பேத்திக்கு ஒவ்வாமையினால் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. என் மகன் ஆஃபீஸ் டைடல் பார்க்கில் இருந்ததால் நாங்கள் சேலையூருக்கு வீடு மாறினோம். அங்கிருந்து  தி.நகர், மயிலை, மாம்பலம் எந்த இடத்துக்கு வருவதானாலும் ஒருமணி நேரத்துக்கு மேல் ஆகும்.


அப்பொழுதெல்லாம் 

ஓலா, ஊபர் கிடையாது. Call taxi driverகளை புக் பண்ணிக் கொண்டு எங்கள் காரில் செல்வோம்.அங்கிருந்து

சென்னைக்குள் வருவது 

என்றாலே அலுப்பாக இருக்கும். சென்னை, மும்பை, பெங்களூர், போபால் என எல்லா நகரங்க

ளிலும் இருந்தது போதும் என்றாகிவிட்டது. அமைதியான வாழ்க்கைக்கு மனது ஏங்க தற்போது கும்பகோணத்தில் இருக்கிறோம். 


இப்போதைய சென்னை ரொம்பவே மாறிவிட்டது. முன்பெல்லாம் சைக்கிள் ரிக்ஷாக்கள்தான். அதிகமாக   அவர்கள் பணம் கேட்டால் கொஞ்சம் குறைக்கச் சொல்லி கேட்போமே நாம்! முடியும் முடியாது என்று சாதாரணமாக  பதில் சொல்வார்கள். 


இப்போது ஆட்டோக்காரர்

களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் நமக்கு கோபத்தோடு அலுப்பையும் தருகிறது. 'இந்த  பணத்தில நீ வூடு கட்டப் போறியா. நான் சொன்னதில ஒரு பைசா குறைக்க முடியாது. வேற ஆளு வந்தா பார்த்துக்க' என்று பேசுவதைக் கேட்கவே கஷ்டமாக இருக்கும். சக ரிக்க்ஷாகாரர்களிடம் 'அவங்கள்ளாம் ஓசில கூட்டிட்டு போனா வருவாங்க' என்பான்.


நல்லவேளையாக ஓலா,ஊபர் வந்ததால் நியாயமான கட்டணத்தில் பிரயாணம் செய்ய முடிகிறது. இப்பவும் சாதாரண ஆட்டோ ஓட்டுனர்கள் ஏமாற்றுவதாகக் கேள்விப்

பட்டேன்.


வள்ளலாரின் கந்தகோட்டம் முருகனைப் பாடிய தெய்வமணிமாலையில் 31 பாடல்களிலும் தருஓங்கு,  தரமேவு, தள்ளறிய, தாமம்ஒளிர், தலைவர்புகழ், தரையில் உயர், தளர்விலா, தார்கொண்ட, தப்பற்ற, தாய்கொண்ட, தானமிகு, தர்மமிகு சென்னை என்று 31 விதமாகப் புகழ்கிறார். அவர் காலத்திய  சென்னை இப்படியெல்லாம் இருந்தது போலும்! 'தலைவர்புகழ்' 'தாய்கொண்ட'  என்ற இரண்டையும் தீர்க்கதரிசியாக அன்றே பாடிச் சென்றுள்ளார்!


382 வயது நிறைந்த செழிப்பான அந்நாளைய சென்னையின் ஏரிகளும் குளங்களும் இன்று அடுக்குமாடிக் கட்டிடங்களாக நிற்பது ஊருக்கு அழகு..ஆனால் மக்கள் தண்ணீரின்றி தவிப்பதைப் பார்க்கும்போது நம் கண்களில் தண்ணீர் வருகிறதே!


அந்த நாட்களில் சோலை போல் இருந்த இடங்களெல்லாம் இன்று குடியிருப்புகளாக மாறிவிட்ட

பின்பே மரங்களின் பயனை அறிந்து விழித்துக் கொண்டுள்

ளோம் நாம்!


ஒருபெண் இரவில் தனியாக பயமின்றி நடந்து செல்லவேண்டும் என்ற காந்தியின் கனவு இன்று தடம் மாறிப் போய்விட்டதே? 


சுற்றிலும் மக்கள் இருக்கும்போதே பெண்ணின் பாதுகாப்பு கேள்விக் குறியாக இருக்கும் இந்த இன்றைய சென்னையின் நிலை அதன் சிறப்பில் குறைந்து விட்டதே! பெண் குழந்தைகளைப் பாதுகாப்பின்றி வெளியே அனுப்புவதற்கும் தயங்க வேண்டியுள்ளது!


அந்நாட்களிலும் தெருக்களில் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்ததுண்டு. ஆனால் இன்று போல் பிளாஸ்டிக், sanitary napkinகள் குழந்தைகளின் pamperகள் இல்லை. இன்று இவை சுற்றுப் புறத்தின் ஆரோக்யத்தை மாசுபடுத்து

வதை சீர்செய்ய முடியாமல் திணறுகிறது நம் அரசு.   


பல்லவர்கள் ஆட்சி செய்த நகரம்..திருவள்ளுவர் வாழ்ந்த மயிலை..வள்ளலார் புகழ்ந்து பாடிய கந்தகோட்டம்..பக்தி மணம் பரப்பும் பெருமை பெற்ற பார்புகழ் ஆலயங்கள்..

சிறப்பான உயர்தர மருத்துவமனைகள்..உலகத்

தரம் பெற்ற கல்விக் கூடங்கள்..

உயர்வான தகவல் தொழில் நுட்பங்களுடனான கணினி நிறுவனங்கள்..ஆனால் இத்தனையும் இருந்தும் இன்றைய சென்னையில் ஏதோ குறை இருப்பதை உணர முடிகிறது.


எங்கும் லஞ்சமும்,ஊழலும் பெருகிவிட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. 'பணம் ஒன்றே வாழ்க்கைக்கு தேவை.அதை எந்த அதர்மத்தை செய்தும் பெறலாம்' என்பதே பலரின் நோக்கமாகி விட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறமிருக்க ஆலயங்களிலுள்ள அந்த இறைவனுக்கே பாதுகாப்பு இல்லை என்பதை நினைத்து மனம் வெதும்புகிறது.


நல்ல நம்பிக்கைகள் சிதைந்து 

விட்டதாலேயே இந்த நிலைமை 

என்று புரிகிறது. சென்னை பலருக்கு சொர்க்கமாக இருந்தாலும்..எனக்கு இன்றைய சென்னையில் வாழ்வதற்கு ஆசையில்லை..

ஆர்வமுமில்லை! என் கணவருக்கும் விருப்பமில்லை!

என் பேத்திகளின் அன்புக்கு கட்டுப்பட்டு அவ்வப்போது வந்து தங்கிச் செல்வோம். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)