குறும்பு

 


சின்னக் குழந்தை அறியாமல் செய்யும் குறும்பு!
வளர்ந்த பிள்ளைகள் சுட்டித் தனமாய் செய்வதும் குறும்பு!
நண்பர்கள் இணைந்து சிரிக்க சிரிக்க பேசுவதும் குறும்பு!
'ஏன் அப்படி கண்ணெடுக்
காமல் என்னைப் பார்க்கிறாய்'
என்பது காதலர் குறும்பு!
நீ அறுபது வயதிலும் அழகுதான்' என்பது முதிய வயதுக் குறும்பு!

குழந்தை செய்யும் குறும்பைக் கண்டு கோபமான அன்னை
குழந்தையின் குறுநகையில்
தானும் இணைந்து புன்னகைத்தாள்!
கட்டியணைத்து முத்தமிட்டு கண்ணே மணியே எனக் கொஞ்சினாள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)