அன்புக் கவிஞரே! தங்கள் உருவம் எளிது! பாடும் குரலோ இனிது! என்றும் எமது கண்களில் தெரியும் உங்கள் புன்னகையும் காதுகளிலும் ஒலிக்கும் தேன் அமுதக் குரலும் தங்கள் இனிய குணங்களால் எம் உள்ளத்தில் வாழ்கிறீர்! வாழ்க நீ பல்லாண்டு! உலகம் உள்ளவரை உன் பாடல்கள் வாழும்!
நிதியுதவி..(தந்தைமனம்) குமாரின் அப்பா ஒருபெரிய கம்பெனியில் உயர்பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர். அவரைப்பாராட்டிய கம்பெனி அவரதுமகனுக்கு வேலைதருவதாக சொல்லியும் தன்மகன் அவன்முயற்சிலேயே வேலைதேடிக் கொள்ளவேண்டும் என்றுகூறி மறுத்துவிட்டார். குமார் பலஇடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. தினமும் காலைசாப்பிட்டு செல்பவன் இரவுதான் வீடுவருவான். ..உன் பிள்ளை ஊரை சுற்றுவதைவிட்டு கொரோனாவை வாங்கிவரப் போகிறான்பார்..என்பார் மனைவியிடம். அன்று மாலை இரண்டு இளைஞர்கள் கையில் ஏதோ நோட்டுடன்வர, அவர்கள் ஒரு நோட்டீஸ் கொடுத்து கொரோனாவில் கஷ்டப்படும் ஏழை எளியவர்களுக்கு தாம் உதவுவதாகவும் முடிந்த தொகையைத் தரும்படியும் கேட்க, அதில் தலைவர்என்ற இடத்தில் குமாரின் பெயரைக்கண்டு ஒருகணம் திகைத்து அவர்களிடம் விபரம் கேட்டார். அவர்கள்...இவர்தான் எங்களின் இந்தசேவைக்கு காரணம். இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்திருக்கிறோம். உங்களால் முடிந்தது கொடுங்கள்..என்றனர். பிள்ளையின் நல்லெண்ணத்தை அறிந்து அவனைத்தவறாக எண்ணியதற்கு மன்னிப்பாக ஒருலட்சம்ரூபாய் கொடுத்தார்.இரவு மகனைப் பாராட்...
அந்த ஆலய வாசலில் எப்போதும் பிச்சைக்காரர்கள் அமர்ந்திருப்பார்கள். அன்று ஒருவிசேஷம் என்பதால் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. ராஜு தன்மனைவி அருணா மகள்அட்சயாவுடன் கோவிலுக்கு வந்தான். அங்கு ஒரு குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருபெண்ணைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பார்க்க நன்றாக இருந்தாள். அருணா அவளுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு அவள் ஏன் பிச்சை எடுக்கிறாள் என்று கேட்டபோது, தான் நல்ல குடும்பத்தில் பிறந்து ஒரு பையனிடம் காதல் கொண்டு ஏமாந்துவிட்டதாகவும், திரும்ப பிறந்தவீடு செல்ல மனமில்லை என்றும், ஏதாவது வேலை கொடுத்தால் செய்வதாகவும் சொன்னது அருணாவிற்கு பாவமாக இருந்தது. அருணா ராஜுவிடம் ...இவளை அழைத்துச் சென்று வேலைக்கு வைத்துக் கொள்ளவா?..என்றாள். சற்று யோசித்தவன்,அதனால் ஏதாவது பின்விளைவுகள் வந்தால் என்னசெய்வது என யோசித்தான். அவளோ, 'என்னால் உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது.எனக்குஒரு பாதுகாப்பு வேண்டும்'என்று அழுதாள். ராஜுவின் மனிதநேயம் வென்றுவிட, இன்று அவள் மகள் நந்தினி அட்சயாவுக்கு நல்லதோழி!
கருத்துகள்
கருத்துரையிடுக