வாரஇறுதிஎழுத்துதிருவிழா

 

அனைவரும் தூங்குவதற்காக காத்துக் கொண்டிருந்த சுதா, அவர்கள் தூங்கிய பின் சத்தமே எழுப்பாமல் மெதுவாக நடந்து சென்றாள்.

(வாரஇறுதிஎழுத்துதிருவிழா)
எனக்கு குழந்தை வேணும்..

ராகவனுக்கு சுதா எங்கு செல்கிறாள் என்பதைப் பார்க்கவே தூங்காமல் விழித்திருந்தான். அவள் கதவை மூடி விட்டு சத்தம் போடாமல் மாலாவின் அறைக்கு சென்றாள். அவள் குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்
தது. மாலா அசதியில் தூங்கு
கிறாள் போலும்.

சுதா உள்ளே சென்று குழந்தையைத் தூக்கியவுடன் அழுகை நின்று விட்டது. அங்கு போய் இவள் என்ன செய்கிறாள் என்று புரியாத ராகவன் மறுநாள் சுதாவைக் கேட்க வேண்டும் என்று நினைத்த படி சத்தமின்றி உள்ளே போய்ப் படுத்தான். ஆனால் தூக்கம் வரவில்லை.

ராகவனுக்கு லலிதாவுடன் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. டாக்டரிடம் போக அவன் அம்மா அனுமதிக்க
வில்லை. ஆனால் சுதாவை மட்டும் அவ்வப்போது சொல்லிக் காட்டுவார்.
...எங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆன அடுத்த வருடம் குழந்தை..என்று. மாலாவுக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் குழந்தை பிறந்து விட்டது. அவனிடம் சுதா டாக்டரைப் பார்க்கலாம் என்ற போதும் அவன் முயற்சி எடுக்க வில்லை. அம்மாவிடம் பயமா? பிறக்குமென்ற நம்பிக்கையா? தெரியவில்லை.

கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கு பிறகு சத்தமில்லாமல் சுதா உள்ளே வந்து படுத்தாள். தூக்கம் வராத ராகவன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான்.

...மாலா அறையில் போய் இத்தனை நேரம் என்ன செய்தாய்? இரண்டு மூன்று நாளாகப் பார்க்கிறேன் நீ எழுந்து போவதை. இன்று கேட்க வேண்டும் என்றுதான் விழித்திருக்கிறேன்...

...நீங்க கவனிச்சுட்டீங்களா? மாலா பாவம் பச்சை உடம்பு. குட்டி தினமும் பத்து மணிக்கு முழிச்சா ஒண்ணரை மணி நேரம் தூங்கறதில்ல. சுதாவுக்கு கண் முழிச்சு அவனோட விளையாட முடியுமா?...

...அதுக்கு நீ என்ன பண்ற?...

...நாலு நாள் முந்தி பார்த்தேன். ஒரே அழுகை. வெளியில வந்து குழந்தையை வெச்சு நடந்துட்டிருந்தா. நான்தான் வெளிய வந்து பார்த்து 'நான் வெச்சுக்கவா'னு கேட்டேன். 'என்னால நிக்க முடியல. தினமும் இப்படிதான் அழறான். அம்மாவைக் கூப்பிட்டா, பாலைக் கொடுத்து தூங்க வைங்கறாங்க. ஒருமணி நேரம் விளையாடிட்டு தூங்கிடுவான். என்னால முடியல'னு சொன்னா. எனக்குதான் அந்த கொடுப்பினை இல்லையே. அதனால அன்னியிலிருந்து நான் தினமும் குட்டியோட விளையாடிட்டு தூங்கினப்
பறமா வந்துடுவேன்...

ஏக்கத்துடன் அவள் சொன்னதைக் கேட்ட ராகவனுக்கு பாவமாக இருந்தது. இவள் ஒரு குழந்தைக்கு இப்படி ஏங்குகிறாளே என்ற வருத்தமும் ஏற்பட்டது.

...என்கிட்ட சொல்லிட்டு போகலாமே? நான் நீ எங்க போறியோன்னு பயந்துட்டேன்...

...இந்த விஷயம் உங்கம்மாவுக்கு தெரிஞ்சா கோச்சுப்பாங்க. குழந்தையை நான் தொட்டாலே  'உனக்கு தூக்க தெரியாது. தூங்கப் பண்ணத் தெரியாது' னு ஏதாவது சொல்றாங்க. எனக்கு குழந்தை இல்லனு அப்பப்ப சொல்லிக் காண்பிக்க
றாங்க...சொல்லும்போதே விசும்பி அழுதாள்.

...மாலா எதுவும் சொல்லலியே?...

...மாலாட்டயும் கேட்டேன். உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்கனு. அதுக்கு சுதா 'நான் சொல்ல மாட்டேன். நீங்களும் சொல்லாதீங்க'னு
சொன்னா.கூடவே இன்னொண்ணும் சொன்னா...

...என்ன சொன்னா?...

...அவளுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கிட்ட காட்டி குழந்தை பிறக்க ட்ரீட்மெண்ட் எடுத்துக்க சொன்னா. ஆனா நீங்கதான் நான் எவ்வளவு சொல்லியும் கேக்க மாட்டேங்கறீங்க...
சுதாவுக்கு கண்கள்
கலங்கியது.

...சரி. போகலாம். படுத்து தூங்கு...

மறுநாள் கண்டிப்பாக டாக்டரைப் பார்க்க போக வேண்டும் என்று முடிவு செய்தான் ராகவன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)