பிடிவாதம்


பிடிவாதம்
என்றாலே நினைவுக்கு வருவது புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் செய்யும் குழந்தைகள்தான்!தூங்க, குளிக்க, சாப்பிட என எல்லாவற்றுக்கும் அடம்பிடிப்பது குழந்தையின் இயல்பு. 

எத்தனை சமத்து குழந்தையும் ஏதோ ஒரு நேரத்தில் பிடிவாதம் பிடிக்கும்.சாப்பிட அடம் செய்தால்'நீ சமத்தா சாப்பிட்டால் இன்னொரு கதை சொல்வேன்' என்று சொல்ல வேண்டும்! இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு!


10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை திட்டுவதோ அடிப்பதோ கூடாது.' நீ ரொம்ப சமத்தாச்சே. இப்படியெல்லாம் செய்யலாமா?' என்று கேட்டு அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சொல்லி மாற்ற முயலலாம். கேட்டதும் ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தால் அதன் மதிப்பும், தேவையும் தெரியாது. அது அவசியம் என்று தோன்றினால் 'நீ இந்தமுறை நல்ல மார்க் வாங்கினால் கிடைக்கும் என்று சொல்ல வேண்டும். 'நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்று பிடிவாதம் பிடிக்கும் பெரியவர்கள் அவர்களாக மாறினால்தான் உண்டு!!

கருத்துகள்