ஆட்டம் எதுவரை?!

 


என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பருவமும் ஒரு ஆட்டம்தான்! ஒன்றில் பந்தாக..அடுத்ததில் பேட்( bat)டாக..மற்றொன்றில் ஆடுபவராக..இன்னொன்றில் மைதானமாக! இறுதியில் ஆட்டம் முடிந்து வெற்றியா தோல்வியா என்பதை தீர்மானிப்பவன் அந்த இறைவன்தான். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா..!


பிறந்து 15 வயதுவரை சீரும் சிறப்புமாக வளர்க்கப் படுகிறோம். நம் ஆசைகள் மறுக்கப் படுவதில்லை. கேட்குமுன்பு எல்லாம் கிடைக்கும்.பெற்றோர் ஆலோசனைபடி படித்து முடித்து ஓரளவு உலகம் பற்றி அறிந்து கொள்கிறோம். எனினும் சரியான புரிதல் கிடைப்பதில்லை.


30வயது வரை..அடுத்து மேலே என்னபடிப்பது..என் வேலைக்குச் செல்வது..நாம் ஒரு முடிவெடுக்க பார்த்தவர் பழகுபவர் அவரவர் அனுபவம் கூற, எதிலும் குழம்பிப் போகாமல் நம் வாழ்வை தீர்மானிக்கும் பருவம் இதுதான். இங்குதான் நம் ஆசைகள் பந்து போல் அடிபடுகிறது! நம் ஆசைப்படியா..பெற்றோர் விருப்பப்படியா என்ற மன வேற்றுமைகள். ஆசை முறையானபடி நிறைவேறுபவர்கள் வெல்கிறார்கள்.


அடுத்தது வாழ்வில் முக்யமான திருமணகாலம். அதிலும் காதல் மோதல் என்று பல நிலைகள். திருமணங்கள் யாரால் நிச்சயிக்கப் பட்டாலும் விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் வெற்றி பெற்றவர்கள்! மனதில் திருப்தி இல்லாவிட்டாலும் வாழக் கிடைத்த வழி என்று ஏற்றுக் கொள்கிறோம். 


40-50 வயது வரை..அடுத்தபடி குழந்தைகள்..குடும்பம் பெருக  குழந்தைகள் பெரியவர்களாகி அவர்கள் விருப்பங்கள் சில நமக்கு சரியெனத் தோன்றும்..பலதில் விருப்பம் இருக்காது. தலைமுறை இடைவெளியால் நம் பேச்சுக்கு மதிப்பில்லாமல் போகும் நிலை. எல்லாரிடமும் மனம் வேறுபட்டு..போதுமடா வாழ்க்கை..என்ற எண்ணம் வலுத்து ஆட்டத்திலிருந்து விலகி விடுகிறோம்!


50க்கு மேல்..இது வாழ்வின் இறுதிக் கட்டம். வேலையில் ஓய்வு.. வியாதிகளின் ஆரம்பம்..பிள்ளைகள் பெரியவர்களாகி பெற்றோரை அதிகாரம் செய்யும்போது, விட்டு விலகும்போது அவர்கள் மேல் வைத்த பாசமே மனதுக்கு பாரமாகி கடவுளை அடிபணிவது ஒன்றே கடைசி வழியாகிறது.


என்னைப் பொறுத்தவரை இன்றுவரை நடந்த அனைத்துமே மிக சரியாக நடந்ததற்கு அந்த இறையருளே காரணம் என்பேன். அன்பான கணவர், ஆதரவான குழந்தைகள். என் ஆசையோடு அவர்களுக்கு விருப்பமான படிப்பு, அதில் சிறப்பாக இருந்து இன்றிருக்கும் உயர்நிலை, அருமையான மருமகன், மருமகள்கள் பேரன் பேத்திகள்...நிறைவான வாழ்வு.

இனிவரும் நாட்களும் இதே போல் வாழ அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்.


நாம் ஆசா

பாசங்களிலிருந்து விலகி நாம் மனம் திறந்து பல விஷயங்களை இத்தளத்தில் பகிர்வதால் மனம் லேசாகிறது. 

அடுத்தவர் பகிரும் விஷயங்களைப் படிக்கும்போது..இதைவிட நம் நிலை உயர்வுதான் என்றும், கடவுள் இவரது கஷ்டங்களை தீர்க்கட்டும் என்று மனமுருகி வேண்டுவதாலும் நம் துன்பம் குறைகிறது.


நம் உறவுகள், பிள்ளைகள் நம் திறமைகளை அறிந்து எதுவும் சொல்லாமல் இருக்கும்போது, மற்றவர் பாராட்டுவது நமக்கு மனமகிழ்ச்சியைத் தருகிறது.

வாழ்வில் உற்சாகமும் நாமும் ஏதாவது செய்வோம் என்ற உத்வேகமும் கூடும்போது உடல் நோய்கள் கூட பெரிதாகத் தெரிவதில்லை. 


முகமும் முகவரியும் தெரியாத தெரியாத நட்புகளின் ஆதரவும் ஆறுதலும் நமக்கு ஒரு டானிக் எனலாம். மனதை லேசாக்கி இயல்புநிலையில் நம் வாழ்வைத் தொடர நிச்சயம் நம் மாம்ஸ்ப்ரஸ்ஸோவும் காரணம் என்பது என் எண்ணம்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)