அலைஇடைவிடாத முயற்சிக்கு சான்று கடல் அலை!

கரைக்கு வந்து எத்தனை முறை அழிந்தாலும் சோர்வதில்லை!

எத்தனை வெறுத்தாலும் அலை கடலை விட்டு நீங்குவதில்லை!

ஓய்வின்றி உழைக்கும் உறுதிக்கு உதாரணம் உற்சாகம் தரும் கடல்அலை!

உலகம் தோன்றிய நாள்முதல் சோம்பலின்றி  தன் கடமையை செவ்வனே செய்யும் அலை!

புயல் மழை நேரத்திலும் தாகம் தீராமல்  கடலில் ஆடும் அலை!

நீலக் கடலின் மேல் அலங்கார ஆட்டம் போடும் அழகிய அலை!

குழந்தை முதல் முதியோர்வரை அனைவரும் ரசிக்கும் அழகு அலை!

கருத்துகள்