4.சிறப்பு100வார்த்தைகதை..

 


4.மின்வெட்டு
திகில் நேரம்..

நாங்கள் மும்பையில் 12மாடிக் கட்டடத்தில் பத்தாம்மாடியில் குடியிருந்தோம். நானும் என்கணவரும் என்மகள் வீட்டிற்கு பீகார் சென்றிருந்தோம். என் 80வயதான மாமியார் பக்கத்திலிருந்த நண்பர்கள் வீட்டுக்கு சென்றிருக்கிறார். வீட்டில் என்மகன் மருமகள் இருந்தார்கள். அப்பொழுது கோடைகாலம். அடிக்கடி மின்சாரம் நின்றுவிடும். திரும்பியவர் லிஃப்டில் ஏறியிருக்கிறார். சிலமாடி ஏறியதும் மின்வெட்டினால் மின்சாரம் நின்றுவிட்டது. அது ஆட்டோமேட்டிக்லிஃப்ட். வந்துவிடும் என்றுநினைத்திருக்கிறார். பயத்தில் லிஃட்கதவைத் தட்டியும் கத்தியும் யாரும் அந்தசமயத்தில் இல்லாததால் யாருக்கும் தெரியவில்லை.அலாரமும் அடிக்கவில்லை. பத்துநிமிடத்தில் மயக்கமாகி துவண்டு விழுந்துவிட்டார். என் மகனுக்கு, பாட்டி இன்னும் வரவில்லையே என்ற நினைவுவந்து பார்க்க லிஃப்ட் ஏழாம்மாடியில் மாட்டிக்கொண்டு உள்ளிருந்து ஏதோ முனகல் கேட்டிருக்கிறது.

பயந்துபோய் வாட்ச்மேனைக் கூப்பிட்டு லிஃப்டைத் திறக்க என்மாமியார் மயக்கமாக இருந்திருக்கிறார். உடன் மெதுவாக மேலேஅழைத்துச் சென்று குடிக்கக்
கொடுத்து படுக்க வைத்தபின் சரியானாராம். இதை எங்களிடம் மகன் சொன்னபோது பயந்து விட்டோம். மின்வெட்டு என்றால் இந்த
சம்பவம் இன்றும் நினைவுவரும்.

கருத்துகள்