அனுபவம்

 வாழ்வில் எத்தனை எத்தனை அனுபவங்கள்..
நல்லதும் உண்டு..தீயதும் உண்டு!
ஒன்று கற்றுக் கொடுக்கும்..
இன்னொரு அனுபவம் நம்மை இனிமைஆகப் பேசவைக்கும்!
ஒரு அனுபவம் வாழும் வழியை சொல்லித் தரும்!
இன்னொன்று மாற்றங்களை
எதிர் கொள்ளும் துணிவைத் தரும்!
ஒரு அனுபவம் மனித மனங்களின் மாற்றங்களை
அறிய வைக்கும்!
இன்னொரு அனுபவத்தால் வாழ்க்கைப் பிரச்னைகளின் சிக்கலைத் தீர்க்கலாம்!
அனுபவங்கள் அதிகமானால்
நம் வாழ்வும் மேலானதாக சிறப்பாக இனிமையாக இருக்கும்!
******

வாழ்வது ஒரு முறைதான்..
நம் வாழ்க்கையே
அனுபவம் தான் !

கோபதாபம் வேண்டாம்..
வஞ்சமும் வன்மமும் வேண்டாம்..

இயற்கையின் தன்மையை ஏற்போம்..
இறைவன் விட்ட வழிப்படி நடப்போம்..

கருத்துகள்