எங்கள் கருத்து..உங்கள் எழுத்து.. அசோகா ஹல்வா ஹல்வா ஒரு ருசியான நாவூற வைக்கும் இனிப்பு. சாப்பிட சாப்பிட இன்னும் வேண்டும் என எண்ண வைக்கும் அற்புத சுவை கொண்ட இனிப்பு! தஞ்சை மாவட்டத்தின் ஸ்பெஷல் அசோகா ஹல்வா! இது தஞ்சையிலுள்ள திருவையாறில் செய்யப்படும் பிரபலமான இனிப்பு. இதற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது தெரியுமா? அதுவும் ஒரு ஒரு ருசியான கதை. ஹல்வா என்றாலே கோதுமையில் செய்வது என்பது நாம் அறிந்ததே. ஆனால் அசோகா ஹல்வா பயத்தம் பருப்பில் செய்யப் படுகிறது. இரண்டாம் உலகப் போரின் சமயம் நம் நாட்டில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் சுவையான ஹல்வா செய்ய முடியவில்லை. ஆனால் மக்களுக்கோ ஹல்வா மோகம் குறையவில்லை! ஹல்வாவை எப்படியாவது செய்து ருசிக்க வேண்டும் என்ற ஆவலில் ராமு ஐயர் என்பவர் கோதுமைக்கு பதிலாக பயத்தம் பருப்பை சேர்த்து அல்வா செய்தார். அதன் ருசியில் மயங்கிய மக்கள் அதற்கு பெரும் ஆதரவு தர ஹல்வா வியாபாரம் தொடங்கப்பட்டு அமோகமாக விற்பனை ஆயிற்று. திருநெல்வேலியின் இருட்டுக்கடை ஹல்வா போல் திருவையாறு ஆண்டவர் கடை ஹல்வா மிக பிரசித்தம்! அசோகா ஹல்வா தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் மிக பிரபலமான, ருசியான...
நிதியுதவி..(தந்தைமனம்) குமாரின் அப்பா ஒருபெரிய கம்பெனியில் உயர்பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர். அவரைப்பாராட்டிய கம்பெனி அவரதுமகனுக்கு வேலைதருவதாக சொல்லியும் தன்மகன் அவன்முயற்சிலேயே வேலைதேடிக் கொள்ளவேண்டும் என்றுகூறி மறுத்துவிட்டார். குமார் பலஇடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. தினமும் காலைசாப்பிட்டு செல்பவன் இரவுதான் வீடுவருவான். ..உன் பிள்ளை ஊரை சுற்றுவதைவிட்டு கொரோனாவை வாங்கிவரப் போகிறான்பார்..என்பார் மனைவியிடம். அன்று மாலை இரண்டு இளைஞர்கள் கையில் ஏதோ நோட்டுடன்வர, அவர்கள் ஒரு நோட்டீஸ் கொடுத்து கொரோனாவில் கஷ்டப்படும் ஏழை எளியவர்களுக்கு தாம் உதவுவதாகவும் முடிந்த தொகையைத் தரும்படியும் கேட்க, அதில் தலைவர்என்ற இடத்தில் குமாரின் பெயரைக்கண்டு ஒருகணம் திகைத்து அவர்களிடம் விபரம் கேட்டார். அவர்கள்...இவர்தான் எங்களின் இந்தசேவைக்கு காரணம். இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்திருக்கிறோம். உங்களால் முடிந்தது கொடுங்கள்..என்றனர். பிள்ளையின் நல்லெண்ணத்தை அறிந்து அவனைத்தவறாக எண்ணியதற்கு மன்னிப்பாக ஒருலட்சம்ரூபாய் கொடுத்தார்.இரவு மகனைப் பாராட்...
சென்னையின் நினைவுகள் சொல்லி மாளாது! 1965ல் இந்திய பாகிஸ்தான் போர் நடந்தபோது 'சங்கு ஊதும் போதெல்லாம் வெளியில் யாரும் வரக்கூடாது. தெருவில் அப்படியே படுத்து விட வேண்டும்' என்ற அறிவிப்பு ரேடியோவில் கேட்கும்போது வெளியில் போகவே பயமாக இருக்கும். வெளியூர் சொந்தங்களின் வீட்டுக்கெல்லாம் போனால் 'நீ மெட்ராஸ்காரியாச்சே' என்பார்கள்! நாங்கள் கோடம்பாக்கம் அருகில் இருந்ததால் 'சிவாஜி, M.G.R., பத்மினி, K.R.விஜயாவை யெல்லாம் பார்த்திருக்கியா' என்று விழி விரியக் கேட்பார்கள், நாங்கள் ஏதோ ஸ்டூடியோவிலேயே குடியிருப்பது போலவும், அவர்கள் எங்கள் வீட்டு வழியே தினமும் நடந்து செல்வது போலவும்!! சென்னையை சுற்றிப் பார்க்கவென்றே அடிக்கடி உறவினர்கள் வருவார்கள்! LIC கட்டிடம் அந்நாளைய கண்காட்சித் தலம்! அதைக் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து ஆச்சரியப் பட்டதுண்டு!இன்று அதைவிட உயரமான அடுக்கு மாடிக் கட்டிடங்களில் குடியிருக்கிறோம்! ஒருமுறை விஜய வாஹினி ஸ்டூடியோவில் ஷூட்டிங் பார்த்ததுண்டு. ஒரே காட்சியை பல தடவை திரும்பத் திரும்ப நடித்ததைப் பார்த்து 'ஐயோபாவம் நடிகர்கள்' என்ற எண்ணம்தான் தோன்றியது!...
கருத்துகள்
கருத்துரையிடுக