இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்ப்பு

படம்
நோய் ஏற்படுவது நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால்.. நோய்க் கிருமிகள் எளிதாய் உடலுக்குள் செல்வதால்.. சமச்சீர் உணவு சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. நோயில்லா ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.. ஃஃஃஃஃஃ நம் எண்ணங்களை எதிர்க்கும் மனிதர்களிடம் உறவாடுவதை விட்டு, நமக்காக வாழ ஆசைப்படும் மனிதர்களுடன் இணைந்து வாழ்வதே சுகம்! ஃஃஃஃஃ நான் எது கேட்டாலும் மறுத்து சொல்லாமல்... என்ன சொன்னாலும் எதிர்ப்பு காட்டாமல்... 'உன் ஆசைதானடி என் ஆசையும்' என்று சொல்லி நொடியில் நிறைவேற்றும் என் அன்பரே!  நீங்கள் கேட்டதையும் எதிர்ப்பின்றி நான் கொடுத்து விட்டேன்!!

அம்மா கிடைச்சாச்சு!(100வார்த்தை கதை)

படம்
  அமுதா ஹரிணியை அள்ளியணைத்து முத்தமிட்டாள். அவள் உடல் சிலிர்த்தது.  சுதாகர் அழைத்ததும் குழந்தையை விடமனமின்றி வந்தாள். ...எந்தக்குழந்தை என்று முடிவு செய்தாயா? ?... ...எனக்கு ஹரிணியைத்தான் பிடிச்சிருக்கு... ஐந்து வயதாகும் அவர்கள் மகன் சுதிருக்கு தனக்கு உடன்பிறந்தவர் இல்லையே என்ற ஏக்கம் உண்டு. அமுதாவுக்கு இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்வதைவிட ஒரு அநாதைக்குழந்தையை எடுத்து வளர்க்கும் ஆசையை சுதாகரிடம்சொல்ல, அதற்காகத்தான் இங்கு வந்தார்கள். பாலவிகாஸ்...தாய்தந்தை இல்லாத குழந்தைகளைப் பராமரித்து தத்து கொடுக்கும் ஆசிரமம். அங்கு வாசலில் ஒருதொட்டில்உண்டு.  பிஞ்சுக்குழந்தைகள் அவ்வப்போது அந்தத்தொட்டிலில் அழுது கொண்டிருக்கும். அதுபோல் வந்த ஹரிணிக்கு எட்டு மாதங்களாகிறது. தத்து கொடுப்பதற்கான முறைகளை முடித்து ஒரு நல்லநாளில் வந்து ஹரிணியைத்தூக்கி முத்தமிட்டதுடன், சுதிரிடம்...இவள்தான் உன் தங்கை...என்று காட்டிய சுதாகர், குழந்தையை அமுதாவிடம் கொடுக்க, உடல் சிலிர்க்க ஹரிணியை அள்ளியெடுத்து முத்தமிட்டாள்...எனக்கு ஒரு அம்மா கிடைச்சாச்சு... என்பதுபோல் கன்னம்குழிய அழகாகச் சிரித்தாள் ஹரிணி!

அழகே அருவி

படம்
குற்றாலத் தேனருவி!குறையில்லா சிற்றருவி! வேகமாய் விழும் அருவி! மேகங்கள் தவழ் அருவி! வெள்ளி போல் அழகு அருவி! துள்ளி வரும் சிரிப்பருவி! குற்றாலம் குளிரருவி! குரங்காடும் நீர் அருவி!

விரல்

படம்
வெற்றியின் சமயம் பல விரல்கள் இணைந்து கைதட்டும்! தோல்வியில் கை கொடுக்கும் ஒரு விரல் நம்மை ஆறுதல் படுத்தும்!

சேவை

படம்
செவிலியர்க்கு நன்றி🙏🏼 அன்பு அர்ப்பணிப்பு ஆதரவு இரக்கம் ஈரம் பொறுமைசகிப்புத்தன்மை அயராத உழைப்பு காலம் தவறாமை இரவு பகல் பாராத உழைப்பு..உறக்கமின்றி சேவை செய்யும் உன்னத மனித தெய்வங்கள்! தொற்று வியாதியோ..உயிர்க் கொல்லிவியாதியோ..அருகில் சென்று அணைத்து ஆதரவு தந்து அருவருப்பின்றிசேவை செய்யும்வெள்ளைப் புறாக்கள்.. தம்மையும் தம் குடும்பத்தையும் பற்றிக் கவலைப்படாது போர்க்கால அடிப்படையில் உயிர் காக்கப் போராடும் வெள்ளை சீருடை தாயுள்ளங்களே!  மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவையாக எண்ணி..உண்மை தூய்மை தன்னலமின்மை என்ற அணிகலன்களுடன் அயராது உழைக்கும் செவிலியர்களின் ஈடிணையற்ற சேவைக்கு உலகில் எதுவும் நிகரில்லை!

சிரிப்பு

படம்
  சிரிப்பதற்கு காசு பணம் தேவையில்லை! சிரிப்பினால் நீங்கும் மனக்களைப்பு! சிரிப்பால் சிதறிப் போகும் மனக்கவலை! என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாது சிரிப்பை! மகிழ்ச்சியின் மறுமொழி முகம் மலர்ந்த சிரிப்பு! அனைத்து மனிதரும் அறிந்த ஒரே மொழி சிரிப்பு! ******* சிரிப்பு ஒரு சிறப்பான  கலை! சிரிப்பு ஒரு நல்ல கருவி! சிரிப்பு என்பது மந்திரம்!  சிரிப்பு என்பது மகத்துவம்! சிரிப்பு என்பது மருத்துவம்! சிரித்து வாழ்வோம்! பிறர் சிரிக்க வாழ்வது வேண்டாம்!

நான் ஆசைப்பட்ட வீடு!

படம்
  இப்படியும்பேசுவோம்..அப்படியும்பேசுவோம் சொந்தவீடு அவசியம் வேண்டும்...வாடகை வீடே போதும். நான் ஆசைப்பட்ட வீடு! சொந்த வீடா.வாடகை வீடா? எது வசதி என்று யோசிக்கும் போது 'எலிவளை ஆனாலும் தனிவளை' என்பது போல் சொந்த வீடே சுகம் என்று தோன்றும்.  என் கணவர் வங்கியில் பணி புரிந்ததால் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊர் மாறுதல். ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு மாதிரி வீடு. சில ஊர்களில் வீடு நன்றாக இருக்கும். தண்ணீர் வசதி இருக்காது. வெளியில் பக்கத்து வீடுகளுக்கு போய் எடுத்துவர வேண்டியிருக்கும். குடத்தில் தண்ணீர் பிடித்து தூக்கி வருவேன். இப்பொழுது நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. சில வீடுகள் மழை வந்தால் அங்கங்கு ஒழுகும். அதற்கு வாளி, அண்டா, குண்டாவெல் லாம் ஒழுகும் இடத்தில் வைத்து தண்ணீரைப் பிடித்து பின் வீடு முழுதும் துடைத்து...என் குழந்தைகள் மிகவும் சின்னவர்கள் என்பதால் கால் வழுக்கி விழுந்து அழ...அவர்களை உடை மாற்றி சமாதானம் செய்து...போதுமடா சாமி என்று இருக்கும்! ஆனால் போகும் ஊரிலெல்லாம் வீடு வாங்க முடியாதே! அங்கங்கு இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளதான் வேண்டும்! ஒருவிதத்தில் வாடகை வீட்டைப் பற்றிக...

அனுபவம்

படம்
  வாழ்வில் எத்தனை எத்தனை அனுபவங்கள்.. நல்லதும் உண்டு..தீயதும் உண்டு! ஒன்று கற்றுக் கொடுக்கும்.. இன்னொரு அனுபவம் நம்மை இனிமைஆகப் பேசவைக்கும்! ஒரு அனுபவம் வாழும் வழியை சொல்லித் தரும்! இன்னொன்று மாற்றங்களை எதிர் கொள்ளும் துணிவைத் தரும்! ஒரு அனுபவம் மனித மனங்களின் மாற்றங்களை அறிய வைக்கும்! இன்னொரு அனுபவத்தால்  வாழ்க்கைப் பிரச்னைகளின் சிக்கலைத் தீர்க்கலாம்! அனுபவங்கள் அதிகமானால் நம் வாழ்வும் மேலானதாக சிறப்பாக இனிமையாக இருக்கும்! ****** வாழ்வது ஒரு முறைதான்.. நம் வாழ்க்கையே அனுபவம் தான் ! கோபதாபம் வேண்டாம்.. வஞ்சமும் வன்மமும் வேண்டாம்.. இயற்கையின் தன்மையை ஏற்போம்.. இறைவன் விட்ட வழிப்படி நடப்போம்..

சுற்றுலா

படம்
  சுற்றுலா செல்வோம்..அது மகிழ்ச்சியானது! மனதில் என்றும் நின்றிடும்..அது மறவாதது! அதில் கிட்டும் அனுபவம்..அது சுவையானது! சுற்றதோடு சென்றால்..அது சுகமானது! நண்பர்களோடு சென்றால்.. அது உல்லாசமானது! தேனிலவுக்கு செல்லும் சுற்றுலா..அது காதல் மயமானது! ஆலய தரிசன சுற்றுலா..அது தெய்வீகமானது! சாகச சுற்றுலா..அது துணிச்சலானது! எந்த இடத்தையும் கவலையின்றி சுற்றி உலா வருவது நமக்கு புத்துணர்வு தருவது! கொரோனா காணாமல் போகட்டும்! அடுத்த ஆண்டில் நாமும் இந்த அகில இந்திய சுற்றுலா நாளில் செல்வோம் சுற்றுலா!! ****** முறையான திட்டங்களோடு நிறைவான நட்புக்களோடு மொழி அறிந்த வழிகாட்டிகளோடு சென்றிடும் சுற்றுலா சிறப்பு! யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை அனைவருக்கும் உணர்த்திடும் சுற்றுலா !

குறும்பு

படம்
  சின்னக் குழந்தை அறியாமல் செய்யும் குறும்பு! வளர்ந்த பிள்ளைகள் சுட்டித் தனமாய் செய்வதும் குறும்பு! நண்பர்கள் இணைந்து சிரிக்க சிரிக்க பேசுவதும் குறும்பு! 'ஏன் அப்படி கண்ணெடுக் காமல் என்னைப் பார்க்கிறாய்' என்பது காதலர் குறும்பு! நீ அறுபது வயதிலும் அழகுதான்' என்பது முதிய வயதுக் குறும்பு! குழந்தை செய்யும் குறும்பைக் கண்டு கோபமான அன்னை குழந்தையின் குறுநகையில் தானும் இணைந்து புன்னகைத்தாள் ! கட்டியணைத்து முத்தமிட்டு கண்ணே மணியே எனக் கொஞ்சினாள்!

வாரஇறுதிஎழுத்துதிருவிழா

படம்
  அனைவரும் தூங்குவதற்காக காத்துக் கொண்டிருந்த சுதா, அவர்கள் தூங்கிய பின் சத்தமே எழுப்பாமல் மெதுவாக நடந்து சென்றாள். ( வாரஇறுதிஎழுத்துதிருவிழா) எனக்கு குழந்தை வேணும்.. ராகவனுக்கு சுதா எங்கு செல்கிறாள் என்பதைப் பார்க்கவே தூங்காமல் விழித்திருந்தான். அவள் கதவை மூடி விட்டு சத்தம் போடாமல் மாலாவின் அறைக்கு சென்றாள். அவள் குழந்தை விடாமல் அழுது கொண்டிருந் தது. மாலா அசதியில் தூங்கு கிறாள் போலும். சுதா உள்ளே சென்று குழந்தையைத் தூக்கியவுடன் அழுகை நின்று விட்டது. அங்கு போய் இவள் என்ன செய்கிறாள் என்று புரியாத ராகவன் மறுநாள் சுதாவைக் கேட்க வேண்டும் என்று நினைத்த படி சத்தமின்றி உள்ளே போய்ப் படுத்தான். ஆனால் தூக்கம் வரவில்லை. ராகவனுக்கு லலிதாவுடன் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. டாக்டரிடம் போக அவன் அம்மா அனுமதிக்க வில்லை. ஆனால் சுதாவை மட்டும் அவ்வப்போது சொல்லிக் காட்டுவார். ...எங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆன அடுத்த வருடம் குழந்தை..என்று. மாலாவுக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் குழந்தை பிறந்து விட்டது. அவனிடம் சுதா டாக்டரைப் பார்க்கலாம் என்ற போதும் அவன் முயற்சி எடுக்க வில்லை. அ...

வினோதம்

படம்
வீடு கட்டமரம் வெட்டுவோம்! வீட்டினுள் மரம் வளர்ப்போம் என்று கவிதை எழுதுவோம்! என்ன வினோதமான சிந்தனை இது!

அப்பா அன்றும்..இன்றும்

படம்
அப்பா என்றாலே ஒரு சுதந்திரமும் சந்தோஷமும் மனதில் வந்து உட்காருகிறது. ஒவ்வொரு தலைமுறை அப்பாக்களில் வித்யாசம் இருந்தாலும் அவர்களின் பாசத்தில் அப்பழுக்கிருக்காது. குடிசையோ கோபுரமோ அப்பாவின் அன்பு வெளிக் காட்டாவிட்டாலும்  அளவில்லாதது. நான் பார்த்து ரசித்த அந்நாளைய, இந்நாளைய அப்பா.. 1940-'50 களில்... என் தாத்தா..அம்மாவின் அப்பா மிகவும் ஸ்டிரிக்ட் என்பார் என் அம்மா. அவருக்கு 4 பெண்களும் 3 பிள்ளைகளும். மனைவி இளவயதில் இறந்து விட தன் நான்கு பெண்களையும் தாயில்லாமல் வளர்ந்த பெண்கள் என்பதனால் யாரும் குறை சொல்லக் கூடாது என்று மிக கட்டுப்பாடாக வளர்த்து திருமணம் செய்து கொடுத்தார். என் தாத்தா முன்னால் அவர்கள் குரல் உயர்த்தியும் பேச மாட்டார்கள். 1960-'70 களில்... என் அப்பா நான் ஒரே பெண் என்பதால் என் தம்பிகளிடம் காட்டிய கண்டிப்பு என்னிடம் கிடையாது. அந்தக் கால typical அப்பா. பிள்ளைகள் நன்கு படித்து நல்ல வேலைக்குப் போகவும் பெண்ணை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்! ஆனால் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்ததில்லை.. தேவையானவற்றுக்கு மறுப்பு சொன்ன தில்லை. மாதம் ஒருமுறை பீச்...

தென்றல

படம்
  வசந்த கால வண்ண மலர்கள் அழகாகப் பூத்திருந்த பூங்காவில் வந்ததே தென்றல்! எதைத் தொடுவது எதை முகர்வது எதை அசைப்பது என்று திகைத்து யோசித்தது!! அனைத்தின் அருகிலும் சென்று நலம் விசாரித்தது! மொட்டு மலர்கள் பெரிதாய் பூத்து மகிழ்ச்சியில் அழகாய் தலையசைத்தது! ******** சில்லென்று தேகத்தைத் தீண்டி உள்ளத்தை வருடிச் செல்லும் தென்றல்! புல்லின்மேல் பனித்துளியை உரசி புத்துணர்வு பெற்று மகிழும் தென்றல தலை குனிந்து நிற்கும் நெற்கதிரை  தட்டி எழுப்பிமகிழும் தென்றல்! எல்லா இடமும் சென்று இதமாய் மோதி இன்பம் தந்து இளைப்பாறும் தென்றல்! வேலை செய்பவரின் உடற்களைப்பு நீக்கி உற்சாகம் தரும் தென்றல்! மாலையிலே மிதந்து வந்து மனம் தொட்டு மயக்கி காதலைக் கூட்டும்  மோகத் தென்றல்! சாதிமதம் கடந்து தேகங்களை வருடி இதயங்களைத் திருடும் இயற்கையின் செல்லக் குழந்தை இந்தத் தென்றல் !

அப்பாவின் பாசம்

படம்
  அப்பாவின் பாசம் அம்மாவின் கருவறை போன்றே தாங்கி பிடிக்கும் அப்பாவின் கைகளும் புனிதமானது. தாங்கிப்பிடிக்க அம்மாவும் தூக்கி நிறுத்த அப்பாவும் இருக்கும் வரை யாரும் வீழ்ந்தது இல்லை. இரவு தூங்கும் பொழுது அப்பாவின் சுருங்கிய முகமும் ஆழ்ந்த உறக்கமும் அப்பாவின் கஷ்டத்தை உணர வைக்கும். தன் தலைக்கு மேலே நம்மை உட்கார வைத்து  அழகு பார்க்கும் அப்பாவை நாம் ஒருபோதும் தலைகுனிய வைத்து விடக்கூடாது. நம்மை நேசிப்பவரும் நமக்காக சுவாசிப்பவரும் நம் அப்பா மட்டுமே. அடித்தாலும் அன்பால் அணைக்கும் ஒரே மனிதர்  அப்பா. ஒரு பெண்ணை தந்தையைக் காட்டிலும் வேறு யாராலும்  அதிகமாக நேசிக்க முடியாது. தோள் மீதும் மார்பு மீதும் நமைத் தாங்கி வழிகாட்டும் கலங்கரை விளக்கு அப்பா. பத்து மாதம் சுமந்த தெய்வம் அம்மா வாழ்க்கை முழுக்க சுமக்கும் தெய்வம் அப்பா. அப்பாவின் அன்பு எப்போதும் கொண்டாடப்படுவதில்லை அப்பா உமக்கு ஆயிரம் நமஸ்காரங்கள் 🙏

பத்மினி காத்திருக்கிறாள்..

படம்
  பத்மினி  தினமும் மாலை ஐந்து மணிக்கு அவள் வீட்டுத் திண்ணையில் ஆஜராகிவிடுவாள். இரவுதான் உள்ளே செல்வாள். ஏன்? எதனால்?? யாருக்காக??? பத்மினிக்கும் பாஸ்கருக்கும் திருமணமாகி 40 வருடங் களுக்கு மேல்  ஆகிறது.  தஞ்சை மாவட்டத்திலுள்ள சிறிய கிராமத்தில் ஊராட்சித் தலைவராக இருந்த பாஸ்கரை மணம் புரிந்தபோது  பத்மினியின் வயது 20. இருவரும் மனமொத்த தம்பதிகள். பத்மினி பத்தாம் வகுப்புதான் படித்தாலும் ஓவியக்கலையில் நல்ல தேர்ச்சி பெற்றவள். பார்த்ததை அப்படியே வரையும் திறன் கொண்டவள்.  அவ்வூரில் ஒரு சிற்பக்கூடம் இருந்தது. அதிலிருந்த சிற்பி பாஸ்கரின் நண்பர்.பத்மினியின் ஓவிய ஆற்றலைக் கண்ட சிற்பி நண்பர் அவளது ஓவியங்களை சிலை வடிக்க ஆசைப் பட்டார். அவள் வரைந்த சில நடன மாதுக்களின் ஓவியத்தைப் பார்த்து சிலைகளை வடித்தார். அவற்றை  பல ஆலயங்க ளுக்கும், பார்க்குகள், ஹோட்டல்களுக்கும் விற்பனை செய்தார்.  அதிலிருந்த ஒரு சிற்பம் அச்சு அசலாக பத்மினியைப் போலவே இருந்தது. அதனை தாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஸ்கர் நினைத்தான். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடி விட்டது. பத்மினி பாஸ்கர் தம...

சிரிப்போ சிரிப்பு

படம்
  முப்பத்தைந்து வயது பெண் ஒருத்தி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டாள். அவள் நினைவு தப்பிய நேரம் கடவுளைக் கண்டு..நான் பிழைப்பேனா?..என்றாள். கடவுள்..உனக்கு ஆயுள் இன்னும் 30 ஆண்டுகள் உண்டு என்றார். அறுவை சிகிச்சை முடிந்து நினைவு வந்ததும், காஸ்மெடிக் சர்ஜனை அழைத்தாள். தன் மூக்கு நெற்றி கன்னங்கள் வயிற்றை இழுத்து தைத்து அழகாக்குங்கள் என்றாள். அவள் இளமையும் அழகும் அவளையே ஆச்சரியப்பட வைத்தது.  சந்தோஷமாக வீட்டுக்குக் கிளம்பியவள், வழியில் விபத்து ஏற்பட்டு இறந்தாள். கடவுளிடம்...எனக்கு இன்னும் 30 ஆண்டுகள் ஆயுள் இருப்பதாக பொய் சொன்ன நீயும் கடவுளா?..என்று கேட்டாள்.  அவளை உற்றுப் பார்த்த கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னார்..அட நீயா? அடையாளம் தெரியவில்லையே..என்று சொல்லிக் கொண்டே மறைந்துவிட்டார்!

மகிழ்ச்சி

படம்
நம் உழைப்பும் நல்ல சொற்களும் நமக்கு மட்டுமன்றி அடுத்தவருக்கும் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும்! ****** நேற்று நடந்ததை நம்மால் மாற்ற முடியாது.. நாளை நடக்கப் போவதும் நமக்கு தெரியாது.. இன்றைய பொழுது நம் கைகளில் உள்ளது.. ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக வாழ்வோம்! அடுத்தவரையும் மகிழ்விப்போம்!

ஊரடங்கில் மீண்டும் நாம்!

படம்
லண்டனை சுற்றிப் பார்த்தோம்! ரயில் பயணங்கள் பற்றி ஒன்றா இரண்டா..ஏகப்பட்ட அனுபவங்கள்! படிக்கும்போது  விடுமுறை நாட்களை நினைக்கும்போதே ...அதுவும் கோடை விடுமுறைஎன்றாலே மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது? ஒவ்வொரு வருடமும் போவது ஒரே இடம்தான் என்றாலும் அலுத்ததில்லை! கும்பகோணத்திலிருந்த என் தாய் வழி தாத்தா வீட்டிற்குத்தான் நாங்கள் செல்வோம். நான் எழுதும் அனுபவம் 1960களில்..! என் பெரிமா, சித்தி குடும்பமும் அங்கு வந்துவிடுவார்கள். பெரிய மாமா குடந்தையில் வேலையில் இருந்தார். அவர் குழந்தைகள், நாங்கள்,என் பெரிமா, சித்தி குழந்தைகள் என்று ஒரு டஜனுக்கு மேல்! நாங்கள் சென்னையிலிருந்து ரயிலில் unreserved ல்தான்  செல்வோம்.துணிமணிகளுக்கு டிரங்க் பெட்டி...கூடவே தலைகாணி,போர்வை,ஜமக்காளத்துடன் ஒரு படுக்கை கட்டி விடுவார் அப்பா! இரவு ரயிலில்தான் பிரயாணம் ரிசர்வேஷனெல்லாம் கிடையாது. என் அப்பா வேகமாக ரயிலில் ஏறி சீட் பிடித்ததும்  என் அம்மா, அப்பா கீழ் இரண்டு சீட்களில் என்  சிறிய தம்பிகளுடன்  படுத்து விட, நானும் என் பெரிய தம்பியும் கீழே சீட்களுக்கு இடையில் ஜமக்காளம் விரித்து படுப்போம்! சீட்களுக்கு...

வயதும் வாழ்வும்

படம்
வாழ்க்கையென்பது தண்டவாளம்.. காலம் என்பது ரயில்வண்டி.. வயது என்பது கடந்து வந்த தூரங்கள்.. இறங்கும் வயதை அறியாத மானிடர்கள் நாம்..!

நான் பார்த்து வியந்த தேலதை..

படம்
ஒரு பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது அந்தக் காலத்தில் இருந்த நிலைமை. அது பொய்யில்லை என்பதை பல முதிய பெண்மணிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதையும் சமாளித்து வாழ்ந்த பெண்களும் அந்நாளில் அதிகமே. அந்த விதத்தில் தான் புக்ககத்தாரால் வஞ்சிக்கப்பட்டு இழந்த வாழ்க்கையை தானே முயற்சித்து தனியாக தைர்யமாக யார் உதவியுமின்றி தன்னை உயர்வாக்கிக் கொண்ட என் புக்ககத்து சித்திபாட்டியே என் கதாநாயகி! இன்று அவர் இல்லையெனினும் என் நேரே நின்று பேசுவது போல உணர்கிறேன். என் கணவரின் சித்திப் பாட்டி அதாவது என் மாமியாரின் சொந்த சித்தி. தர்மாம்பாள் என்ற அவரை தம்முப் பாட்டி என்றுதான் நாங்கள் அழைப்போம்.அந்த நாளையப் பெண்ணான அவரது தைர்யமும் சாமர்த்தியமும் என்னை வியக்க வைத்த விஷயங்கள்! அவர் சமையல் கலையில் வல்லவர். அவர் சிறு வயதில் கற்றுக் கொண்ட சமையல்தான் அவர் வாழ்க்கைக்கே ஆதாரமாக இருக்கப் போகிறது என்று அவர் நினைத்திருப்பாரா? குடந்தையில் நாங்கள் இருந்தபோது அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து ஜாங்கிரி, முறுக்கெல்லாம் செய்து தருவார்! விசேஷங்களுக்கு சமையல் செய்வதுடன், இனிப்பு கார வகைகளும் செய்து தருவார். பேசிக் கொண்டே படபடவென்று அவர...

ஊரடங்கில் மீண்டும் நாம்..

படம்
  என்னைக் கவர்ந்த உணவகங்கள்! சென்ற ஆண்டு நான் ஹைதராபாத் சென்றபோது அங்கு நான் கண்டு வியந்த விஷயம் ஊர் முழுதும் ஏகப்பட்ட ஹோட்டல்கள்! எங்கெங்கு நோக்கினும் ஹோட்டல்கள்!! விதவிதமாய் சாப்பாடு!! அத்தனை மாநில, வெளிநாட்டு சாப்பாடுகள் விதவிதமாய் வித்யாசமாய்க் கிடைக்கிறது. எந்த ஹோட்டல் போகலாம் என்று யோசிக்க வேண்டியுள்ளது! அச்சமயம் ஊரடங்கு இல்லாததால் நிறைய ஹோட்டல்களுக்கு சென்றோம்! இந்தமுறை பல ஹோட்டல்கள் இயங்கவில்லை. நான் சாப்பிட்டு ரசித்து மகிழ்ந்த சில வித்யாசமான ஹோட்டல்களை பகிர்ந்துள்ளேன்! நாங்கள் மெட்ரோ பில்லர் அருகிலுள்ள Gud Gudee (Tickling your taste buds என்று அர்த்தம்!) என்ற ஹோட்டலுக்கு சென்றோம்.   அன்று வேலன்டைன்ஸ் டே! அதற்காக ஸூப், starters, Main course எல்லாமே ஸ்பெஷலாம்! காஷ்மிரி நான், ப்ளூ ஷூ ஜுஸ், கமல் கலோட்டி ( தாமரை தண்டு கபாப்),வெஜ் டகாடக் என்று எல்லாமே இதுவரை எந்த ஹோட்டலிலும் சாப்பிடாத சுவையில் இருந்தது! ஹைதராபாதில் ஹோட்டல்களில் மயங்கிய நான் என் மகளுடன் தினம் ஒரு ஹோட்டல் சென்று சாப்பிட்டு மகிழ்ந்தேன்! நான் சென்று சாப்பிட்ட சில ஹோட்டல்கள்... 99 Dosa Hubல் 99 வகையான விதவி...

முத்து

படம்
உயிரெழுத்தில்'அ'எடுத்தேன்.. மெய்யெழுத்தில் 'ம்' எடுத்தேன்.. உயிர்மெய் எழுத்தில் 'மா' எடுத்தேன்! அழகு தமிழில் கோர்த்தெடுத்தேன்! அவளே என் 'அன்பு அம்மா' என்ற முத்துமாலை! ***** பெண்ணின் அன்பு சிப்பிக்குள் இருக்கும் முத்து போன்றது! அதை அழகாக பொறுமையாகத் திறக்க வேண்டும்! ***** உன் காதல் கவிதைகளில் இருப்பது எழுத்துக்கள் அல்ல.. உன் மனதால் பார்த்து அன்பால் எழுதிய முத்துக்கள்! ****** சிப்பியினுள் முத்து இருப்பதை‌ முதலில் கண்டு பிடித்தவர் வாஸ்கோடகாமா!   முத்தை கடவுளின் பரிசாக எண்ணியவர்கள் அரேபியர்கள்! கடலிலிருந்து நேரடியாகக் கிடைத்தவையே நல்முத்துக்கள்! முதல் செயற்கை முத்தை உருவாக்கியவர் வில்லியம் சாவில் கென்ட் (William Saville Kent) என்கிற ஆஸ்திரேலியர்!  இலக்கிய வர்ணனைகளில் புலவர்கள்  அதிகாலையில் இலைகளின் மீது படரும் பனித்துளிகளையும், பெண்களின் கண்களையும்  முத்துக்கள் என்று வர்ணிப்பர்.

5.சிறப்பு100வார்த்தைகதை..

படம்
5. மாலை 5 மணியளவில்.. ஐஸ்கிரீம்..பால் ஐஸ்கிரீம்! மாலை 5 மணியளவில்  ஐஸ்கிரீம் வண்டி வருகிறதா என்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வண்டி வந்ததும் எல்லோரும் கையில் காசுடன் வண்டியை நோக்கி ஓடுவோம்! அப்பொழு தெல்லாம் ஐஸ்கிரீம் பார்லர்கள், கடைகள் கிடையாது. வாசலில் மணி அடித்தவுடன் போய் அவரவர் விருப்பப்படி ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவோம். ஐந்து பைசாவுக்கு கலர் ஐஸ்கிரீம்,சிவப்பு பச்சை மஞ்சள் என்று உள்ளே சேமியா வைத்து இருக்கும். 10 பைசாவுக்கு பால் ஐஸ்கிரீம் வாங்குவோம். அது ரொம்ப ஒஸ்தியானது! அதன் ருசி இன்றும் மறக்கவில்லை!அந்த ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து சாப்பிடும் சுகம் இந்த நாளில் அருண் ஐஸ்கிரீம், ஐபாகோ கடைகளில் வாங்கும் ஐஸ்கிரீமில் இல்லை என்றே தோன்றும்!

4.சிறப்பு100வார்த்தைகதை..

படம்
  4.மின்வெட்டு திகில் நேரம்.. நாங்கள் மும்பையில் 12மாடிக் கட்டடத்தில் பத்தாம்மாடியில் குடியிருந்தோம். நானும் என்கணவரும் என்மகள் வீட்டிற்கு பீகார் சென்றிருந்தோம். என் 80வயதான மாமியார் பக்கத்திலிருந்த நண்பர்கள் வீட்டுக்கு சென்றிருக்கிறார். வீட்டில் என்மகன் மருமகள் இருந்தார்கள். அப்பொழுது கோடைகாலம். அடிக்கடி மின்சாரம் நின்றுவிடும். திரும்பியவர் லிஃப்டில் ஏறியிருக்கிறார். சிலமாடி ஏறியதும் மின்வெட்டினால் மின்சாரம் நின்றுவிட்டது. அது ஆட்டோமேட்டிக்லிஃப்ட். வந்துவிடும் என்றுநினைத்திருக்கிறார். பயத்தில் லிஃட்கதவைத் தட்டியும் கத்தியும் யாரும் அந்தசமயத்தில் இல்லாததால் யாருக்கும் தெரியவில்லை.அலாரமும் அடிக்கவில்லை. பத்துநிமிடத்தில் மயக்கமாகி துவண்டு விழுந்துவிட்டார். என் மகனுக்கு, பாட்டி இன்னும் வரவில்லையே என்ற நினைவுவந்து பார்க்க லிஃப்ட் ஏழாம்மாடியில் மாட்டிக்கொண்டு உள்ளிருந்து ஏதோ முனகல் கேட்டிருக்கிறது. பயந்துபோய் வாட்ச்மேனைக் கூப்பிட்டு லிஃப்டைத் திறக்க என்மாமியார் மயக்கமாக இருந்திருக்கிறார். உடன் மெதுவாக மேலேஅழைத்துச் சென்று குடிக்கக் கொடுத்து படுக்க வைத்தபின் சரியானாராம். இதை எங்களிட...