தென்றல
வசந்த கால வண்ண மலர்கள்
அழகாகப் பூத்திருந்த பூங்காவில் வந்ததே தென்றல்!
எதைத் தொடுவது எதை முகர்வது எதை அசைப்பது என்று திகைத்து யோசித்தது!!
அனைத்தின் அருகிலும் சென்று நலம் விசாரித்தது!
மொட்டு மலர்கள் பெரிதாய் பூத்து மகிழ்ச்சியில் அழகாய் தலையசைத்தது!
********
சில்லென்று தேகத்தைத் தீண்டி உள்ளத்தை வருடிச் செல்லும் தென்றல்!
புல்லின்மேல் பனித்துளியை உரசி புத்துணர்வு பெற்று மகிழும் தென்றல
தலை குனிந்து நிற்கும் நெற்கதிரை
தட்டி எழுப்பிமகிழும் தென்றல்!
எல்லா இடமும் சென்று இதமாய் மோதி இன்பம் தந்து இளைப்பாறும் தென்றல்!
வேலை செய்பவரின் உடற்களைப்பு நீக்கி உற்சாகம் தரும் தென்றல்!
மாலையிலே மிதந்து வந்து
மனம் தொட்டு மயக்கி காதலைக் கூட்டும் மோகத் தென்றல்!
சாதிமதம் கடந்து தேகங்களை வருடி இதயங்களைத் திருடும்
இயற்கையின் செல்லக்
குழந்தை இந்தத் தென்றல்!
கருத்துகள்
கருத்துரையிடுக