அணைப்பு
என் ஆருயிரே!
உன் அன்பே
எனக்கு ஆதரவு!
உன் அருகாமையே
எனக்கு ஆனந்தம்!
உன் முத்தங்களே
எனக்கு ஆறுதல்!
உன் அணைப்பே
எனக்கு சொர்க்கம்!
என் அன்பே!
இறுக்கி அணைக்கும்
உன் காதலுக்காக
காத்திருக்கிறேன் நான்
இரவு வருவதற்காக!❤️
கண்ணே! கட்டிக் கரும்பே!
உன்னை ஒவ்வொருமுறை அணைக்கும்போதும்
இறுமாந்து போகிறேன்
நீ என்னிலிருந்து உருவான
பட்டுக் கண்மணி என்று!
கருத்துகள்
கருத்துரையிடுக