சுற்றுலா
சுற்றுலா செல்வோம்..அது மகிழ்ச்சியானது!
மனதில் என்றும் நின்றிடும்..அது
மறவாதது!
அதில் கிட்டும் அனுபவம்..அது
சுவையானது!
சுற்றதோடு சென்றால்..அது
சுகமானது!
நண்பர்களோடு சென்றால்..
அது உல்லாசமானது!
தேனிலவுக்கு செல்லும் சுற்றுலா..அது காதல் மயமானது!
ஆலய தரிசன சுற்றுலா..அது
தெய்வீகமானது!
சாகச சுற்றுலா..அது
துணிச்சலானது!
எந்த இடத்தையும் கவலையின்றி சுற்றி உலா வருவது நமக்கு புத்துணர்வு தருவது!
கொரோனா காணாமல் போகட்டும்!
அடுத்த ஆண்டில் நாமும் இந்த அகில இந்திய சுற்றுலா நாளில் செல்வோம் சுற்றுலா!!
******
முறையான திட்டங்களோடு
நிறைவான நட்புக்களோடு
மொழி அறிந்த வழிகாட்டிகளோடு
சென்றிடும் சுற்றுலா சிறப்பு!
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை அனைவருக்கும்
உணர்த்திடும் சுற்றுலா !
கருத்துகள்
கருத்துரையிடுக