மோனை கவிதைகள்
அடி மோனை கவிதை
கண்ணே..கனியமுதே!
கட்டிக் கரும்பே! செல்வமே!
கருவறையில் இருந்த உனைக்
கண்ணும் கருத்துமாய்
கவனித்து வருகிறேன்
கவலை தீர்க்கும் உன் சிரிப்பு..
கண்டதும் உனை முத்தமிட
கன்னலாய் இனிக்கும் உன் கன்னக் கதுப்புகள்..
கண்விரிய நீ சிரித்தாலோ
கண்டவரின் மனம் மயங்கும்!
கண்படுமே பிறரால் என்று
கண்ணுக்கு கீழே மையினால்
கருமையாக ஒரு பொட்டு
கருத்தோடு இட்டேன்! நீ
கல்வி கேள்விகளில் சிறந்து
காவியப் பெண்ணாய் வளர
கார்முகில் வண்ணன்
கண்ணன் அருளட்டும்!
சீர்மோனை
கண்ணாளனே!
கண்டவுடன் காதல்கொண்டேன்!
காரிகை நான்
கல்யாணப்பந்தலிலே
கன்னியுன் கரம் பற்றி
கடமைகளை கருத்தாகக்
கொண்டு வாழக் காத்திருக்கிறேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக