5.சிறப்பு100வார்த்தைகதை..
5. மாலை 5 மணியளவில்..
ஐஸ்கிரீம்..பால் ஐஸ்கிரீம்!
மாலை 5 மணியளவில் ஐஸ்கிரீம் வண்டி வருகிறதா என்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வண்டி வந்ததும் எல்லோரும் கையில் காசுடன் வண்டியை நோக்கி ஓடுவோம்! அப்பொழு
தெல்லாம் ஐஸ்கிரீம் பார்லர்கள், கடைகள் கிடையாது. வாசலில் மணி அடித்தவுடன் போய் அவரவர் விருப்பப்படி ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவோம். ஐந்து பைசாவுக்கு கலர் ஐஸ்கிரீம்,சிவப்பு பச்சை மஞ்சள் என்று உள்ளே சேமியா வைத்து இருக்கும். 10 பைசாவுக்கு பால் ஐஸ்கிரீம் வாங்குவோம். அது ரொம்ப ஒஸ்தியானது! அதன் ருசி இன்றும் மறக்கவில்லை!அந்த ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து சாப்பிடும் சுகம் இந்த நாளில் அருண் ஐஸ்கிரீம், ஐபாகோ கடைகளில் வாங்கும் ஐஸ்கிரீமில் இல்லை என்றே தோன்றும்!
கருத்துகள்
கருத்துரையிடுக