ஊரடங்கில் மீண்டும் நாம்..
என்னைக் கவர்ந்த உணவகங்கள்!
சென்ற ஆண்டு நான் ஹைதராபாத் சென்றபோது அங்கு நான் கண்டு வியந்த விஷயம் ஊர் முழுதும் ஏகப்பட்ட ஹோட்டல்கள்! எங்கெங்கு நோக்கினும் ஹோட்டல்கள்!! விதவிதமாய் சாப்பாடு!! அத்தனை மாநில, வெளிநாட்டு சாப்பாடுகள் விதவிதமாய் வித்யாசமாய்க் கிடைக்கிறது. எந்த ஹோட்டல் போகலாம் என்று யோசிக்க வேண்டியுள்ளது! அச்சமயம் ஊரடங்கு இல்லாததால் நிறைய ஹோட்டல்களுக்கு சென்றோம்!
இந்தமுறை பல ஹோட்டல்கள் இயங்கவில்லை. நான் சாப்பிட்டு ரசித்து மகிழ்ந்த சில வித்யாசமான ஹோட்டல்களை பகிர்ந்துள்ளேன்!
நாங்கள் மெட்ரோ பில்லர் அருகிலுள்ள Gud Gudee (Tickling your taste buds என்று அர்த்தம்!) என்ற ஹோட்டலுக்கு சென்றோம். அன்று வேலன்டைன்ஸ் டே! அதற்காக ஸூப், starters, Main course எல்லாமே ஸ்பெஷலாம்! காஷ்மிரி நான், ப்ளூ ஷூ ஜுஸ், கமல் கலோட்டி
( தாமரை தண்டு கபாப்),வெஜ் டகாடக் என்று எல்லாமே இதுவரை எந்த ஹோட்டலிலும் சாப்பிடாத சுவையில் இருந்தது!
99 Dosa Hubல் 99 வகையான விதவிதமான சுவையான தோசைகள்..எதை சாப்பிடுவது எதை விடுவது என்று ஒரே குழப்பம்!Variety panipuri..ஐயப்பா ஸொசைட்டியிலுள்ள இந்தக் கடையில் 7 வித பானிபூரி..ஒவ்வொன்றிலும் வித்யாசமாக..இஞ்சி..பூண்டு..புதினா..எலுமிச்சை..நார்மல் என்று விதவிதமான பானிகளுடன் குட்டி பூரிகள் சுவையோ சுவை! அழகான பானைகளில் ருசியான பானியுடன் பூரி சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்!!தந்தூரி மட்கா சாய்..டீயை சுடவைத்து மண்குவளைகளில் விட்டு அடுக்கி தந்தூரி அடுப்பில் வைத்து சுட வைத்து குடிப்பது...புதிய விதமாக இருந்ததுடன் அருமையான சுவை!சட்னிஸ்...மாதாபூரிலுள்ள இந்த ஹோட்டலில் சட்னிகள் கிட்டத்தட்ட 20 தினுசுகளில்..பல வண்ணங்களில்! ஒவ்வொன்றும் தனித்தனி சுவை!
Cloud Dine...இது ஒரு வித்யாசமான அனுபவம் தரும் ஹோட்டல். ஹைதராபாதில் ஹைடெக் சிட்டியில் ஜெர்மன் டெக்னாலஜியில் உருவாக்கப்
பட்ட முதல் Cloud Dine ஹோட்டல். 26 இருக்கைகள் மட்டுமே! 160அடி உயரத்தில், பெல்ட்டுகள் இணைத்த நாற்காலியில் க்ரேன் மூலம் மேலே அழைத்து செல்லப் பட்டு, வெட்ட வெளியில் ஜில்லென்ற காற்றில் உயர்ந்து நிற்கும் பக்கத்து கட்டிடங்களையும் அருகிலுள்ள ஃப்ளை ஓவர்களையும் நோட்டமிட்டபடி சாப்பிடலாம். ஒரு சாப்பாட்டின் விலை..அதிகமில்லை..
5000 ரூபாய்தான்!! (இந்த முறை போகவில்லை. அடுத்த முறை ட்ரை பண்ண ஆசை!)
Platform 65..Train Restaurant குக்கட் பள்ளி என்ற இடத்திலுள்ள இந்த ஹோட்டலில் இடையிலுள்ள தண்டவாளங்களில் வரும் toy trainல் உணவு கொண்டு வரப்பட்டு பரிமாறப் படுகிறது!உணவை ருசிப்பதோடு குட்டி ரயிலையும் ரசிக்கலாம்! குழந்தைகளை ஈர்க்கும் ஹோட்டல் இது!
ஹைதராபாத் சென்றுவிட்டு சார்மினாரை பார்க்காமல் வருவார்களா? சார்மினாருக்கு விடிகாலையில் சென்று கராச்சி பிஸ்கட்டுடன் சூடாக டீ சாப்பிடும் வழக்கம் பலருக்கு உண்டாம்! நானும் போனேன்..காலை இல்லை..மாலை 4 மணிக்கு! கராச்சி பிஸ்கெட்டில்தான் எத்தனை தினுசுகள்! தின்னத் தின்ன திகட்டவில்லை! பிஸ்கெட் சாப்பிட்டு டீ குடித்து அதை ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்!!
இதுபோல் விதவிதமாய் ஹோட்டல்கள்! வித்யாசமான ருசியில் உணவு! இங்குள்ளோர் வாழ்க்கையை ரசித்து மட்டுமல்ல..ருசித்தும் வாழ்கிறார்கள்!!
#ராதாபாலுD
கருத்துகள்
கருத்துரையிடுக