காரடைநோன்பு ஒவ்வொரு வருடமும் மாசியும்,பங்குனியும் கூடும் நாளில் வரும்.இது கணவனின் நலன் வேண்டி அவரது நீண்ட ஆயுளுக்காக ஸ்ரீகாமாக்ஷி தேவியை வேண்டி மனைவியர் செய்யும் நோன்பு. திருமணமாகாத பெண்களும், குழந்தைகளும் கலந்து கொள்ளலாம். விரதம் இருக்க வேண்டிய தேவையில்லை. 'மாசிக் கயிறு பாசி படரும்' என்பது சொல்வழக்கு. அதனால் இதை பங்குனியில் செய்வதை விட மாசி மாதம் இருக்கும்போதே செய்ய வேண்டும். சாவித்திரி தன கணவன் சத்யவானின் உயிரை யமனிடமிருந்து மீட்க வேண்டி,காட்டில் கிடைத்த பொருட்களைக் கொண்டு இந்த நோன்பு செய்ததாக ஐதீகம். நோன்பு செய்யும் நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, கிழக்கு பார்த்து சிறு கோலம் போட்டு, வீட்டிலுள்ள பெண்களின் எண்ணிக்கைப்படி சிறு வாழைஇலை போட்டுவெற்றிலை,பாக்கு,வாழைப்பழம், வெல்ல அடை,உப்பு அடை, வெண்ணை இவற்றுடன் கழுத்தில் கட்டிக் கொள்ளும் மெல்லிய மஞ்சள் கயிறும் சுவாமி முன் வைத்து நிவேதனம் செய்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு சுவாமிக்கும், கணவருக்கும் நமஸ்காரம் செய்தபின்பு காரடையை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். நோன்பு செய்யும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் ...