கோடை விடுமுறை நினைவுகள்! படிக்கும்போது விடுமுறை நாட்களை நினைக்கும்போதே ...அதுவும் கோடை விடுமுறைஎன்றாலே மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது? ஒவ்வொரு வருடமும் போவது ஒரே இடம்தான் என்றாலும் அலுத்ததில்லை! கும்பகோணத்திலிருந்த என் தாய் வழி தாத்தா வீட்டிற்குத்தான் நாங்கள் செல்வோம். நான் எழுதும் அனுபவம் 1960களில்..! என் பெரிமா, சித்தி குடும்பமும் அங்கு வந்து விடுவார்கள்.என் பாட்டி சிறு வயதிலேயே இறந்து விட்டார். ஏழு குழந்தைகளையும் என் தாத்தா தானே வளர்த்தார். பெரிய மாமா குடந்தையில் வேலையில் இருந்தார். அவர் குழந்தைகள், நாங்கள்,என் பெரிமா, சித்தி குழந்தைகள் என்று ஒரு டஜனுக்கு மேல்! நாங்கள் சென்னையிலிருந்து ரயிலில் unreserved ல்தான் செல்வோம்.துணிமணிகளுக்கு டிரங்க் பெட்டி...கூடவே தலைகாணி,போர்வை,ஜமக்காளத்துடன் ஒரு படுக்கை கட்டி விடுவார் அப்பா! இரவு ரயிலில்தான் பிரயாணம்.. ரயிலில் ஏறியதும் என் அம்மா அப்பா கீழ் இரண்டு சீட்களில் என் சிறிய தம்பிகளுடன் படுத்து விட, நானும் என் பெரிய தம்பியும் கீழே சீட்களுக்கு இடையில் ஜமக்காளம் விரித்து படுப்போம்! சீட்களுக்கு கீழே எங்கள் டிரங்குப் பெ...