சிரிப்போ சிரிப்பு
முப்பத்தைந்து வயது பெண் ஒருத்தி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டாள். அவள் நினைவு தப்பிய நேரம் கடவுளைக் கண்டு..நான் பிழைப்பேனா?..என்றாள். கடவுள்..உனக்கு ஆயுள் இன்னும் 30 ஆண்டுகள் உண்டு என்றார்.
அறுவை சிகிச்சை முடிந்து நினைவு வந்ததும், காஸ்மெடிக் சர்ஜனை அழைத்தாள். தன் மூக்கு நெற்றி கன்னங்கள் வயிற்றை இழுத்து தைத்து அழகாக்குங்கள் என்றாள். அவள் இளமையும் அழகும் அவளையே ஆச்சரியப்பட வைத்தது.
சந்தோஷமாக வீட்டுக்குக் கிளம்பியவள், வழியில் விபத்து ஏற்பட்டு இறந்தாள். கடவுளிடம்...எனக்கு இன்னும் 30 ஆண்டுகள் ஆயுள் இருப்பதாக பொய் சொன்ன நீயும் கடவுளா?..என்று கேட்டாள்.
அவளை உற்றுப் பார்த்த கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னார்..அட நீயா? அடையாளம் தெரியவில்லையே..என்று சொல்லிக் கொண்டே மறைந்துவிட்டார்!
கருத்துகள்
கருத்துரையிடுக