முத்தம்
கண்ணே! கட்டிக் கரும்பே!
உன் மத்தாப்பு சிரிப்பில்
உள்ளம் கொள்ளை போகுதம்மா!
மாம்பழக் கன்னத்தின்
செம்பவளக் குழிவினில்
என் மனமே வானில் பறக்குதம்மா!
பிஞ்சு கரங்கள் மேனி தொட
நெஞ்சில் இன்பம் பெருகிட
கொஞ்சித் தந்தேன் முத்தங்கள்!
அள்ளி அணைக்கையிலே
உள்ளம் மகிழ்ந்திட நீ தந்த
முத்தத்தில் உன்மத்தம்
ஆனேன் நான்!
ஓவியத்தில் எழுத முடியாத
காவியச் சித்திரமே!
உன்னைக் கட்டியணைத்து
முத்தமிட ஆசை கொண்டேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக