சேவைசெவிலியர்க்கு நன்றி🙏🏼

அன்பு அர்ப்பணிப்பு ஆதரவு இரக்கம் ஈரம் பொறுமைசகிப்புத்தன்மை அயராத உழைப்பு காலம் தவறாமை இரவு பகல் பாராத உழைப்பு..உறக்கமின்றி சேவை செய்யும் உன்னத மனித தெய்வங்கள்!


தொற்று வியாதியோ..உயிர்க் கொல்லிவியாதியோ..அருகில் சென்று அணைத்து ஆதரவு தந்து அருவருப்பின்றிசேவை செய்யும்வெள்ளைப் புறாக்கள்..


தம்மையும் தம் குடும்பத்தையும் பற்றிக் கவலைப்படாது போர்க்கால அடிப்படையில் உயிர் காக்கப் போராடும் வெள்ளை சீருடை தாயுள்ளங்களே! 


மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவையாக எண்ணி..உண்மை தூய்மை தன்னலமின்மை என்ற அணிகலன்களுடன் அயராது உழைக்கும் செவிலியர்களின் ஈடிணையற்ற சேவைக்கு உலகில் எதுவும் நிகரில்லை!


கருத்துகள்