அம்மா கிடைச்சாச்சு!(100வார்த்தை கதை)
அமுதா ஹரிணியை அள்ளியணைத்து முத்தமிட்டாள். அவள் உடல் சிலிர்த்தது. சுதாகர் அழைத்ததும் குழந்தையை
விடமனமின்றி வந்தாள்.
...எந்தக்குழந்தை என்று முடிவு செய்தாயா? ?...
...எனக்கு ஹரிணியைத்தான் பிடிச்சிருக்கு...
ஐந்து வயதாகும் அவர்கள் மகன் சுதிருக்கு தனக்கு உடன்பிறந்தவர் இல்லையே என்ற ஏக்கம் உண்டு.
அமுதாவுக்கு இன்னொரு குழந்தை பெற்றுக்
கொள்வதைவிட ஒரு அநாதைக்குழந்தையை எடுத்து வளர்க்கும் ஆசையை சுதாகரிடம்சொல்ல, அதற்காகத்தான் இங்கு வந்தார்கள்.
பாலவிகாஸ்...தாய்தந்தை இல்லாத குழந்தைகளைப் பராமரித்து தத்து கொடுக்கும் ஆசிரமம். அங்கு வாசலில் ஒருதொட்டில்உண்டு. பிஞ்சுக்குழந்தைகள் அவ்வப்போது அந்தத்தொட்டிலில் அழுது கொண்டிருக்கும். அதுபோல் வந்த ஹரிணிக்கு எட்டு மாதங்களாகிறது.
தத்து கொடுப்பதற்கான முறைகளை முடித்து ஒரு நல்லநாளில் வந்து ஹரிணியைத்தூக்கி முத்தமிட்டதுடன், சுதிரிடம்...இவள்தான் உன் தங்கை...என்று காட்டிய சுதாகர், குழந்தையை அமுதாவிடம் கொடுக்க, உடல் சிலிர்க்க ஹரிணியை அள்ளியெடுத்து முத்தமிட்டாள்...எனக்கு ஒரு அம்மா கிடைச்சாச்சு...
என்பதுபோல் கன்னம்குழிய அழகாகச் சிரித்தாள் ஹரிணி!
கருத்துகள்
கருத்துரையிடுக