முதல்உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் சங்கமம் ஆன அம்மாவும் அப்பாவும்

குழந்தைகளின் முதல் வார்த்தை!

அதுவே தமிழுக்கு நாம் தரும் முதல் மரியாதை!


நான் அவனை ஈன்றபோது பெற்றேன் முதல்மகிழ்ச்சி!

ஈன்றதும்  தந்தேன் முதல்முத்தம்!

சற்றே வளர்ந்ததும் தந்தேன் முதல் அறிவுரை!

'அம்மா நான் பள்ளியில் முதலிடம்' என்றபோது அடைந்தேன் முதல்பெருமிதம்!

கருத்துகள்