உற்சாகம்
ஆயிரம் தடைகள் 

இருந்தாலும்..

மனதில் உற்சாகம் 

இருந்தால்..

அதற்கான வழிகளை கடைப்பிடித்து.. 

அவற்றைக் கடந்து 

வெற்றிக் கனியைப் பறிக்கலாம்!

++++++++++++++++++

காலைப்  பொழுதில் கலகலப்பு..

நட்பை வளர்க்கும் நல்லநேரம்.. 

இளைஞர் மனதில் இன்ப எண்ணம்..

முதியோர் இதழில் முகிழ்க்கும் புன்னகை..

மனம் விட்டு பேசும் மாலை நேரங்கள்..

உற்சாகம் தருமே தேநீர் பொழுதுகள்!

+++++++++++
மனம் சோர்ந்து
உடல் தளர்ந்து 
இருக்கும்போது 
கிடைக்குமே உற்சாகம்
நம் பால்மணம் மாறா
பச்சைக் குழந்தையின்
பொக்கைவாய்ச் சிரிப்பில்! 
கருத்துகள்