நீண்ட வரிசையில்..

ரேஷன் கடையில் நீண்ட வரிசை. சாமான்களை கடைக்குப் போய் நின்று வாங்கிவர வேண்டியது ராமாயியின் வேலை. உடல் தள்ளாடும் எழுபது வயதில் நல்ல வெயிலில் நிற்பது எப்படி முடியும்? சாமான்களை வாங்கிப் போனால்தான் அவளுக்கு சாப்பாடு. முடியவில்லை என்றாலோ தண்டச்சோறு என்று மருமகள் வார்த்தைகளாலேயே கொன்று விடுவாள். 


ஒரே மகன். அவனோ கண்டுகொள்ளாமல் போய்விடுவான். பெற்றதாய் என்ற பரிவு கூட கிடையாது. காலையில் குடித்த கஞ்சி எப்பவோ ஜீரணமாகி வயிறு கபகபவென்று பசித்தது. 


போகும் வழியிலிருந்த ஆலயத்தில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் வரிசை. ஓய்ந்துபோய் நின்றவளின் அருகில் வந்த ஒரு மனிதர் அவளிடம் ஒரு சாப்பாடு பொட்டலம் கொடுத்து சாப்பிடச் சொன்னார். 'நீங்க மகராசனா இருக்கணும் சாமி' என்ற ராமாயி அவர் உருவத்தில் தன் மகனையே கண்டாள்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)