ஓசை

 
குழந்தையின்
சிணுங்கல் ஓசை
கேட்டதுமே
தாய் பதறிச் செல்கிறாள் சமாதானம் செய்ய!

#########

ஆரவாரமில்லாத கடலை
அசைக்கிறது காற்றின் ஓசை!
அவற்றை அலைகளாக மாற்றி
நம் அழகான கால்களை
ஓசையின்றி தழுவிச் செல்லும்!

#######

வாவா என் அன்பே
அன்று உன் காலடி ஓசை கேட்டு நான் கிறங்கிக் கிடக்கிறேன்!
பகலில் உன் புகைப்படம் பார்த்தும் இரவில்
நட்சத்திரங்களை எண்ணியும் உன் காலடி ஓசைக்காய் காத்திருக்கிறேன்!
உன் கண்ணின் இமை ஓசையில் என்ன மாயம் செய்தாயோ..
என் நெஞ்சு துடிக்கும் ஓசையை நீதான் அறிவாயோ!
நீ தந்த முத்த ஓசை என்னை நானே மறக்க வைத்ததே!
உன் அன்னநடை ஓசை என் மேனியில் தாளம்போடுதே!
காதலியே விரைந்து வா..
உன்னைக் காலம் முழுதும்
நெஞ்சில் சுமக்க நான் தயார்!

#######

கருத்துகள்