விளையாட்டு

 

எங்கள் காலனியில் அமைந்துள்ள பூங்காவில் நடந்து கொண்டிருந்தேன். அங்கு குழந்தைகள் விளையாடுமிடத்தில் இரு ஊஞ்சல்கள் உண்டு. அந்த ஊஞ்சலுக்கு ஓய்வே கிடையாது. குழந்தைகள் சென்றதும் பெரியவர்கள் அதில் ஆடுவார்கள். 


இரண்டு குட்டிகள் அங்கு விளையாட வந்தன. காலியாக இருந்த ஊஞ்சல் அவர்கள் கவனத்தை ஈர்க்க.

...எனக்கு இது..என்று இருவரும் ஆளுக்கு ஒன்றின் அருகில் சென்றனர். நான் நடந்து கொண்டே அவர்கள் செயலில் கவனம் பதித்தேன். ஒரு குழந்தை ஊஞ்சலில் ஏறி வீசி வீசி ஆடினான்! ...மெதுவா ஆடு. கீழே விழுந்து விடுவாய்...என்று எச்சரித்தேன்! இன்னொரு குழந்தை வெறும் ஊஞ்சலை கையால் ஆட்டிக் கொண்டிருந்தான்! நான் அருகில் சென்று...நீ உட்காருகிறாயா? ஆட்டுகிறேன்... என்றேன். வேண்டாம். எனக்கு ஊஞ்சலில் உட்கார்ந்து ஆட பயம்! அதான் ஊஞ்சலை மட்டும் ஆட்டுகிறேன்...என்றபோது எனக்கு சிரிப்பு வந்தது. குழந்தைகள் என்றும் குழந்தைகள்தான்!


.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)