கை
இது நாம் காணும்
பொற்காலம்..
கைக்கு அழகான
கைபேசியுடனான
கனாக் காலம்..
எவருடனும் நினைத்தவுடன்
பேசலாம்..
மறைந்து விட்ட தாயின்
முகம் காண வேண்டுமா?
அலுவலின்போது பெற்ற குழந்தையைக்
காண வேண்டுமா?
அத்தனையும் உள்ளங்கையில்!
******
நான் விழுந்தபோது தாங்கிப் பிடித்த கை..
மனம் தளர்ந்த போது தட்டிக் கொடுத்த கை..
கண்கள் அழும் போதெல்லாம் ஆதரவு தந்த கை..
அது அடுத்தவரின் கையல்ல..
எனது தன்னம்பிக்கை!
கருத்துகள்
கருத்துரையிடுக