கண்


கண்ணே! மணியே! கட்டிக் கரும்பே!

உன் கண் அசைவில் அகிலத்தைக் கண்டேன்!

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது!

கண்டவர் கண் வீச்சைத் தவிர்த்தேன்!

என் கண்மணியே நீ கண் உறங்க உனைத் தாலாட்டினேன்!

இவ்வுலகின்கண் நீயே என் கண்கண்ட செல்வமன்றோ!


கண் ஆயிரம் பேசும் காதலோடு..

கண் பல கட்டளைகளை இடும் அதிகாரத்தோடு..

கண் ஆயிரம் விளக்கம் தரும் மகிழ்ச்சியோடு..

கண்ணுக்கு நிகர் கண்ணே!

கருத்துகள்